.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 18, 2014

ஹாலிவுட் படங்களுடன் போட்டிப்போடும் 'வீரம்'..!



அஜீத், தமன்னா, சந்தானம், நாசர் மற்றும் பலர் நடித்த ‘வீரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 10ம் தேதி வெளியாகி தொடர்ந்து ‘ஹவுஸ் ஃபுல்’ காட்சிகளாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியா தவிர, யு.எஸ்.ஏ, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் இப்படம் வெளியாகியது.

ஆந்திராவில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் ‘வீரம்’ திரைப்படம் ‘ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிஸ்’-ல் வெளியான முதல் வாரத்தில் 20 படங்களில் ஒன்றாக இடம் பிடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

76,320 டாலர்களை வசூலித்துள்ள இப்படம் ஹாலிவுட் திரைப்படங்களுடன் போட்டி போட்டு 16வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு தமிழ்ப் படம் ஆஸ்திரேலிய நாட்டின் ‘பாக்ஸ் ஆபிஸ் – டாப் 20’ல் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



ஆஹா கல்யாணம் ஆடியோ வெளியீடு



நான் ஈ திரைப்படத்தின் மூலம் தமிழில் நன்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துவரும் ஆஹா கல்யாணம்
திரைப்படத்தின் இசை வருகிற ஜனவரி 21ல் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா இப்படத்தினை தயாரித்துவருகிறார். அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கிவரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டுவருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மனீஷ் ஷர்மா இயக்கத்தில் வெளியாகி வெற்றிவாகை சூடிய ஹிந்திப் படமான பாந்த் பஜா பாரத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் முதல் படம்பிடிக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற பிப்ரவரி 7ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 20ல் இப்படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தரண்குமார் போடா போடி, விரட்டு, தகராறு, இங்க என்ன சொல்லுது முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகிறதா வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்..?



அறை எண் 305ல் கடவுள் மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களுக்குப் பிறகு சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துவரும் திரைப்படம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

கடந்த 2010ல் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும்வெற்றியடைந்த மர்யாத ராமண்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்ப்படத்தினை பி.வி.பி.சினிமாவுடன் இணைந்து  தயாரித்துவருகிறார். இப்படத்தினை நகைச்சுவை நடிகரும், முத்திரைதிரைப்படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத் இயக்கிவருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. மும்பை மாடலான ஆஷ்னா சவேரி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

புதுமுக இயக்குனர்களின் மிக முக்கியப் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் இப்படம் வருகிற தமிழ்ப் புத்தாண்டு ரிலீசாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, January 17, 2014

வீரம் படத்தை மறுபடியும் பார்க்கணும் - சிம்பு



தல அஜித் நடித்து கடந்த ஜனவரி 10ல் வெளியாகியிருக்கும் வீரம் திரைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் வசூலையும் அள்ளிவருகிறது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அஜித்தின் வீரம் படத்தினை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்த சிம்பு கடந்த ஆண்டின் இறுதியில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கும் படம் மற்றும் வாலு போன்ற பல படங்களில் நடித்துவரும் சிம்பு, செவன் அப் விளம்பர மாடலாகவும் நடித்துவருகிறார். இதனால் மிகவும் பிசியான ஷெட்யூலில் இருந்ததால் அஜித்தின் வீரம் திரைப்படத்தினை வெளியாகி ஆறு நாட்களுக்குப் பிறகே பார்த்திருக்கிறார்.

வீரம் திரைப்படத்தினை பார்த்ததும் சிம்பு தான் வீரம் திரைப்படத்தினை வெகுவாக ரசித்ததாகவும், அஜித்தின் பிரபலத்தை நன்றாகப் புரிந்து கொண்டு
அதற்கேற்றாற்போல் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா என்றும் பாராட்டியுள்ளார். மீண்டும் இப்படத்தினைப் பார்க்க
விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
back to top