பஞ்சாப்பில் இந்தி படங்களின் பாடல்கள் படமாக்கப்படும் இடத்தில் 'மான் கராத்தே' படத்தின் பாடல்களை படமாக்கி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மான் கராத்தே'. ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுத, திருக்குமரன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில், காதலர் தினத்தன்று படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில், இரண்டு பாடல்களை பஞ்சாப்பில் பிருந்தா நடன அமைப்பில் படமாக்கி வருகிறார்கள்.
ஷாருக்கான், கஜோல் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Dilwale Dulhaniya Le Jayenge' படத்தின் பாடல்கள் படமாக்கப்பட்ட இடத்தில் இப்படத்தின் பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது, கோதுமை வயல் பரப்பில் இப்படத்தின் பாடல்களை எடுத்து வருகிறார்கள். இப்பாடலில் ஹன்சிகா லுங்கி கட்டிக்கொண்டு நடனமாடுவது போன்று காட்சிபடுத்தி வருகிறார்களாம்.
இரண்டு பாடல்கள் முடிந்து விட்டால், மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும். ஏப்ரல் 11ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.