திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
"விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தின் இயக்குநர் கெüதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்தை ஜெயராமன் என்பவர் தயாரித்திருந்தார். இதை ஹிந்தி மொழியில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெயராமனுக்கும் கெüதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.
இப்படத்தின் லாபத்தில் 25 சதவீத பங்கு ஜெயராமனுக்கு தரப்படவேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தனக்குரிய பங்கை கெüதம் மேனன் தரவில்லை என்று போலீஸில் ஜெயராமன் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இந்த புகாரின் பேரில் கெüதம் மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கெüதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர்கள் 5 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
0 comments:
Post a Comment