சும்மா இருப்பதே சுகம் … அதிலும் நான் மற்றும் என்னை போன்ற சில விவரம் தெரிந்த சினிமா மனிதர்கள் யாரையும் பகைத்துகொள்ள வேண்டாம் என நினைக்கும் சில பத்திரிகை நண்பர்களும் சும்மா இருப்பதே சுகம் … யாருக்கு என கேட்கிறீர்களா … யாருக்கோ .. யார் யாருக்கோ… விதி நான் இன்று சும்மா இருப்பதாக இல்லை
1. ஜில்லா திரைப்படம் யார் யாருக்கு லாபம் … யார் யாருக்கு நஷ்டம்
2. வீரம் திரைப்படம் யார் யாருக்கு லாபம் யார் யாருக்கு நஷ்டம்
3. ஏன் உண்மைகள் வெளி வருவதில்லை
4. என்று மாறும் இந்த நிலை
இதுதான் இன்றைய கருத்துகள். உண்மை என்பதால் சிலருக்கு சுடும் .. சிலருக்கு சுகம்.
ஜில்லா கல்லா கட்டவில்லை .. மினிமம் காரண்டீ (minimum guarantee) முறையில் திரையிட்ட அனைவருக்கும் நஷ்டம் … நிச்சயம் …பல வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டம்.(இதே கதை வீரத்துக்கும் பொருந்தும் .. ஆனால் விலை சற்றே குறைவு என்பதால் நஷ்டமும் குறைவு. ..
அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரி முழுமையாக வரவில்லை .. வரி ஏய்ப்பில் நிறைய திரை அரங்குகளுக்கு பங்கு உண்டு .. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வரவுக்கு வாய்ப்பு உண்டு.
லாபம் யாருக்கு என கேட்டால் … ஜில்லா படத்தில் தயரிப்பாளருக்கு நல்ல லாபம். நடிகர் விஜய் முதல் அனைத்து நடிகர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் லாபம் . சில திரை அரங்கு தவிர பல திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் …
விளம்பர நிறுவனங்களுக்கும் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் லாபம் . படம் முழு திருப்தி தராததால் 300 500 என காசு கொடுத்து வாங்கிய ரசிகர்களுக்கு நஷ்டமோ நஷ்டம்…
வீரம் திரைப்படத்தில் தயரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லை … வினியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை .. ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் இல்லை …ஆனால் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் .
வரி ஏய்ப்பு செய்வதில் ஜில்லாவுக்கு இணையாக வீரமும் உண்டு ..
ஏதோ இரு படங்களுக்கும் வரி உண்டு என முடிவு செய்ததால் அரசாங்கத்துக்கு கொஞ்சமாவது வருமானம் வந்தது..
சரி இதெல்லாம் உண்மையாக இருக்குமானால் … ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை
சிறு பத்திரிகைகளை சிறிய விலைக்கும் பெரிய பத்திரிகைகளை பெரிய விலைக்கும் யாராவது வாங்கி விடுகிறார்களா… யாமரியேன் பராபரமே..
என்று மாறும் இந்த நிலை …
மக்கள் அதிக விலைக்கு டிக்கட் வாங்க மாட்டோம் என முடிவு எடுத்தால்…
திரை அரங்கு உரிமையாளர்கள் கருணை வைத்தால் …
ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் அரசாங்கம் தியேட்டரிலும் கண் வைத்தால் ..
பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால்…
ஊடகங்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால்…
நல்ல திரைப்படங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ..