.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

தமிழ்ப் பழமொழியும் என் தாத்தனும்..!



 விசாரம் முற்றினால் வியாதி.
  • கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்.

 
பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

  • நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.

காற்றில்லாமல் தூசி பறக்காது.

  • நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி

பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

  • நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.

 பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.

  • துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்..?

பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

  • பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி

 இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

  • விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

  • தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.

வாங்குகிற கை அலுக்காது.


  • வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ..?

மாமேதை லெனின் நினைவு தினம் இன்று..!



மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனினின் நினைவு தினம் இன்று...

உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின்.

 மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின்.

 இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார்.

 மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது.

நடிகைகளுடன் அரட்டையடிப்பதை நிறுத்திய சந்தானம்..!



தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் கதாநாயகிகளாக தேடிப்பிடித்து சென்று கடலை போடுவார் சந்தானம். படப்பிடிப்பு பேக்கப் ஆனாலும் மணிக்கணக்கில் அம்மணிகளுடன் கலகலத்து விட்டே விடைபெறுவார். இதெல்லாம் ஆர்யா அவருக்கு காட்டிக்கொடுத்த ஜாலியோ ஜிம்கானா. ஆனால், இப்போது ஆர்யாவுக்கு பிக்கப் நடிகர் என்று சில நடிகர்கள் மேடைகளிலேயே அட்டாக் கொடுத்ததால் இனியும் நடிகைகளுடன் சகவாசம் வைத்துக்கொண்டால், இமேஜ் டேமேஜாகி விடும் என்று கடலை போடுவதை விட்டு விட்டார். அவரைப்பார்த்த சந்தானமும், காமெடியனுக்கு மட்டும் இமேஜ் இல்லையா? என்ன? என்று சொல்லிக்கொண்டு தானும் அரட்டையை நிறுத்தி விட்டார்.

யாராவது, நடிகைகள், தான் சீரியசாக காமெடி சீன் யோசித்துக்கொண்டிருக்குபோது அருகில் வந்து அமர்ந்து, வாயாடத் தொடங்கினால், செம காண்டாகி விடுகிறார். சிரிக்க வைக்க எதையாவது சிந்திக்கிறப்ப என்னை சீரியசாக்கிடாதே என்று அம்மணிகளை விரட்டியடிக்கிறார்.

ஆனால் இப்படி அவர் திடுதிப்பென்று மாறியதற்கு இமேஜ் மட்டுமே காரணமில்லையாம். கவுண்டமணி, வடிவேலு போன்ற மெகா காமெடியனகள் ரீ-என்ட்ரி ஆகியிருப்பதால், இந்த நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்தால் வீணாகி விடுவோம் என்று உஷாரான சந்தானம், மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொள்வது முயற்சியாக தீவிரமாக யோசிக்கத் தொடங்கி விட்டாராம்.

 முன்பைவிட தான் நடிக்கும் காமெடி காட்சிகள் இனி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் சதா சிந்தனையிலேயே சிறகடிக்கிறாராம் சந்தானம். அதனால் அவரை பார்ப்பவர்களுக்கு அவர் சீரியசாக மாறிவிட்டது போலவே தெரிகிறதாம்.

சூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது..!




லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் கதையில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், சமீபகாலமாக, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரே படத்தை நம்பாமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மாறியிருப்பதால், இந்த படத்தை முடிக்கும் முன்பே, வெங்கட்பிரபு நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சூர்யா. ஆனால், ஏற்கனவே அதற்கான கதை விவாதம் முடிந்து விட்ட நிலையில், படத்திற்கான தலைப்பு விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.

கமல் நடித்த கல்யாணராமன் என்ற தலைப்பை வைத்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று முன்பு முடிவு செய்திருந்த வெங்கட்பிரபு. அதையடுத்து அந்த தலைப்பு குறித்தும் முன்பு அப்படத்தை தயாரித்த நிறுவனத்திடனம் பேச இருந்தார். திடீரென்று அந்த தலைப்பு ரொம்ப பழசாக இருக்கும் என்று சில அபிமானிகள் கருத்து சொன்னதையடுத்து, லேட்டஸடாக வேறு நல்ல தலைப்பு வைக்கலாம் என்று கூறி விட்டாராம் சூர்யா.

அதனால், சிம்பு நடிக்கும் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே டைட்டில் விவாத்திலும் கெளதம்மேனன் ஈடுபட்டு வருவதுபோல், சூர்யா நடிக்கும் படத்தையும் தொடங்கியுள்ள வெங்கட்பிரபு, அவ்வப்போது டைட்டீல் பற்றியும் டிஸ்கஸ் செய்து வருகிறாராம். அஞ்சான் மாதிரி நறுக்கென்று இருக்க வேண்டும் என்று சூர்யா தரப்பு கூறியிருப்பதால், வீரம், ஜில்லா போன்று மூன்று, நான்கு எழுத்தில் தலைப்பு யோசித்து வருகிறார்களாம்.
 
back to top