.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 17, 2013

Square Cash ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தோற்றம் பெற்ற ஒரு சேவையாக ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை விளங்குகின்றது.தற்போது உள்ள ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் Paypal ஆனது பிரபல்யம் வாய்ந்ததாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் காணப்படுகின்றது. இந்நிலையில் Paypal - ற்கு நிகரான Square Cash எனும் பிறிதொரு ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் இச்சேவையானது முதன் முதலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இதற்காக iOS மற்றும் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் மூலம் பயனர் ஒருவர் வாரம் ஒன்றிற்கு 2,500 டொலர்களை ஆகக்கூடுதலான தொகையாக பரிமாற்றம்...

Flipkart இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி S3 ரூ.19,499 விலையில் கிடைக்கும்!

கடந்த ஆண்டு கொரியாவின் மிக சிறந்த ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3, இப்போது இணையத்தில் ரூ.20,000-க்கும் குறைவாக கிடைக்கின்றது. சாம்சங் தயாரிப்பாளர் ரூ.25,400-ல் விற்பனை செய்துகொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி S3 கடந்த வாரத்திலிருந்து கைப்பேசிகளின் விலை குறைத்துள்ளது. ஆனால் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart இணையதளத்தில் இப்போது ஒரு பெரிய தள்ளுபடி விலையில் கேலக்ஸி S3 விற்பனை செய்கின்றது. அதாவது இந்தியாவில் கேலக்ஸி S3 விலை ரூ.24,899-க்கு விற்பனை செய்தாலும் அதனை Flipkart இணையதளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் பரிமாற்றம் செய்துகொண்டால் மட்டுமே, ரூ.5,400 தள்ளுபடி செய்து ரூ.19,499 விலையில் வழங்கி வருகிறது.இந்திய சந்தையில்...

செவ்வாய் கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம்28ம் தேதி ஏவப்படுகிறது!

 இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய்கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம் 28ம் தேதி அனுப்பப்படுகிறது. புவி வட்டப்பாதை வரை பி.எஸ்.எல்.வி, சி,25 ராக்கெட்டில் செலுத்தப்படும் இந்த விண்கலம் மங்கல்யான், அதன்பிறகு அதிலேயே பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மூலம் புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் நுழையும்.இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் ( இஸ்ரோ) சார்பில் இதுவரை 105 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் இந்திய  மற்றும் வெளிநாடுகளின் செயற்கை கோள்களை எடுத்துச்சென்று விண்ணில் நிலைநாட்டியுள்ளன. இதில் அதிகளவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன....

ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்!

 உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.என்ன காரணங்கள்ஒரு நாளைக்கு சராசரியாக 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது உடலுக்குள் செல்லும் போது சக்தியாக மாற்றப்படுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு மிஞ்சி சக்தி உள்ளே சென்றால், அதாவது அதிகமான கலோரிகளை...
Page 1 of 77712345Next

 
back to top