.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 7, 2014

ஒழுக்கம், பஞ்சுவாலிட்டி நிறைந்தவர் விஜய் - மோகன்லால் புகழாரம்



மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளைய தளபதி விஜயை மனமாரப் புகழ்ந்துள்ளார்.

விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடித்தது குறித்து
மோகன்லால் சமீபமாக அளித்துள்ள பேட்டியில் விஜயின் ஒழுக்கம், நேரம்தவறாமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை மனமாராப் பாராட்டியுள்ளார் மோகன்லால்.

ஜில்லா திரைப்படத்தில் விஜயின் அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். இப்படத்தின் கதையம்சத்தால் தான் அப்பாவாக நடிப்பதாகவும், அப்பாவாக நடிப்பதால் தனது ஹீரோ இமேஜ் பாதிக்கப்படாது என்றும் கூறியுள்ளார். மதுரை மண்ணின் மைந்தனாக தான் இப்படத்தில் தோன்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானை மிஞ்சிய அமீர்கான்..!



அமீர்கான், கத்ரீனா கைப், உதய் சோப்ரா மற்றும் அபிஷேக் பச்சன் நடித்து கடந்த டிசம்பர் 20ல் உலகெங்கும் வெளியான தூம் 3 திரைப்படம் 500
கோடிகளுக்கும் மேலாக வசூலித்து இமாலய வெற்றியடைந்துள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் உருவான திரைப்படம் தூம் 3. பாலிவுட் ஏக்சன் படவரிசையான தூம் படத்தின் மூன்றாம் பாகமான இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்திருந்தார். இப்படம் உலகெங்கிலும் சேர்த்து மொத்தமாக சுமார் 500 கோடிகளுக்கும் மேலாக வசூல் சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

500 கோடிக்கும் மேலாக வசூல் செய்ததால் இந்தியாவில் தயாரான படங்களில் அதிகமாக வசூல் செய்த படங்களில் இப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்பிரஸ் சுமார் 400 கோடிகள் வசூலித்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் வசூலை அமீர்கானின் இப்படம் முறியடித்துள்ளது.

வெப்கேமில் சிக்கிய திருடன்




பொதுவாக நம்மூரில் விடுமுறைக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது பாதுகாப்பைற்காக அருகே உள்ள காவல் நிலையத்தில் த‌கவல் தெரிவிக்குமாறு சொல்வார்கள். அதனால் பயன் இருக்குமா என்பது வேறு விசஷயம்.நாமும் நம் திருப்திக்காக பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி வைப்போம்.

இவற்றோடு இனி வெப்கேமிராவையும் ஆன் செய்துவிட்டு செல்லலாம். அப்ப்டியாயின் எங்கிருந்தாலும் விட்டின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம். அப்படியே யாராவது தப்பித்தவறி திருடர்கள் நுழைந்தாலும் கண்டுபிடித்துவிடலாம்.

பொறி வைத்து எலியை பிடிப்பது போல வெப்கேமில் திருடனை பிடிப்பது எல்லாம் நட‌க்கிற கதையா என்று கேட்க வேண்டாம். அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது வெப்கேம் மூலம் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்த திருடனை பிடித்திருக்கிறார்.

ஜீனே தாமஸ் என்பது அவரது பெயர். புளோரிடாவில் உள்ள பாயன்டன் கடற்கரையில் அவரது வீடு இருக்கிறது. அங்கிருந்து 20 மைல் தொலைவில் உள்ள அலுவலகத்தில் அவர் வேலை பார்க்கிறார்.

சமீபத்தில் அவர் அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு வீடு பற்றிய கவலை உண்டானது. உடனே இண்டெர்நெட்டுக்கு தாவி தனது வீட்டில் பொருத்தியிருந்த வெப்கேம் காட்சிகளை பார்க்கத்தொடங்கினார்.

வெப்கேமில் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. காரணம் விட்டில் யாரோ 2 ம‌ர்மாசிமிகள் நடமாடிக்கொண்டிருந்தனர்.அவர்களை உற்று கவனித்த ஜேனே அவசர போலிச்சாரை தொடர்பு கொண்டு த‌கவல் கொடுத்து உதவு கோரினார்.

போலிசார் வந்துசேரும் வரை வீட்டில் என்ன நடக்கிறது எனபதி கவனித்துக்கொண்டேயிருந்தார். திருடர்களில் ஒருவர் ஃபிரிட்ஜ்ஜிலிருந்து பாலாடைக்கட்டிகளை சாப்பிடுவதை பார்த்தார். அதன்பிறகு அவ‌ர்கள் மற்றொரு அறைக்கு செல்வதையும் பார்த்தார்.

பாவம் திருடர்க‌ள் தங்கள் கண்காணிக்கபடுவது தெரியமலே காரியத்தில் கண்னாக இருந்தனர்.

இதற்குள் போலிசார் அங்கு வந்து இருவரையும் கைதுசெய்து விட்டனர். கூடவே கூட்டாளி இருவரையும் பிடித்தனர்.

ஜேனேவுக்கு இதில் பயங்கரமான மகிழ்ச்சி. தான் குடியிருந்த பகுதி திருட்டு பயம் கொண்ட இடம் என்பதால் அவர் பாதுகாப்பிற்காக வெப்கேமை வாங்கிபொருத்தினார்.

அப்போது கணவர் கூட வெப்கேமிற்கான செலவு வீண் என்று கூறியிருக்கிறார். ஆனால் வெப்கேம் திருடனை பிடிக்க உதவி வியப்பில் ஆழ்த்திவிட்டது.

இந்த சம்பவம் வெப்கேமின் அருமையை உணர்த்தியிருப்பதாக கருதலாம். இந்த சம்பவம் திருடர்களுக்கான எச்சரிக்கை என்றூம் கொல்லலாம். 

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?






புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.

இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும் ஈடுபட்ட ஊழல்களின் எண்ணிக்கை 27,236. அதாகப்பட்டது, சில ஊழல்களில் கூட்டணி செயல்பட்டிருக்கிறது.

ஆச்சா? மேற்படி 27,236 ஊழல்களில் 21,848 கேஸ்கள் மிகப் பெரியவை. அதாவது ஊழல் செய்த தொகை பெரிது என்று பொருள். சதவீதக் கணக்கில் சொல்வதென்றால் 80.2 சதவீத ஊழல்கள் பெரும் ஊழல்கள். இந்த எண்பது சதவீத ஊழலில் 16,510 ஊழல்கள் மிக நேரடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த வகையில் சேருபவை. இந்த ரக ஊழல்களில் மட்டும் 23,017 அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இத்தனை ஊழல்கள் நடந்திருந்தாலும் இதில் தேர்ந்தெடுத்த 12,824 ஊழல்களைக் குறித்துத்தான் அரசுக்குப் பெரும் கவலை. இந்தப் பன்னிரண்டாயிரத்தி சொச்ச ஊழல்களின் மொத்த மதிப்பு 910.57 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5670 கோடி) என்பது மட்டுமல்ல காரணம். சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளில் சிலபேரின் பெயர்கள் வெளியே வந்தால் மானம் மரியாதையெல்லாம் மொத்தமாகப் போய்விடும் என்கிற அச்சம்.

வருஷம் முழுக்க ஊழல் நடக்கும்போது பக்கத்தில் இருந்து கண்காணித்து, நடந்து முடிந்ததும் கர்ம சிரத்தையாக லிஸ்டு போட்டார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. உலகெங்கும் ஊழல் நடந்தபடிதான் இருக்கிறது. சீனாவில் மட்டும் ஒரு டிபார்ட்மெண்ட் இப்படி கர்ம சிரத்தையாகக் கணக்கெடுத்துப் புள்ளிவிவரம் கொடுக்கிறது. அதுதான் வித்தியாசம்.

இத்தனை ஊழலர்களையும் என்ன செய்யலாம் என்று இனி யோசிப்பார்கள். பொலிட் பீரோ தீர்ப்புக் கொடுக்குமா அல்லது காட்ரெஜ் பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவார்களா என்று இப்போது சொல்வதற்கில்லை. சீனாவின் மிகப்பெரிய பிரச்சினையாக ஊழல் உருவெடுத்து வருவது கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிற சங்கதி.

என்ன பிரச்சினை என்றால் ஊழல் நடக்கும் இடம் கண்டறியப்படுகிறது. இன்னார் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆதாரங்கள் திரட்ட முடிகிறது. வளைத்துப் பிடிக்கவும் முடிகிறது. ஆனால் நிரூபித்தல் என்று வரும்போது பல வழக்குகள் புஸ்ஸாகிவிடுகின்றன. எனவே சீர்திருத்தங்களை நீதித் துறையில் இருந்து தொடங்கவேண்டும் என்று பலமாகக் குரலெழும்பத் தொடங்கியிருக்கிறது.

இந்த வருஷம் ஊழலை மெயின் அஜண்டாவாக எடுத்துக்கொண்டு மிகக் கடுமையான தண்டனைகள் மூலம் அச்சம் பரப்பி ஊழலைக் குறைக்க சீன அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஊழலை ஒழிக்கட்டும். நாம் கொசு ஒழிக்க முயற்சி செய்வோம்.
 
back to top