.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

குளிரிலும் மிளிர வேண்டுமா..?



இந்த ஆண்டு, குளிர் கொஞ்சம் அதிகம் தான். வீடு, அலுவலகம் என்று காலில் சக்கரம் கட்டி, சுற்றிக் கொண் டிருக்கும் பெண்களால், தங்களின் உடல் அழகைப் பராமரிக்க, நேரம் கிடைப்ப தில்லை. கிடைக்கும் நேரத்தில், வீட்டிலேயே அழகைப் பராமரித்து, பொலிவுடன் ஜொலிக்க...

 இதோ சில டிப்ஸ்!

பனிக் காற்று, சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கும். குறிப்பாக, கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி சுருக்கம் ஏற்படும். வறண்ட சருமமாக இருந்தால், அதிக திறனுள்ள மாய்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். இத சருமத்தில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை அடைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங் கள்.

மேக்கப் செய்யும் முன், இதனை, கண் மற்றும் உதடுகளை சுற்றி போடவும். இதனால், நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்கும்.

கண்களைச் சுற்றி சுருக்கம் ஏற்படாமல் இருக்க, சாதாரண பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்த்து, மோதிர விரலால், ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பின், 15 நிமிடம் கழித்து, மென்மையான பஞ்சுத் துணியால் துடைத்து விடுங்கள்.

 இது, கரு வளையத்தை போக்க உதவும். வெள்ளரி ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ் இரண்டையும் சமமான அளவு கலந்து கண்களுக்குக் கீழே தேய்த்து, 15 நிமிடம் வைத்திருந்தால் போதும், கண்கள் கவிபாடும்.

பனி நிறைந்த காலைப் பொழுதும், குளிர்ந்த காற்றும் சருமத்தை சொரசொரப்பாக்கி விடும். இதிலிருந்து விடுபட, சருமத்திற்கு நீர்ச் சத்து அவசியம். ஆலிவ் ஆயில் அல்லது உங்கள் சருமத்திற்கு ஒத்துப் போகும் ஏதேனும் ஒரு எண்ணெயை, ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில், கல் உப்பை எண்ணெயில் முழுமையாக நிரம்பும் அளவிற்கு சேர்க்கவும். இந்த கலவையை கழுத்தில் இருந்து உடல் முழுவதும் பொலிவு இழந்த சருமத்தின் மீது, வட்ட வடிவமான அசைவில் தேய்க்கவும்.

இதனால், சருமத்தின் சொரசொரப்பு குறைவதோடு, நீர்ச் சத்தும் கிடைக்கும். வறண்ட சருமத்திற்கு கிரீம் கலந்த சோப் வகைகளே சிறந்தது. குளித்த பின், பாடி லோஷன் தேய்த்து, பின், பவுடர் உபயோகித்தால், சருமம் மிருதுவாக இருக்கும்.

உடலின் மொத்த பாரத்தையும் பாதங்கள் தாங்குவதால், அதிக அழுத்தங்களைச் சந்திக்கிறது. உடலின் முக்கிய நரம்பு மண்டலங்களுடன் இணையும் பிரஷர் பாயின்டுகளும் பாதங்களில் தான் இருக்கின்றன. இதனால், வாரம் ஒரு முறை, மசாஜ் செய்தால், இந்த அழுத்தத்திலிருந்து பாதங்கள் விடுபடும். ஒரு அகன்ற பாத்திரத்தில், வெது வெதுப்பான தண்ணீரில், "எக்சோட்டிக் பாத் கிரிஸ் டல்சை' கரைக்கவும்.

 இதில், 10 முதல் 15 மார்பிள் கல் துண்டுகளைப் போடவும். பாதங்களை இந்த தண்ணீரினுள் வைத்து, மார்பிள் கல்லில் குதிகால்களைத் மெதுவாகத் தேய்க்கவும். இது உங்கள் பாதங்களை மிருதுவாக வைப்பதோடு, பித்த வெடிப்புகளும் வராது. தினமும் பாடிலோஷன் பயன்படுத்துவது, அதிக பலனை தரும்.

வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்வதை விட, வேறு எந்த சிறந்த சிகிச்சையும் கூந்தலுக்கு இருக்க முடியாது. தேங்காய் எண்ணெயை சூடாக்கும் முன், அதில் கால் பாகம் ஆலிவ், பாதாம் அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். வறண்ட வானிலை நிலவும் போது, இந்த ஆயில் மசாஜ், கூந்தலுக்கு தேவையான சத்தை தரும்.

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்......?

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

பிரவுசர் To பிரவுசர் பேவரிட்ஸ் மாற்றம்..!



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.

1. ஏற்கனவே பேக் அப் செய்து வைத்தவற்றிலிருந்து மாற்றம் செய்திட, "Favorites” பட்டனில் முதலில் கிளிக் செய்திடவும். "Add to Favorites” என்பதன் அருகே உள்ள அம்புக் குறியில் அடுத்து கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் "Import and Export” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Import /Export Settings விண்டோ தேர்ந்தெடுக்கப்படும்.

2. அடுத்து "Import from a file” என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து "Next” கிளிக் செய்திடவும்.

3. உங்களுடைய பேவரிட்ஸ் மட்டும் மாற்றம் செய்திட வேண்டும் என்றால், "Favorites” என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அல்லாமல், உங்களுடைய feeds மற்றும் cookies ஆகியவற்றையும் மாற்றம் செய்திட விருப்பப்பட்டால், “Feeds” and “Cookies” ஆகியவற்றின் மீதும் கிளிக் செய்திடவும். பின்னர் "Next” மீண்டும் கிளிக் செய்திடவும்.

4. அடுத்து "Browse” பட்டனில் கிளிக் செய்திடுக. பைல் பிரவுசரினைப் பயன்படுத்தி, நீங்கள் ஏற்கனவே எடுத்து வைத்த பேக் அப் பைலைத் தேடிக் கண்டறிந்து அதனைத் திறக்க "Open” என்பதில் கிளிக் செய்திடவும். மீண்டும் "Next” பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. அடுத்ததாக, "Favorites” எனப் பெயரிட்டுள்ள போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் "Next” பட்டனில் கிளிக் செய்திடவும்.

6. மீண்டும் பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, பேவரிட்ஸ் சேமித்து வைத்த OPML பைலைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து "Feeds” என்ற போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். இதே போல மீண்டும் சென்று, குக்கீஸ் கொண்டுள்ள டெக்ஸ்ட் (TXT) பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

7. இறுதியாக உங்கள் பேவரிட்ஸ், குக்கீஸ், பீட்ஸ் ஆகியனவற்றை மாற்றிட "Import” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். "Favorites,” “Feeds” and “Cookies” ஆகிய ஆப்ஷன்களில் டிக் ஏற்படுத்தினால், அவை அனைத்தும் மாற்றம் செய்யப்படும். முடிவாக "Finish” என்பதில் கிளிக் செய்து Import/Export Settings என்ற விண்டோவினை மூடவும். இனி, பேவரிட்ஸ், பீட்ஸ் மற்றும் குக்கீஸ் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கும்.

சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?

நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம். நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும். ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.இன்னொரு வகையும் உண்டு. பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம். அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.

அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்ன இரண்டு சூழ்நிலைகளுக்கும் என்ன காரணம்? நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.

குழந்தை மனநிலை: இதுதான் அரவணைப்புக்கு ஏங்குகிறது. அவ்வப்போது சிணுங்குகிறது. சில நேரம் உலகத்தை வியப்பாகப் பார்க்கிறது. பல நேரம் முரண்டு பிடிக்கிறது.

பெற்றோர் மனநிலை: இந்த மனநிலை வரும்போது, நம் மனம் அடுத்தவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை எடுத்துக்கொள்கிறது. நான் சொல்றேன் கேளு என்கிற கண்டிப்பும் அதிகாரமும் அங்கே ஆரம்பமாகிறது.

முதிர்ந்த மனநிலை: இதுதான் பக்குவமான நிலை. திறந்த மனதோடு விமர்சனங்களை ஏற்பதற்கும் சரி, சிறந்த ஆலோசனைகளை மற்றவர்கள் மனம் கோணாமல் எடுத்துச் சொல்வதற்கு சரி, இதுதான் மிகவும் உகந்த மனநிலை.

இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட இருவிதமான சூழ்நிலைகளை மறுபடி பார்ப்போம்.

பிறரிடம் நாம் ஆலோசனைகளைக் கேட்கிறபோது முதிர்ந்த மனநிலையில் இருக்கிறோம். எதிரே இருப்பவர்கள் விமர்சனங்களைச் சொல்லச்சொல்ல, நம்மையும் அறியாமல் குழந்தை மனோநிலைக்குத் தாவுகிறோம். உடனே உள்ளுக்குள் எதிர்ப்பு உருவாகிறது.

அதே போலத்தான் மற்றவர்களை விமர்சிக்கிறபோதும் நிகழ்கிறது. முதிர்ந்த மனநிலையில் தொடங்குகிறோம். பெற்றோர் மனநிலைக்கு மாறுகிறோம். அப்போது நம் குரலிலும் வார்த்தைகளிலும் கண்டிப்பு கூடுகிறது. எதிரே இருப்பவர் முதிர்ந்த மனநிலையில் இருந்தாலும் சீண்டிவிட்டு அவரைக் குழந்தை மனநிலைக்குக் கொண்டுபோய் விடுகிறோம்.

மற்றவர்களோடு கலந்துரையாடும் வேளைகளில் நாம் என்ன மனோநிலையில் இருக்கிறோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். எதிரே இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று யூகிப்பது முக்கியம். வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்.
 
back to top