.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம - மத்திய அரசு வெளியீடு..!



அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

 பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்:-


*முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் முதியோர் சந்திக்க உள்ள சவால்கள், அச்சுறுத்தல்கள் என்ன என்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை முதியோர் உள்ளனர்; அவர்களில் எத்தனை பேர், துணையின்றி தனிமையாக உள்ளனர் என்பதை கணக்கிட வேண்டும்.

*அந்தந்த மாவட்ட போலீஸ் தலைமையகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி முதியோருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

*வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு, போதுமானதாக இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். முதியோர் வசிக்கும் பகுதியில் போலீஸ் ரோந்து அதிகரிப்பது அவசியம்.

*முதியோர் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போன்ற தகவல் தொகுப்பு பராமரிக்கப்பட்டு அவ்வப்போது மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

*குறிப்பாக செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர் வசிப்பிடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்கள் யார், யார், வெளியே இருந்து எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தகைய வேலையாட்களின் குற்ற பின்னணி போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

*அந்த வேலையாட்களை யாராவது ஒருவர் அல்லது அமைப்பு பரிந்துரை செய்திருக்க வேண்டும். தவறு ஏற்படுமானால், அந்த நபர் அல்லது அவரை பரிந்துரை செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.

*இந்த ஏற்பாடுகளை போலீஸ் துறையின் மூத்த அதிகாரிகள், அவ்வப்போது கண்காணித்து, தேவைப்படின் கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்கள் நேரடியாக முதியோருடன் கலந்துரையாட வேண்டும்.

*மேலும் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தி முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

*விற்பனை பிரதிநிதிகள்,வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பவர்கள் போன்றவர்கள், எளிதில் முதியோரை அணுகா வண்ணமும், முதியோரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையிலான செயல்கள் தடை செய்ய வேண்டும்.

*போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களும், முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது..!


அதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்னடர்.

சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சிவப்பு ஒயின் அருந்துபவர்களுக்கு 2–வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது.

அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்தது.

ஆந்தோசியோனின்ஸ் மூலக்கூறுகள் காபி கொட்டைகள், சிவப்பு திராட்சை, ஒயின் மற்றும் சிவப்பு அல்லது நீல நிற பழங்கள் மற்றும் காய்கறி களில் அதிகம் உள்ளது. அவற்றை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் தாக்காது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அஞ்சான் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை துவங்குகிறது..!



அஞ்சான் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை துவங்குகிறது:-

சூர்யா - சமந்தா நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நாளை முதல் துவங்கவுள்ளன.

யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்துவரும் புதிய திரைப்படமான அஞ்சான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளன. மிக வேகமாக நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்புகள் பொங்கலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாக நிறைவுபெற்றன.

ஏக்சன் படமாக உருவாகிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை தொடங்கி சுமார் ஒரு மாதம் மும்பை மற்றும்
மஹாராஷ்டிராவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். சூரி, வித்யூ ஜம்மவால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துவருகின்றனர்

துப்பாக்கி ரீமேக் ரிலீஸ் தள்ளிப்போகிறது..!



இளையதளபதி விஜய் - காஜ்ல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படம் ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மே மாதம் முதல் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு ஜூன் 6 ஆம் தேதிக்குத்
தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வி.கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த திரைப்படம் துப்பாக்கி. இப்படம் தமிழில் மாபெரும்
வெற்றியடைந்ததால் தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தியிலும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸே இயக்கவுள்ளார்.

அக்‌ஷய்குமார் மற்றும் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஹாலிடே எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்தி ரீமேக்கினை
ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படம் வருகிற மே 1 ல் வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் IPL போட்டிகள் மே மாதத்தில் தொடங்குவுள்ளதால் இப்படத்தின் வெளியீட்டினை ஜூன் 6 ற்குத் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரியில்
தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
back to top