.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 22, 2013

சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள் !


சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள்
 
 
இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று இவ்விழாவை தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


இன்று காலை 2–ம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழா நடந்தது. கர்நாடக மந்திரிகள் கே.ஜே. ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். பின்னர் கன்னட நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கன்னட மொழி பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆடினார்கள். விழாவில் ஏராளமான கன்னட ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.


இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரைப்பட விழா நடக்கிறது. இதில் ஆந்திர துணை முதல்வர் தாமோதர்ராஜா நரசிம்மா, மத்திய மந்திரி கே.சிரஞ்சீவி, அமைச்சர் டி.கே. அருணா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தெலுங்கு நடிகர்கள், வெங்கடேஷ், நாகார்ஜூனா, டாக்டர் ராஜசேகர், சுமன், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுனா, நாகசைதன்யா, ராம்சரன் தேஜா உள்ளிடட்ட பலர் பங்கேற்கின்றனர்.


நாளை (23–ந்தேதி) காலை மலையாள நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் மம்முட்டி, மோகன்லால், திலீப் பங்கேற்கின்றனர்.
 
 

இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது!


11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது.


இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது.


25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது.



இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது.
தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்திரம், கலாச்சாரம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்துகின்ற சித்தானந்த் சுவாமிகளின் முயற்சியில் இந்த கலைக்களஞ்சிய பணிகள் நடந்துள்ளன.


அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகம் இந்த திட்டத்துக்கு ஆதரவும் வசதிகளும் செய்துதந்திருந்தது.



இந்த கலைக்களஞ்சியத்தின் சர்வதேச வெளியீட்டு விழாவில் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி, அட்லாண்டா நகரிலுள்ள இந்திய தூதர் அஜித் குமார், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அன்னா ஹசாரே உட்பட நூற்றுக்கணக்கான மத அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்குகொண்டிருந்தனர்.



இந்தியாவில் இந்த கலைக்களஞ்சியம் ஏற்கனவே தலாய் லாமா அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்!

செவ்வாய் கிரகம்


செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.



செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வானிலை சீராக இருந்தால் அக்டோபர் 28 ஆம் தேதி இந்தக் கோள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 


நீண்ட தூரம்

செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி
செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி



இதற்கு முன்பு இந்தியா 2008 ஆம் ஆண்டு சந்திர மண்டலத்தை ஆராய சந்திரயானை வெற்றிகரமாக ஏவியது. பூமியில் இருந்து சந்திரன் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து இருக்கும் கோளான செவ்வாயோ இதை விட ஆயிரம் மடங்கு தூரத்தில் அதாவது 400 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. ஆனால் ஒவ்வொறு 26 மாத கால இடைவெளியிலும் செவ்வாய் பூமிக்கு சற்றே அருகில் அதாவது 56 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வருகிறது. அப்படி செவ்வாய் கிரகம் அடுத்து நெருங்கி வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டே இந்த கோளை இந்தியா ஏவுகிறது.


விண்ணில் ஏவப்பட்ட பிறகு, 1350 கிலோ எடையுள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகதையடைய 10 மாதங்களை எடுத்துக் கொள்ளும். செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில் நுட்பத் திறன் உள்ளதாக என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீதேன் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள்.


செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்த பல சோதனைகளைச் செய்ய 5 உபகரணங்களை மங்கள்யான் ஏந்திச் செல்கிறது. சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். 



சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இப்போது எடுத்துச் செல்லப்படும் அனைத்து கருவிகளும் இந்தியாவுடையாதாகவே இருக்கும். அமெரிக்காவும், ரஷ்யாவும் 1960களிலேயே செவ்வாய் கிரகத்துக்கு கோளை அனுப்பியுள்ளன. சமீப ஆண்டுகளில் விண்வெளியில் வேகமாக முன்னேறிவரும சீனா 2011 இல் செவ்வாய் கிரகத்தை ஆராய கோள் அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.!


புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.



இணையதள முகவரி :      http://www.good-tutorials.com



CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும்  திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 
back to top