.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 8, 2013

இ‌ப்படியு‌ம் ‌சில ம‌னித‌ர்க‌ள் !!

உன‌க்காக உ‌யிரையே‌க் கொடு‌ப்பே‌ன் எ‌ன்று காத‌ல் வசன‌ம் பே‌சி, காத‌லி‌த்து, க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு ‌பிறகு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் அடிதடி ரகளை நட‌ப்பது இய‌ல்பான ‌விஷய‌ம். ஒரு வேளை, காத‌லி‌த்து க‌னி‌ந்துரு‌கி, இறு‌தி‌யி‌‌ல் ‌ஏதேனு‌ம் காரண‌த்தா‌ல் ஒ‌ன்று சேர முடியாம‌ல் போனா‌ல், காதலனோ, காத‌லியோ செ‌ய்யு‌ம் ‌விப‌ரீத செய‌ல்களை இ‌ங்கு ‌நினைவூ‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.


தான் கற்ற க‌ல்‌வியையு‌ம், பெற்ற அனுபவ‌த்தையு‌ம், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வது‌ம் உ‌ண்டு, ‌சில‌ர் அதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌தீமை செ‌ய்வது‌ம், பழிவா‌ங்குவது‌ம் உ‌ண்டு.


இ‌தி‌ல் இர‌ண்டா‌ம் ரக‌ம் ம‌னித‌ர்க‌ளிட‌ம் நா‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறு‌த்துவது தா‌ன் இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ன் நோ‌க்க‌ம்.


காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ந‌ண்ப‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ஒரு ‌சில ‌விஷய‌ங்களை த‌வி‌ர்‌ப்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். இது எ‌தி‌ர்மறையான ‌சி‌ந்தனையாக இரு‌ந்தாலு‌ம், நே‌ர்மறையாக ம‌ட்டுமே எ‌ல்லாமு‌ம், எ‌ல்லாரு‌ம் நட‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதை அடி‌ப்படையாக‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.


எ‌ந்த அ‌த்து‌மீற‌ல்களு‌‌ம் நட‌க்காம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வது‌ம், யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ‌சில ரக‌சிய‌ங்களை எ‌ப்போது‌ம் யா‌ரிடமு‌ம் சொ‌ல்லாம‌ல் இரு‌ப்பது‌ம்தா‌ன் முத‌ல் எ‌ச்ச‌ரி‌க்கையாகு‌ம்.



அதாவது காதல‌ர்களாக இரு‌க்கு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல், ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வது எ‌ன்று இருவரு‌ம் மன‌ப்பூ‌ர்வமாக ஒ‌ப்பு‌க் கொ‌ண்டாலு‌ம், எ‌ந்த‌த் தவறான கா‌ரிய‌த்‌திலு‌ம் ஈடுபடாம‌ல் இரு‌ப்பது இருவரது வா‌ழ்‌க்கை‌க்கு‌ம் ந‌ல்லது.


ஏதோ ஒரு காரண‌த்தா‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ள இயலாம‌ல் போகு‌ம் போது, பெ‌ண்ணை, ஆ‌ண் ‌மிர‌ட்டுவது‌ம், ஆ‌ண் கெ‌ட்டவ‌ன் எ‌ன்று தெ‌ரி‌ந்தாலு‌ம், தவறு செ‌ய்து ‌வி‌ட்ட ஒரே காரண‌த்‌தி‌ற்காக அவனை‌க் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டிய ‌சூ‌ழ்‌நிலையு‌ம் ஏ‌ற்படலா‌ம். இ‌தே‌க் காரண‌த்தை‌க் கொ‌ண்டு ஒரு ஆணை பெ‌ண் ‌பிர‌ச்‌சினை‌க்கு‌ள்ளா‌க்குவத‌ற்கு‌ம் வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.


ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், த‌ன்னை‌ப் ப‌ற்‌றிய ஒரு ரக‌சிய‌த்தை, யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ஒரு ரக‌சிய‌த்தை தயவு செ‌ய்து சொ‌ல்ல வே‌ண்டா‌ம். உ‌ங்களு‌க்கு ம‌ட்டுமே‌த் தெ‌ரி‌ந்தா‌ல் தா‌ன் அது ரக‌சிய‌ம். இ‌ன்னு‌ம் ஒருவரு‌க்கு அது தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் அது செ‌ய்‌திதா‌ன். எனவே, ‌நீ‌ங்க‌ள் ரக‌சியமாக வை‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌ம் ஒரு ‌விஷ‌ய‌த்தை முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் ர‌க‌சியமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது உ‌ங்க‌ள் கடமையா‌கிறது.


காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌சில கால‌த்‌திலேயே ‌சில‌ர் புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது, காத‌ல் கடித‌ம் கொடு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பி‌ன் ந‌ண்ப‌‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌த்‌துட‌ன் புகை‌ப்பட‌ம் எடு‌க்கலா‌ம், ஒரு ஆணு‌ம், பெ‌‌ண்ணு‌ம் த‌னியாக புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம் இதனை‌த் த‌வி‌ர்‌ப்பது எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌‌ச்‌சினையை‌த் த‌வி‌ர்‌க்கு‌ம்.


காத‌ல் வசன‌ங்க‌ள் அட‌ங்‌கிய வா‌ழ்‌த்து அ‌ட்டைகளாக இரு‌‌ப்‌பி‌ன் வெறு‌ம் இ‌னிஷ‌ிய‌ல்களை ம‌ட்டு‌ம் போ‌ட்டு‌க் கொடு‌க்கலா‌ம். காத‌ல் கடித‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படலா‌ம். அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்ட ஆதார‌மி‌ல்லாத பல ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.


தா‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி‌யி‌ன் கடவு‌ச் சொ‌ல்லை (பா‌ஸ்வே‌ர்‌ட்) ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம், வ‌ங்‌கி ஏடிஎ‌ம் கா‌ர்டி‌ன் கடவு எ‌ண்ணை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம் கூட ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் முடிய‌க் கூடு‌ம்.


எனவே, காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் இருவரு‌ம் ஒரு எ‌ல்லை‌க்கு‌ள் இரு‌ப்பது இருவரு‌க்குமே ந‌ல்லது. அது ஆணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, பெ‌ண்ணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி. ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர்தா‌ன் காதல‌ர்களு‌க்கான அ‌ங்‌கீகார‌த்தை‌ வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் தெ‌ளிவாக இரு‌ங்க‌ள்.


நா‌ம் எ‌த்தனையோ செ‌ய்‌திகளை ‌தினமு‌ம் நா‌ளித‌ழ்க‌ளிலு‌ம், இணைய தள‌ங்க‌ள் மூலமாகவு‌ம் படி‌க்‌கி‌ன்றோ‌ம். கே‌ட்‌கி‌ன்றோ‌ம். அதுபோ‌ன்ற அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ந‌ம் வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் நட‌க்காம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் இ‌‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கை ப‌ட்டிய‌ல்.

காலத்தை வென்று பிரகாசியுங்கள்!

                                          காலத்தை வென்று பிரகாசியுங்கள்

ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.


உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?


இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார்.


ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.


சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."


தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.


அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar's Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.


அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.


சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.


அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.


அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.


ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பல என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.


சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?


உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.


பிரகாசிப்பீர்களா?

Saturday, December 7, 2013

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...


கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.


அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.


அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"


கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"


அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"



கதிர் சொன்னான். "இல்லை"


அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."


கதிருக்கு வியப்பாக இருந்தது.


முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். "உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?"


கதிர் சொன்னான். "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை....."


முதியவர் புன்னகையுடன் சொன்னார். "நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்....."


முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.


"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.


சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.


அவர் சொன்னார். "27"


இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.


திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.


(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)



நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.

(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)



பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ•தே துணை.

(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)



இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.


ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.


ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?


மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.


நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?


சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?

நட்பு ?

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.


மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.


பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.


என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.


இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.


அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.


பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.


வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.


"புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
ந‌ட்பாங் கிழமை தரும்".

 
back to top