.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 6, 2014

தொடரும் வெற்றிப்பட ஃபார்முலா...



சந்தேகமே வேண்டாம். தெலுங்கு சினிமாதான் ஒரே பாடம். தென்னிந்திய கமர்ஷியல் சினிமாவில் கால் பதிக்க நினைக்கும் அனைவரும் கசடற கற்க வேண்டிய பால பாடங்கள் ஆந்திராவில்தான் தயாராகின்றன.

ஆக்ஷனா... இந்தா பிடி என கொடுக்கிறார்கள். லோ பட்ஜெட் கொத்து பரோட்டாவா... எடுத்துக்கோ என பரிமாறுகிறார்கள். நெகிழ வைக்கும் குடும்பச் சித்திரங்களா... வாங்க வாங்க என அழைக்கிறார்கள். த்ரில்லரா... இந்த பயம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என அலற வைக்கிறார்கள். மொத்தத்தில் எல்லா ஜானரையும் நீக்கமற கொடுக்கிறார்கள். க்ளாமருக்கான எல்லைக்கோட்டை பிரமாதமாக வரையறுக்கிறார்கள்.

1980களில் தமிழ்ச் சினிமா இப்படித்தான் இருந்தது என்பது கடந்தகால வரலாறானது நமது துர்பாக்கியம்.

இதெல்லாம் இட்டுக்கட்டிய கதைகள் என முஷ்டியை உயர்த்துபவர்கள் ரூம் போட்டு சென்ற ஆண்டு வெற்றிப் பெற்ற தெலுங்குப் படங்களை ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லது.

அது வேற வாய்... இது வேற வாய்... என்று நக்கலடிக்க முடியாத அளவுக்கு இந்த ஆண்டும் ரவுண்டு கட்டி அடிக்க சுந்தரத் தெலுங்கு திரையுலகம் தயாராகிவிட்டது. அதை முரசடித்து அறிவிக்கும் விதமாகத்தான் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த நிநொக்கடினே (1) படம் சங்கராந்தியை (பொங்கலை) ஒட்டி வெளியாகிறது. ஆர்யா புகழ் சுகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர். இந்தப் படத்துக்காக மகேஷ் பாபு சிக்ஸ் பேக் ஆக மாறியிருப்பது படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஒளிப்பதிவு வேறு ரத்னவேலுவா... படம், ஸ்டைலிஷ் ஆக இருக்கும் என்று கூரை மீதேறி வசூல் அம்மன் கூவ ஆரம்பித்துவிட்டார். போதும் போதாததற்கு இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் சீனு வைட்டாலா படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார். தூகுடு மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்துவிட்டது. அநேகமாக இந்தப் படம் ஆண்டு இறுதியில் வெளியாகும்.

இப்படி மகேஷ் பாபு குறித்து ஆர்ப்பாட்டமாக சொல்லிவிட்டு அவருக்கு சமமாக தெலுங்கு திரையுலகை ஆட்சி செய்யும் பவன் கல்யாண் குறித்து குறிப்பிடாவிட்டால் அலுவலகம் தேடி வந்து அடிப்பார்கள். காரணம், சம பலத்துடன் மோதிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் இருவரும்தான். இருவரும் கதாநாயகனாக அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்கள். தவிர, கபார் சிங், கேமராமேன் கங்கா தோ ராம்பாபு, அதாரின்டிகி தாரென்டி என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு சிம்மாசனத்தில் ஜம்மென்று பவன் கல்யாண் அமர்ந்திருக்கிறார். ஸோ, அதை தக்கவைக்கவும் மகேஷ் பாபுவுக்கு சவால் விடவும் தன் சார்பில் ஒரு படத்தை இந்த ஆண்டும் கொடுக்கிறார். அதுதான் கபார் சிங் 2. நடிப்பதுடன் இந்தப் படத்தை தயாரிப்பதும் பவன்தான்.

இந்தி சினிமாவை புரட்டப் போகிறேன் என்று சென்ற ஆண்டு சூளுரைத்த ராம் சரண், இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டார். இருப்பதை தக்க வைத்துக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருப்பவர், சென்ற ஆண்டே தயாராகிவிட்ட எவடு பட வெளியீட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான பிருந்தாவனம் படத்தை எழுதி, இயக்கிய வம்சி பைடபள்ளிதான் எவடுவை இயக்கியிருக்கிறார். அதனால் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

கார்த்தியின் “சிறுத்தை 2“



கார்த்தி நடித்து வெற்றிகரமாக ஓடிய சிறுத்தை படத்தின் 2–ம் பாகம் தயாராகி கொண்டிருக்கிறது.

சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஜோடி போட்ட படம் சிறுத்தை. 2011ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வசூல் மழையை பொழிந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறரார் சிவா.

தற்போது அட்டகத்தி ரஞ்சித்தின் இயக்கத்தில் வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் கார்த்தி நடிக்கயிருக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் சிறுத்தை இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிக்கிறார் .

ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்ட அஜீத்...!



கால் எலும்பில் ஏற்பட்ட காயத்துக்கான ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்டார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் பட ஷூட்டிங் துபாயில் நடந்தபோது கார் சேஸிங் காட்சியில் நடித்தார் அஜீத். வேகமாக ஓடும் காரின் முன்பக்கத்தில் நின்றபடி அவர் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது அவரது கால் வழுக்கி முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் கால் எலும்பில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பில் காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. அதற்கு ஆபரேஷன் செய்யவும் ஆலோசனை கூறினர். ஆனால் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்வதாக கூறினார் அஜீத்.

இந்நிலையில் வீரம் படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஆபரேஷனை தள்ளிப்போட்டார். அப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ஆபரேஷன் செய்ய எண்ணி இருந்தார். தற்போது மனைவி மகளுடன் அஜீத் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.

அங்கிருந்து வந்ததும் சிகிச்சை பெறுவாரா என்றதற்கு அவரது தரப்பில் பதில் அளித்தனர். வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடிக்க உள்ளார். அநேகமாக இப்படத்தை முடித்துவிட்டுத்தான் காலில் பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்துகொள்வார் என்று தெரிவித்தனர்.

இட்லி, தோசை மாவை இன்ஸ்டன்டா வாங்கினால் வரும் ஆபத்து!



கலப்படம் இல்லாத பொருட்களே இன்று இல்லை எனும் அளவிற்கு கலப்படங்களோடு இரண்டரக்கலந்து காலத்தை ஓட்டிவருகின்றோம்.உப்பு முதல் ஊற்காய் வரை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யும் சமையல் சாமான்கள் தாராளமாகக் கிடைப்பதால் வீடுகளில் சுயமாகத் தயாரிக்கும் எண்ணமே மக்களிடத்தில் மறைந்து போயிற்று.எனவே தாம் இன்று இட்லி,தோசை மாவுக்கு கூட நாம் கடைகளை நோக்கி ஓடும் அவலம்!

இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்கும்) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. எனவே, இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் பரிசோதனை செய்த பின் விற்பனைக்கு வருவதில்லை!

2. இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவில்,நாம் புண்ணுக்கு பயன்படுத்தும் போரிக் பவுடர் மற்றும் ஆரோட் மாவு, ஆகியவற்றைக் கலப்பதால் மாவில் புளிப்பு வாசைனை ஒருபோதும் வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதைச் செய்கின்றனர்.நாம் நம் வீட்டில் அரைத்த மாவை இரண்டு நாள் வைத்து மூன்றாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசைனை வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால்? மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்ப்பதற்காகத் தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டியும் தந்து ஒரு வாசனையும் வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய இவைகள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இந்த சிறு கருங்கற்களின் துகள்களால் தான் சமீப காலமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகின்றது.ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். அதையேக் கொத்தி போட்டாலும் அடுத்த மூன்று மாதங்கள் வரை தான் அதனைப் பயன்படுத்த முடியும்.

4.சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது! ஆனால் இது போன்ற சுத்தத்தை இவர்கள் பேணுவதில்ல!. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும், கிருமிகளை உருவாக்கி நம் உடலின் எதிர்ப்பு சக்தியைக் வெகுவாகக் குறைத்து வாந்தி,பேதி,போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது

5. கிரைண்ட்ரை நம் தாய்க்குலங்கள் பயன்படுத்த தயங்குவது ஏன் எனில் அதைச் சுத்தம் செய்வது கடினம். ஒவ்வொரு முறையும் குழவிக்கல்லைத் தூக்கி மாட்டுவதும் சிரமம்.பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். எனவே தாம்,சிறு குடும்பங்கள் கடை மாவை வங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மாறாக விற்பனைக்காக உற்பத்தி செய்பவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு முடிந்ததும் கழுவுவதில்லை.எனவே அதில் கிருமி அதிகரித்து கொண்டேச் செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வெந்நீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் அவ்வாறு செய்வதில்லை. வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம். எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மீத மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போக்கி விடுகின்றது.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். இவர்கள். பயன்படுத்துவதோ உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிர்.எனவே உப்பு போட வேண்டிய வேலையும் இவர்களுக்கில்லை.

7. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!

8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறையேனும் மாற்ற வேண்டும். இவர்கள் அதை இற்று அறுந்து போகும் வரை பயன்படுத்துவதால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சங்கொஞ்சமாக தேய்ந்து மாவில் கலக்கும் அபாயம் உள்ளது!

9. அரைக்கும்போது சத்தம் வராமல் இருப்பதற்காவும், மாவைக் கையால் தள்ளி விடாமல் அரைப்பதற்காகவும் ஓடும் கிரைண்டருக்கு மத்தியில் குழவியை இணைக்கும் செயின் ஒன்று இருக்கும், அந்த செயினை இவர்கள் கழற்றி விட்டு வேறு ஒரு கார்பன் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் அந்த பெல்ட்டில் தண்ணீர் பட்டு பட்டு நாளடைவில் அதன் துகள்களும் இந்த மாவில்தான் கலக்கும்.

10. இந்த மாவை அரைத்துக் கடைகளுக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் விநியோகம் செய்கின்றனர். நமது தமிழ் நாட்டின் கிளைமேட்படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தான் மாவில் உருவாகும் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நமதூரில் எல்லாக் கடைகளில் குளிரூட்டும் பெட்டி (ஃப்ரிட்ஜ்ரேட்டர்) இருப்பதில்லை.தற்போது நிகழும் எட்டு மணி நேர மின்தடை காரணமாக மாவு உப்புசம் அடைந்து கெட்டுப்போகும் வாய்ப்பு தான் அதிகம்!

மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
இது ஒர் அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல! எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது

.எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்!

 
back to top