கண்டுபிடிப்பின் பெயர் : தவிட்டு எண்ணெய் எரிபொருள்
கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : மகேஷ் ராஜா, ப்ரவீன், வெற்றிவேல், விக்னேஷ்வரன்
கல்லூரி : அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருக்குவளை
கண்டுபிடிப்பின் பயன் : எரிபொருள் சிக்கனப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது
ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தவிட்டு எண்ணெயை கலப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் டீசலுடன் கலந்து மாற்று எரிபொருளைக் கண்டறிந்துள்ளனர் திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள்.
தற்சமயம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானது தான் தவிட்டு எண்ணெய். எதற்கும் பயன்படாத தவிட்டு எண்ணெயை டீசலுடன் கலப்புத் தொழில்நுட்பத்தில் சேர்த்து வாகனங்களை இயக்க முடிவு செய்தோம்.
பல அளவீடுகளில் முயன்று இறுதியில், 80 சதவிகித தவிட்டு எண்ணெயுடன் 20 சதவிகிதம் டீசலைக் கலந்து சோதனை மேற்கொண்டோம். ஆய்வுக்காக உட்படுத்தப்பட்ட என்ஜின் நன்றாக இயங்கி எங்களுடைய ஆய்வு வெற்றிபெற்றது. தவிட்டு எண்ணெய் கொண்டு இயங்கும் வாகனத்தில் புகையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தக் கலப்பு எரிபொருள் பயன்படுத்தும்போது, லிட்டர் ஒன்றுக்கு 28 முதல் 30 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்" என்கிறார் மாணவர் வெற்றிவேல்.
இந்தக் கலப்பு எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்தும் போது என்ஜினின் செயல் திறன் வேகம் அதிகரித்துள்ளது என்று ஆய்வின்போது, இந்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment