.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 26, 2013

குப்பைமேனி தைலம் தயாரிக்கலாம் வாங்க!

 

குப்பை மேட்டில் கூட முளைத்து நிற்கும் செடி குப்பைமேனி. நாம் நடந்து செல்லும் ரோட்டில், கடந்து செல்லும் பாதையில் என எங்கும் காணப் பட்டாலும், நாம் காணாது கடந்து விடுவோம் குப்பைமேனியை. காரணம் இதன் அருமை நமக்கு தெரியாது.

விதைக்க வேண்டாம். உரம் போட வேண்டாம். சிறிய மண் பரப்பு இருந்தால் போதும். தானே தழைத்து நிற்கும் சுயம்பு இந்த குப்பைமேனி. Antibiotic Properties கொண்டது குப்பைமேனி. பலவித infectionலிருந்து நம்மை காக்கும். இதில் உள்ள anti inflammatory properties வீக்கத்தை குறைக்கும்.

 "தோலில் ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து குப்பைமேனி தைலம்."

Eczema எனப்படும் ஒருவகை தோல் நோய், சிறு குழந்தைகளுக்கு வரும் கரப்பான், தோலில் ஏற்படும் அரிப்பு, சிறு சிறு வெட்டு காயங்கள், bedsoreஇவைகளுக்கு சரியான தீர்வு குப்பைமேனி தைலம். பிரச்சினை உள்ள பகுதியில் இந்த தைலத்தை லேசாக தடவ வேண்டும். இரவு படுக்க போகும் முன் இந்த தைலத்தை உபயோகிக்கலாம். காலை குளிக்க போகுமுன் சிறிது விளக்கெண்ணெய் அல்லது குளித்த பின் moisturizing cream தடவினால் நல்லது. இவ்வாறு பதினைந்து நாள் செய்தால் போதும். " Skin பிராப்ளமா? எனக்கா?" என்று கேட்பீர்கள்.

குப்பைமேனி மூட்டு வலியை கூட குறைக்கும். தோல் பொலிவை கூட்டும்.

குப்பைமேனி இன்னமும் பல வியாதிகளை குணப் படுத்தக் கூடியது.

குண்டலம், குண்டலமாக அதன் விதைகள் பலஅடுக்குகள் கொண்டதாக இருக்கும். இலை அடுக்குகளுக்கு இடையில் இந்த விதை அடுக்குகள் இருக்கும்.


குப்பைமேனி இலைகள் - இரண்டு கைப்பிடி அளவு.

தேங்காய் எண்ணெய் - 250 மி.லி.


விளக்கெண்ணெய் - 3 டீஸ்பூன்.



குப்பைமேனி இலைகள் ஆயும் போது கைகள் லேசாக அரிப்பது போல் இருக்கும். பயப்பட வேண்டாம். சிறிது நேரத்திலே சரியாகி விடும்.

குப்பைமேனி இலைகளை கழுவி, ஆய்ந்து கொள்ளவும். தண்ணீர் உலர்ந்ததும் மிக்சியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும். அறைக்கும் பொது தண்ணீர் விட வேண்டாம். இலைகளில் இயற்கையாக உள்ள நீர் சத்தே போதும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்கு கலக்கவும். பின், அரைத்த குப்பைமேனி விழுதையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை வாணலியில் கொட்டி கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிட நேரம் கொதிக்க விடவும்.

அடுப்பை அணைத்து கொதித்த எண்ணெய் கலவையை ஆற வைக்கவும்.

இப்போது குப்பைமேனி தைலம் தயார்.


0 comments:

 
back to top