இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது.
இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து ஆக்ஸஸ் செய்யும்படி வடிவமைக்கபட்டிருப்பதால் இதனை அழிக்கவும் உலகம் முழுவதும் எங்கிருந்து வேன்டுமாணாலும் செயல்பட முடியும். இதனால் சர்வர் ஹேக் அல்லது சர்வரை கிராஷும் செய்ய முடியும்.
இதை கவனத்தில் கொண்டு இப்போது WWW இல்லாமல் / சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் – URL இல்லாமல் ஒரு புதுவகை இணைய வழியை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் உருவாக்கியுள்ளது. இது என்ன?
இதன் பேர் பர்ஸூட் இன்டர்னெட். இதுக்கு இணையம் முகவரியான வெப் தள முகவரி அல்லது சர்வர் தேவையில்லை.. சாதாரணமாக இப்போது யாஹூ என்னும் இணையதளத்துக்கு செல்ல நீங்கள்www.yahoo.com என டைப் செய்தால் அதன் யூஆர் எல் என்னும் யூனிவர்ஸல் ரிஸோர்ஸ் லொக்கேட்டர் அந்த முகவரிக்கு தேடி எடுத்து செல்லும். அங்கே சர்வர் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் தேடுதல் அது இன்டர்னெட் பாக்கெட்களாய் மாறி அங்கே போகும். இது தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் ஆகும்.
நிறைய பேர் நினைக்கிறார்கள்www.XXXX.in போட்டால் இந்தியாவிலே இந்த சர்வர் இருக்கிறது என்று ஆனால் இந்த முகவரிக்கு கூட அமெரிக்காவில் தான் அனேக சர்வர் இருக்கும் என்று பலருக்கு தெரிவதில்லை. இது இந்தியாவின் வியாபாரம் செய்கிறேன் என்ற இணைய அடையாளதுக்கு மட்டும் தான் இந்த முகவரி. இந்த பர்ஸூட் இன்ட்டர்னெட் கிட்ட தட்ட டோரன்ட் வகையில் தான் வேலை செய்யும் இதில் உள்ள பாக்கெட் wwwஎன்று இல்லாமல் தேவையான ஆட்களுக்கு மட்டும் செல்லும்.
அது போக தேடு வரிசையில் உலகில் எங்கு எங்கு இதை தேடுகிறார்களோ அவர்களுக்கு காட்டும் முறை இந்த எளிய முறை வீடியோவை பார்த்தால் இது எவ்வளவு பாதுகாப்பு மற்றும் வேகம் என உணர்வீர்கள். இது இருந்தால் இந்தியன் ரயில்வே – இந்திய அரசின் இணையசேவைகள் சாரி ஓவர் லோடு அல்லது 404 எரர் காட்ட சான்ஸ் இல்லை. இதயெல்லாம் விட முக்கியமாக உளவு / களவு நிறைய குறையும் சான்ஸ் மற்றும் இணைய வேகம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.
– Video Link -
http://vimeo.com/37299318
0 comments:
Post a Comment