ஆண்டுதோறும் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப் பட்டோர் பட்டியலை அறிவிப்பது வாடிக்கை. அந்த வகையில் தற்போது http://www.google.com/trends/topcharts என்னும் இணையத்தில் இந்தாண்டு யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் முதல் இவரைப் பற்றி மிக அதிகமானவர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
கூகுள் இணையதளத்தில் 2013 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திற்கு வந்ததற்கு ‘தலைவா’ படப் பிரச்சினைதான் முக்கிய காரணம் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. ‘தலைவா’ படம் வெளியாகத் தாமத மானதைத் தொடர்ந்து அரசுடன் அவருக்கு பிரச்சினை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து வலைத்தளங்களிலும் அப்படத்தைப் பற்றியும், விஜய்யைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதோடு பல்வேறு அரசியல் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.அரசியல் சார்ந்த படம், வெடி குண்டு மிரட்டல்கள் என ‘தலைவா’ படத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டதும் அவரைப் பற்றி இணையதளத்தில் தேட முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான்கானும், நடிகையாக வழக்கம்போல் காத்ரினா கைஃபும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment