விஜய்யின் ஜில்லா படத்தை பார்த்த சென்சார் போர்டு 3 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.
பொங்கல் விருந்தாக வரும் விஜய்யின் ஜில்லா படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது.படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் 3 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ள இரண்டு காட்சிகளுக்கு கத்தரி போடப்பட்டுள்ளது.
மேலும் மதுரை பக்கத்து கெட்ட வார்த்தை வரும் ஒரு காட்சிக்கும் கத்தரி போடப்பட்டுள்ளது.
ஜில்லா தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



4:36 PM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment