- சராசரியாக ஒரு கோழி ஆண்டொன்றுக்கு 228 முட்டைகள் இடும்.
- ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.
- உலகில் மொத்தமுள்ள விஞ்ஞானிகளில் 50% பேர் ராணுவத் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
- மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா
- இரண்டாம் உலகப் போரில் மிக அதிகளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்த நாடு, ரஷ்யா
- விலங்குகள், பறவைகள் இடும் முட்டையின் எடையில் 12 சதவீதத்தை அதன் ஓடுகள் கொண்டிருக்கும்.
- மிக அதிக மொழிகளைக் கொண்ட நாடு, பப்புவா நியூ கினியா
- தோட்டத்தில் வளரும் மண்புழுக்களின் தலையில் 248 தசைகள் உண்டு
- மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ)
- கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு, நெதர்லாநது.
- உலகின் விலை உயர்ந்த நகரம் என்ற பெருமையை, டோக்கியோவிடமிருந்து ஹாங்காங் தட்டிப் பறித்துள்ளது.
- உலகிலேயே, பணக்காரர்களின் நகரம் என்றழைக்கப்படும் ஹாங்காங்கில் தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
- மின்னல் தாக்குவதால் அதிக சேதங்களை அடிக்கடி சந்திக்கும் பகுதிம் அமெரிக்காவின் ஃபுளோரிடா.
- பாலைவனங்களே இல்லாத கண்டம், ஐரோப்பா.
- துருப்பிடித்த பின் இரும்பின் எடை மேலும் அதிகரிக்கும்.
- உலகிலுள்ள விஞ்ஞானிகளில் 50 சதவீதம் பேர் ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- ஒவ்வொரு நாளும், 150 வகையான பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. எவ்வளவு குளிரூட்டினாலும், திரவ எரிவாயு உறையாது.
- ஈ தனது உணவை உண்ட பின், அதை வெளியே துப்பி விட்டு மீண்டும் உண்ணும்.
- தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது.
- தேசியக் கொடியின் உயரத்துக்கு இணையாக, மாநிலத்தின் கொடியும் பறக்கும் ஒரே இடம், அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ்.
Thursday, August 22, 2013
பொது அறிவு தகவல் துளிகள்...
எளிய அன்றாட வாழ்விற்கான மருத்துவ குறிப்புகள்!
விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
கால் தடுமாறி பிசகிவிட்டால் உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா? நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா? என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
ஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி?
ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம்.
ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.
பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.
மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.
ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.
மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.
ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.
ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.
ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.
அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.
நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.
டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்.
ஹைக்கூ கவிதைகள்...
தெருவிளக்கு:
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு..
அளவீடு:
நீந்தி நீந்தி சோர்ந்து விட்டது
தொட்டியை அளவெடுக்கிறது
மீன்தொட்டியில் தங்கமீன்!
தேசிய கீதம்:
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!
மாற்றம்:
வசந்தம்
வேலையின்றிக் கிடக்கிறது
பனைவிசிறி...
உழைப்பு:
விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
கடிகார முட்கள்.
நட்சத்திரம்:
யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்...
ஏக்கம்:
பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.
பனித்துளி:
பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வைபிம்பங்கள்...
மணிக்கூண்டு
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு..
அளவீடு:
நீந்தி நீந்தி சோர்ந்து விட்டது
தொட்டியை அளவெடுக்கிறது
மீன்தொட்டியில் தங்கமீன்!
தேசிய கீதம்:
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!
மாற்றம்:
வசந்தம்
வேலையின்றிக் கிடக்கிறது
பனைவிசிறி...
உழைப்பு:
விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
கடிகார முட்கள்.
நட்சத்திரம்:
யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்...
ஏக்கம்:
பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.
பனித்துளி:
பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வைபிம்பங்கள்...
மணிக்கூண்டு
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை



4:48 PM
Unknown