.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 5, 2013

இந்திய எல்லையில் ரேடார் நிலையம அமைத்த சீனாவின் தொடரும் அத்துமீறல்!

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் ரேடார் நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள தவூலத்பெக்கில் தரையிறங்கும் இந்திய விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் நிலையத்தை சீனா அமைத்து வருவதாக கூறப்படுகிறது.




nov 5 - china


எல்லைப் பிரச்சனை தொடர்பாக அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், தாங்கள் அமைத்தது வானிலை மையம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும், ரேடார் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியா கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


China sets up radar stations in Ladakh to spy on Indian warplanes

******************************************************


 With IAF now able to operate C-130 Hercules transport aircraft at high-altitude Daulat Beg Oldie (DBO) sector in Ladakh, China is reported to have built a radar station on its side of the border ostensibly to monitor movement of Indian planes over the area.

மெயில் அனுப்ப போறீங்களா? இதெல்லாம் கவனத்தில் வச்சுக்கோங்க!

இன்றைய உலகில் அனைத்து அலுவலக மற்றும் வெளியுலக செயல்களுக்கு முக்கிய பங்காற்றுவது மின்னஞ்சல் தான்.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளிஉலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்.

தகவல்களை அனுப்புவது எளிதாகிறது, இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது.

ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும்.

எனவே மின்னஞ்சலை அனுப்பும் முன் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் மின்னஞ்சலை பொறுத்தவரை அவற்றை அனுப்பி விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1. பொதுவாக மின்னஞ்சல்களில் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை.

தெரிந்தவர்களுக்கு அனுப்பும் போதுதான் பிழைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் ஒன்றும் தவறில்லை.

முன்பின் தெரியாதவர்களுக்கு அனுப்பும் பொழுது எந்தப் பிழைகளுமின்றி அனுப்புங்கள், இதற்காகவே இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வேர்டின் ஸ்பெல் செக்கர்கள் போன்று நமக்கு உதவும் வகையில் தங்கள் கிளையண்ட் புரோகிராம்களை அமைத்துள்ளன. எனவே அவற்றை நம் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அனுப்ப பயன்படுத்தலாம்.

2. மின்னஞ்சலை தயாரித்து முடித்தவுடன் அதைத் திரும்பவும் படியுங்கள். சொல்ல வந்த கருத்துக்கு மாறான கருத்து கொண்ட கடிதம் உங்களிடம் இருந்து சென்று விடக் கூடாது.

புரியாத கருத்து கொண்ட கடிதமும் சென்று விடக் கூடாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பிழை இருக்காது. ஆனால் அது வேறொரு பொருள் தருவதாக, அல்லது நேர்மாறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

நீங்கள் ஒரு மூன்றாவது நபர் குறித்து எழுதி இருப்பீர்கள். ஆனால் படிப்பவர் தன்னைப் பற்றி எழுதியதாக எண்ணம் கொள்ளும்படி இருக்கக் கூடாது.
எனவேதான் அனுப்புவதற்கு முன்பு கடிதத்தை மீண்டும் படிக்க வேண்டும். யாருக்குப் பதில் போய் சேர வேண்டுமோ அவருக்கு மட்டும் பதிலை அனுப்பி வையுங்கள். தேவையில்லாமல் Reply All பட்டனை அழுத்தி உங்கள் பதிலை எல்லாருக்கும் அனுப்பி வைக்காதீர்கள்.

3. குறிப்பாக நியூஸ் குரூப், மெயிலிங் லிஸ்ட் போன்றவற்றில் Reply All பட்டனைப் பயன்படுத்தாதீர்கள்.

மின்னஞ்சல் சேவையில் மட்டும் மிக மிக தேவைப்பட்டால் மட்டுமே Reply All பட்டனை அழுத்துங்கள்.

4. கோபத்தில் மின்னஞ்சலை தயாரிக்காதீர்கள். அப்படியே தயாரித்தாலும் உடனே அதை அனுப்பாதீர்கள்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து கோபம் தணிந்த பின்பு, மின்னஞ்சலை படித்துப் பார்த்து அனுப்புங்கள், புண்படும்படியாக எழுதியவற்றை நீக்கி பின்பு அனுப்புங்கள்.

5. மின்னஞ்சல் என்பது வெறும் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே நீங்கள் சாதரணமாக அனுப்புகிற ஒன்றை ஒருவர் தவறுதலாக புரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர்க்க Smileys எனப்படுகிற அடையாளங்களை சேர்த்தால் நன்று.

6. உரியவருக்குதான் அனுப்புகிறீர்களா என்பதை கவனியுங்கள். ஏதோ நினைவில் மின்னஞ்சலைத் தயாரித்து தொடர்பில்லாத ஒருவருக்கு அனுப்புவது மிகவும் தவறாகும்.

ரகசியம், தனிப்பட்ட விஷயங்களை கொண்ட மின்னஞ்சல்கள் போன்றவற்றை அனுப்பும்போது பெறுநருடைய முகவரியைச் சரி பாருங்கள்.

பூசணிக்காயில் உலக சாதனை!


மிகப்பெரிய பூசணிக்காயை துடுப்பு படகாக்கி, 100 மீட்டர் தூரம் கடந்து சென்று, பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். 


270 கிலோ எடையுள்ள ராட்சத பூசணிக்காய்க்குள் அமர்ந்தபடி, இங்கிலாந்தின் போர்ட்ஸ்மோவுத் பகுதியில் உள்ள நீர் நிலையில் இந்த சாதனையை திமித்ரி என்ற இளைஞர் நிகழ்த்தியுள்ளார். 
 
100 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் கடந்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 
 
சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ராட்சத பூசணிக்காய் கண்காட்சியில் இந்த பூசணிக்காயை வாங்கியதாக தெரிவித்த திமித்ரி, இதன்மூலம் புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். 
 
இதனிடையே, இங்கிலாந்தின் மற்றொரு பகுதியில் விரைவில் தொடங்கவுள்ள ஹாலோவின் திருவிழாவுக்காக, பூசணி பழங்களால் ஆன குடில்கள் மட்டுமின்றி, பயமுறுத்தும் உருவங்களும், வேடிக்கை காட்டும் முகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு வியக்கின்றனர்.

அதுதான் அஜீத்: ஆர்யா பெருமிதம்!



அஜீத், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஜீத் எப்போதும் என் பேவரைட். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ஃபேன். அவருடன் நடித்தபோது, சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார். அதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னுடன் அடித்த அரட்டையெல்லாம் ஒரு நல்ல நண்பரை எனக்கு ஆரம்பம் பெற்றுத் தந்துள்ளது.


அஜீத்துக்கு காயம் ஏற்பட்ட போது முழு டீமும் கலங்கிப்போச்சு. டூப் போடாம அஜீத் நடிச்சாரு. எதிர்பாராதவிதமா அந்த விபத்து நடந்துருச்சு. ஆனா ஒண்ணு சொல்லணும் அஜீத்தோட தில் மெய்சிலிர்க்க வச்சுது. படத்தில் என்னுடைய நடிப்பை அஜீத் பாராட்டியது அவருடைய பெருந்தன்மையை காட்டுது.


படத்துல தனக்கு இணையா இன்னொரு ஹீரோ நடிக்கிறது எந்த சூப்பர் ஸ்டாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா அதை ஏத்துக்கிட்டது மட்டுமில்ல. எனக்கு முழு சப்போர்ட்டும் பண்ணினாரு. பட விளம்பரத்துல தன்னோட பெயரோடு என் பெயரும் வர வச்சாரு. அதுதான் அஜீத் என இவ்வாறு ஆர்யா கூறினார்.
 
back to top