.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 7, 2013

மணப்பெண் கை வண்ணத்தில் திகிலூட்டிய திருமண கேக்!

பலகாலமாகவே பிறந்த நாள் முதல் திருமண விழா வரை தனி மனித வாழ்வின் அனைத்து முக்கிய வைபவங்களிலும் கேக் இடம் பிடித்து விடுகிறது.இது 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சிற்றுண்டி உணவாம். இங்கிலாந்தில் அப்போது நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப இத்தகைய கேக் தயாரிக்கப்பட்டு வந்தது. அதை அடிப்படையாக வைத்தே தற்போதும் கேக்கில் மதுபானங்கள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு சிறப்பு கலவையாக உருவாக்கப்படுகிறது.


அத்துடன் ஆங்கிலேயர் தொடக்க காலத்தில் கேக் தயாரித்தபோது அதில் மாமிச வகைகளையும் பயன்படுத்துவார்களாம். மதுபானங்களில் உள்ள ஆல்கஹாலில் அந்த மாமிசங்கள் கரைந்து புதியதொரு சுவையை ஏற்படுத்தித் தந்துள்ளதாம்.


பேக்கிங் முறையில் தயாரித்தால் அதற்கு பெயர் கேக். அதையே ஆவியில் வேக வைத்தால் புட்டிங். இது ஆங்கிலேயர்களின் கலாசாரம். நமது ஊரிலும் புட்டிங் உண்டு, ரைஸ் கேக் என்ற பெயரில். அது என்ன என்கிறீர்களா, நம்ம ஊர் இட்லிதான்.


nov 7 - cake shock



இப்படி உற்றார், உறவினர், நண்பர்களை மகிழ்விக்கும் விதமாக ‘கேக்’ வெட்டி திருமண நிகழ்ச்சியை கொண்டாடுவது தெரிந்த விஷயம்தான்::இந்நிலையில் அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் டேவிட் சைடுசெர்ப்–நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருந்தார்கள்.


அப்படி என்ன? என்றால் ஆண்–பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்று இவர்களது முக சாயலில் கேக்கை தயாரித்து வைத்ததே காரணமாகும். அத்துடன் அதன் அருகில், ‘மரணம் வரையில் எங்களுக்குள் பிரிவு இல்லை’ என்ற வாசகத்தையும் எழுதி வைத்தனர்.இந்த கொடூர காட்சியை பார்த்து முதலில் திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அதற்கான விளக்கத்தை கூறியதை அடுத்து சமாதானம் அடைந்தனர்.


அதிலும் மணப்பெண் நதாலேயே இந்த ‘கேக்’கை தன்னுடைய கைப்பட தயாரித்தவர் ஆவார். அக்கலையில் வல்லுனரான அவர் சுமார் 40 மணிநேரம் செலவிட்டு அதை வெண்ணிலா, சாக்லெட் சுவையில் பட்டர்கிரீம் கொண்டு தயாரித்தார். மணமக்கள் மற்றும் விருந்தினர்களை இந்த கேக் கவர்ந்தாலும் அவருடைய பாட்டிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.


இந்த வித்தியாச கேக் தயாரிக்கும் யோசனை ஏற்பட்டது குறித்து நதாலே கூறும்போது, ‘கணவர் டேவிட் திகில் சினிமாப்பட பார்ப்பதில் தீவிர ரசிகர். அவரை மகிழ்விக்கவே இதை தயாரித்தோம். இது அனைவரையும் வியக்க வைத்ததேன்னவோ உண்மை’ என்று கூறினார்.


Couple, Natalie and David Sideserf, put heads together for Austin, Texas wedding

********************************************


 Natalie Sideserf, 28, is a cake artist. She says her husband David, 30, is a big fan of horror movies.”We were watching a horror movie, and I was always interested in sculpting lifelike cakes, especially in the face, so I thought, “How neat would it be if I did our severed heads?’” Mrs Sideserf said.

அதிக கோடீசுவரர்களை கொண்ட நாடுகளில் 6-வது இடத்தைப் பிடித்தது இநதியா!

பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை மீறி பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 170 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.அதே சமயம் இந்திய கோடீஸ்வரர்களில் 3 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிக குறைவு என்று வெல்த் எக்ஸ் மற்றும் யுபிஎஸ் என்ற பன்னாட்டு நிதி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.


nov 7 -Indian-Economy.



இந்த ஆண்டில் இதுவரை 18 புதிய மெகா பணக்காரர்களை உருவாக்கி, புதிய கோடீஸ்வரர்களை ஏற்படுத்துவதில் ஆசியா முதலிடம் பிடித்துள்ளது.உலக பண்க்காரர்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா 6-வது இடத்தில் உள்ளது..


ஆசியாவில் மட்டும் மொத்தம் 44 ஆயிரத்து 505 கோடீஸ்வரர்கள் உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.இந்திய கோடீஸ்வரர்களில் 3 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிக குறைவு.இந்தியாவில் உள்ள கோடீசுவரர்களில் 72 சதவீதம் பேர் கல்லூரிகளில் படித்தவர்களாகவும் அல்லது ஒரு பட்டபடிப்பு முடித்தவர்களாகவும் உள்ளன்ர்.


World gets richer: Record 2,170 billionaires!

*************************************


 Notwithstanding the current economic uncertainty, Asia has recorded the largest increase in its billionaires club in the world with 18 new billionaires in 2013, making it the fastest-growing region, a report says.

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


nov 7 - sugar chart.1


தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

அது சரி! சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?எப்படி என்கிறிர்களா?

முதலில் சாதாரண ரத்த பரிசோதனை பற்றி பார்ப்போம்:ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் – அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 – அதற்கு கீழ் இருந்தால் ‘இயல்பான நிலை’ என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.


இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும்குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.


2 ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை:முன்னரே சொன்னது போல் நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).
                            

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்- மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

nov 7 - sugar chart
 

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.

சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போம்

மெட்டல் பொருட்கள்:

சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.

வாணலி:

பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம். ஆனால், இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால், அடிபிடிக்காமல் இருக்கும்.

அடிப்பிடித்தல்:

வெங்காயம் வாணலியில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது ஏதேனுமூ அடி பிடித்துவிட்டால், அவை நீண்ட நாட்கள் போகாமல் இருக்கும், அந்த கறை நீங்குவதற்கு, சிறிது வெங்காயத்துண்டுகளை எடுத்து, அந்த வாணலியில் தேய்த்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கறைகள் நீங்கிவிடும்.

கிரில் மிசின்:

வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும் வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து, நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.

நாற்றம்:

வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது எவ்வளவு நேரம் தான் மூக்கை மூட முடியும். ஆகவே அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்.

 
back to top