.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 22, 2013

எள் - சுண்ணாம்புச் சத்தின் களஞ்சியம்

100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ், தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன.

முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.

எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.

தீப்பட்ட இடத்தில் - பீட்ரூட்

தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

அம்பிகாபதி - அமராவதி?

கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியும் அம்பிகாபதியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இஃது அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. எனவே, குலோத்துங்கனுக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.

“எப்பொழுதும் தன் மகளின் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதி, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல் இறைவன் மீது நுாறு பாடல்கள் ஒரே முறையில் தொடர்ந்து பாடி முடிக்கவேண்டும். இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால் அம்பிகாபதிக்கு அமராவதியை மணமுடிப்பது பற்றிச் சிந்திக்கலாம்” என்று குலோத்துங்கன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்தான்.

குறித்த நாளில் அனைவரும் கூடினர். அம்பிகாபதி சிற்றின்பம் கலங்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான். மறைவில் இருந்த அமராவதி அம்பிகாபதி ஒவ்வொரு பாடல் பாடி முடித்ததும் எண்ணி வைக்கப்பட்டிருந்த நுாறு மலர்களில் ஒவ்வொரு மலராக எடுத்து வேறுபடுத்தி வைத்தாள். கலத்தில் இருந்த நுாறாவது மலரும் தீர்ந்தது. அம்பிகாபதி நுாறு பாடல்களை வெற்றிகரமாக பாடி முடித்தாயிற்று என்னும் மகிழ்ச்சியில் மறைவில் இருந்த அமராவதி எட்டிப் பார்த்து விடுகிறாள். அவள் முகத்தைப் பார்த்தவுடன் தன்னை மறந்த அம்பிகாபதி,

சற்றே பருத்த தனமே குலங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்
நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்
பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே.

என அமராவதியை வருணித்துப் பாடி விடுகின்றான். சோழன் வைத்த சோதனையில் அம்பிகாபதி கடைசியில் மயிரிழையில் தோற்றுப் போனான். ஆம்! அம்பிகாபதி பாடிய காப்புச் செய்யுளையும் போட்டிச் செய்யுளுள் ஒன்றாகக் கொண்டு எண்ணிய அமராவதி 99 வது போட்டிச் செய்யுள் முடிந்தவுடனே 100-வது செய்யுள் முடிந்தது என நினைத்து எட்டிப் பார்த்தாள்.

உண்மையில் சி்ற்றின்பம் கலக்காமல் 99 செய்யுள் பாடி இன்னும் ஒரு செய்யுள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் அம்பிகாபதி அமராவதியைப் பார்த்துப் பாடிய பாடல் மிகப்பெரிய தலைக்குனிவை கம்பருக்கு ஏற்படுத்தியது. தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்த மன்னனுக்குப பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. சோதனையில் தோற்ற அம்பிகாபதியும், கம்பரையும் சோழ நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று கூறி நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடுகின்றான்.

back to top