.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 13, 2014

ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!



பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகியுள்ள ஜில்லா மற்றும் வீரம் படங்கள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன.

பொங்கல் விருந்தாக அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டுமே பெரிய நடிகர்களின் படம் என்றாலும் ஜில்லாவும், வீரமும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.

தங்கள் தல, தளபதி படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் முண்டியடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் பிரிய நடிகர்களின் படத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வீரம், ஜில்லா படங்களை எடுத்துள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸான 3 நாட்களுக்குள் இணையதளத்தில் இந்த இரண்டு படங்களும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

இணையதளத்தில் ஜில்லா, வீரம் படத்தை பார்த்துவிட்டோமே, பார்க்கப் போகிறோமே என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீல் அந்து போச்சிடா..! ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள்..!

பட்டைய கிளப்பும் ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள்


பொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் “வீரம்”, விஜய்யின் “ஜில்லா” படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

பஞ்ச் வசனம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியேரது படங்களில் பஞ்ச் கண்டிப்பாக இடம்பெறும். அதுபோலவே சமீப காலங்களாக அஜீத், விஜய் ஆகியோரது படங்களிலும் பஞ்ச் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும வீரம், ஜில்லா படங்களில் இந்த பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சில உங்களுக்காக,

“வீரம்” பஞ்ச் வசனங்கள்

• சந்தோஷம் வந்தா நாலுப்பேரோட பகிர்ந்துக்கணும். கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கணும். அவன்தான் மனுஷன்.

• சுடுக்காட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டாங்க. வழியைச் சொன்னேன். இந்நேரம் போய் சேர்ந்திருப்பாங்க.

• நம்மக்கூட இருக்கிறவங்களை நாமப் பார்த்துகிட்டா, நமக்கு மேல இருக்குறவன் நம்மைப் பார்த்துப்பான்.

• எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

• நீ என்ன ஜாதின்னு நினைக்கிறீயோ நான் அந்த ஜாதி. நீ தேவன்னு நினைச்சா நான் தேவன், நீ நாடார்னு நினைச்சா நான் நாடார், நீ தலித்னு நினைச்சா நான் தலித், நீ வன்னியர்னு நினைச்சா நான் வன்னியர். நான் உலகத்துல இருக்கிற ஒரே ஜாதி. உழைக்கிற ஜாதி’

“ஜில்லா” பஞ்ச் வசனங்கள்

• எதிரிய எதிர்ல வச்சுக்கலாம்- ஆனா துரோகிய தூரத்துலக்கூட வச்சுக்கக்கூடாது.

• ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒண்ணு குணமாகிப் போகனும், இல்ல பொணமாகிப் போகனும்.

• தீயிலயும், பகையிலயும் மிச்சம் வைக்கக்கூடாது.

• சிவனையும் பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போயிட்டே இருப்பேன்.

• நாட்டுல வண்டி ஓட்டத் தெரியாதவன் கூட உண்டு. பிகரை ஓட்டத் தெரியாதவன் யாரும் இல்ல.

• போலீஸ் அடிச்சுப்பார்திதிருப்பே. போலீசையயே அடிச்சு பார்த்திருக்கியா?.

• சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன். ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ணமாட்டேன்.

• மத்தவங்ககிட்டே தோத்தாத்தான் தோல்வி, சொந்தப்பையன்கிட்டே தோத்தாலும் அது வெற்றிதான்.

‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடல் கட்: ஆத்திரத்தில் திரையரங்கை சேதப்படுத்திய ரசிகர்கள்..!



பொங்கலையொட்டி கடந்த 10ம் தேதி அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா படங்கள் திரைக்கு வந்தன.

இரண்டு படங்களுமே நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. அதே சமயம் வீரம் படம் 2 மணி நேரம் 40 நிமிடமும் ஜில்லா 3 மணி நேரமும் ஓடக்கூடியதாக இருந்தது. ஜில்லா படத்தின் நீளம் குறித்து விஜய் ரசிகர்களும் விமர்சகர்களும் குறை தெரிவித்தனர்.

 இதையடுத்து உடனடியாக படத்தின் 10 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. அந்த பத்து நிமிட காட்சிகளில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலும் தூக்கப்பட்டு விட்டது.

இதனிடையே நீக்கப்பட்ட பாடலை மீண்டும் சேர்க்கும்படி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும் இயக்குனர் நேசனுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் பெரம்பலூரில் திரையரங்கு ஒன்றில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடல் காட்சி ஒளிபரப்பாகாததால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் இருக்கைகள் மற்றும் திரையை சேதப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து அடுத்த காட்சிகளில் காவல் துறையினரின் தீவிர பரிசோதனைக்குப் பிறகே ரசிகர்கள் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜில்லாவில் க்ளைமாக்ஸுக்கு முன் இடம்பெறும் அந்தப்பாடலில் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்கள் அற்புதமாக இருக்கும்.

இந்த பொங்களுக்கு - சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை...




தேவையான பொருட்கள்:

தோல் நீக்கிய முழு உளுந்து – ஒரு ஆழாக்கு,

சாம்பல் பூசணிக்காய் – ஒரு துண்டு,

கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிது,

பெரிய வெங்காயம் – ஒன்று,

பச்சை மிளகாய் – ஐந்து,

உப்பு – சுவைக்கு,

பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை:

வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வடை பக்குவத்தில் கல்லுரலில் நுரைக்க அரைத்துக் கொண்டு துருவிய வெள்ளை பூசணிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள், பச்சை மிளகாய்த் துண்டுகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் சூடாகப் பொரித்து தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
 
back to top