தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த வருடம் மட்டும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டதில் தனுஷுற்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம். தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம்தான் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல் சிவகார்த்திகேயனின் மார்கெட் உயரச் சென்றதோடு மட்டுமல்லாமல் கோடிகளை சம்பளமாகவும் பெறத் துவங்கிவிட்டார்.
ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘மரியான், நய்யாண்டி’ இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் தனுஷின் நெருங்கிய வட்டாரங்களுக்கு அவர் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுவது பிடிக்கவில்லையாம்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்கள் எல்லாமே நீங்கள் நடிக்க வேண்டிய படங்களைப் போலவே உள்ளன. உங்களுக்குப் போட்டியாக நீங்களே ஒருவரை உருவாக்கி, தோல்வியை சந்தித்துக் கொள்கிறீர்களே என்கிறார்களாம். இது, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் லேசாகப் புகைய ஆரம்பித்துள்ள இந்த விவகாரம் தீப்பிடித்து எறியும் என்கிறார்கள்