
மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம். நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள். பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். ஆனால் இப்போது நயன்தாராவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. பழையபடியே யாருடனும் அதிகம் பேசுவதில்லை. மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார் என்கிறது ஸ்டுடியோ சரவுண்டிங்.
சிம்புவுடன் காதல் முறிந்த பிறகு, உடைந்து போன அவரது இதயத்தை ஒட்ட வைத்தவர் பிரபு தேவா. திருமணம் வரை இவர்கள் காதல் போனது. பிறகு பிரபு தேவாவை நயன் பிரிந்ததும் நண்பராக மட்டுமே இருந்த ஆர்யா, நயனின் நெருங்கிய நண்பராகிப்போனார். இது எல்லாம் நடந்தது ராஜா ராணி ஷூட்டிங்கிற்கு இடையேதான். இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு டாக் பரவிப்போனது. அந்த சமயத்தில்தான் நயன், மீண்டும் பழைய நயனாக மாறி கலகலப்பாக இருந்தார். வழக்கம்போல் ஆங்கில மீடியாவுக்கு மட்டுமாவது பேட்டிகளை கொடுத்தார். ராஜா ராணி ஷூட்டிங் முடிந்தபோதுதான் வந்தது சோதனை. அனுஷ்கா ரூபத்தில். ஐதராபாத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது தெரிந்து நயன்தாரா நொறுங்கிப்போனார் என்கிறது அவருக்கு வேண்டப¢பட்ட வட்டாரம். தன் மீது சிறிது அன்பு செலுத்துபவர்கள் மீது கண்மூடித்தனமாக பதிலுக்கு அன்பு செலுத்திவிடுகிறார் நயன். அவர்களை அதிகம் நம்பிவிடுகிறார். யதார்த்தம் வெளிப்படும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர் இருக்கிறார் என்கிறது நயனுக்கு வேண்டப்பட்ட அதே வட்டாரம்.



5:11 PM
Unknown
Posted in:
0 comments:
Post a Comment