இந்தியாவின் சாலை போக்குவரத்தில், வாகனங்கள் சாலையின் இடது புறம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும், ஒரு சில நாடுகளைத் தவிர சாலைப் போக்குவரத்து இடது புறமாகவே உள்ளது. இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போக வேண்டும்.
இங்கிலாந்தின் முதல் விக்டோரியா மகாராணி காலத்தில் இந்த பழக்கம் வந்தது. அப்போது அரச குடும்பத்தினரும், நிலச்சுவான்தாரர்களும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் போவது வழக்கம். இந்த வண்டிகளில் குதிரை ஓட்டுபவர் வண்டியின் வலது புறம் உட்கார்ந்திருப்பார். இது குதிரைகளை கையாளுவதற்கு வசதியாகவும், சுலபமாகவும் இருந்தது. மேலும் அதுவே ஒரு பாரம்பரிய மரபாகவும் மாறியது.
குதிரைகளை அதட்டி ஓட்டுவதற்கு கையில் உள்ள நீளமான சவுக்கை சுழற்றும் போது, அது சாலை ஓரத்தில் உள்ள மரக்கிளையில் சிக்கி சிறு சிறு விபத்துகள் ஏற்படுவதுண்டு. மேலும் அரச குடும்பத்தினர் பயணம் செய்யும் போது சவுக்கு சிக்கிக் கொண்டால், கால தாமதத்திற்கும், அரசரின் கோபத்திற்கும் ஆளாக நேரிட்டது. இதனால் சவுக்கு, சிக்காத அளவுக்கு வலது புறம் இடம் விட்டு சாலையில் இடது புறம் வண்டியை செலுத்தினார்கள்.
பின்பு பல ஆண்டுகள் கழித்து மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தபட்டவுடன், இதே முறை நடைமுறை படுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் இதே சாலை விதிமுறை கடைபிடிக்கப்பட்டது.
இப்போது உலகில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டுமே வலது புறத்தில் வாகனங்கள் செல்லும் விதி இருக்கிறது. அதனால் தான் அமெரிக்க வாகனங்களில் டிரைவர்களின் இருக்கை வலது புறத்தில் உள்ளது.
இந்தியாவில் இருந்து செல்பவர்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே அமெரிக்காவில் வாகனங்கள் ஓட்ட முடியும். ஏனென்றால் இடது புறம் ஓட்டி பழக்கப்பட்டவர்கள் வலது புறம் ஓட்டுவது சிரமம்.
0 comments:
Post a Comment