உணவுக்கும், பசிக்கும் நிறைய தொடர்பிருக்கிறது.
அது பற்றி நிறைய பழமொழிகளும் உள்ளன.
ஒவ்வொன்றும் அனுபவித்துக் கூறப்பட்ட வார்த்தைகளாகும்.
பழமொழியைப் படிப்போமா?
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே.
உண்டி சுருங்கின் பெண்டிருக்கு அழகு.
கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல.
பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.
கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.
ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.
தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
நொறுங்கத் தின்றால் நூறு வயசு.
கூழானாலும் குளித்துக் குடி.
சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?



2:57 PM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment