.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

கிசு கிசுவுக்கும் எனக்கும் என்னதான் சம்பந்தமமோ தெரியவில்லை: டாப்ஸி




2013 இல் சத்தமில்லாமல் சாதனை படைத்த நடிகை யாரென்று கேட்டால், அமலாபால், அனுஷ்கா, நயன்தாரா என்பீர்கள். அதுதான் இல்லை. அந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் டாப்ஸி. “குண்டல்லோ கோதாவரி’ தொடங்கி, “ஷாஸ்மி பட்டூர்”, “ஷேடோ’, “சகாசம்”, தமிழில் “ஆரம்பம்”, “முனி – 3 கங்கா” என்று படங்கள் தொடர்ச்சியாக இருக்கிறது. பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் வெள்ளாவி என்ன சொல்கிறார்…

அடிக்கடி, கிசு கிசுக்களில் சிக்கி விடுகிறீர்களே?

கிசு கிசுவுக்கும் எனக்கும் அப்படி என்னதான் சம்பந்தமமோ எனக்கே தெரியவில்லை. அந்தளவிற்கு என்னைப் பற்றிய கிசு கிசுக்கள் வெளியாகி விட்டன. முதலில், இதற்காக வருத்தப்பட்டேன். இப்போது, பழகி விட்டது. என்னைப் பற்றிய கிசு கிசு செய்திகளைப் படிக்கும்போது, எனக்கே, பயங்கர காமெடியாக இருக்கும். விழுந்து விழுந்து சிரிப்பேன்.

எந்த நடிகராவது உங்களிடம் பொய் சொல்லி உங்களைக் கவிழ்த்திருக்கிறாரா?
வேறு யார், ஆர்யாதான். படப்பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசாக கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, “நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய்’ என்பார். இதுபோல், நிறைய முறை, ஆர்யாவிடம்  ஏமாந்திருக்கிறேன். ரொம்பவும் நாட்டிபாய்.

சத்தமில்லாமல் நிறைய படங்களில் நடிக்கிறீர்கள் போல?
அப்படியெல்லாம் இல்லை. தமிழில் “ஆரம்பம்’ வரப்போகிறது. “முனி -3 கங்கா’ தமிழ் மற்றும் தெலுங்கில் வர இருக்கிறது. தெலுங்கில் “சகாசம்’ என்ற படம் வெளிவர உள்ளது. செப்டம்பர் இரண்டு புது படம் தொடங்குறேன். அக்டோபரில் என் இரண்டாவது ஹிந்திப்படம் தொடங்க இருக்கிறது. நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் சரியான வாய்ப்புகள்தான் அமையமாட்டேன் என்கிறது. நீங்களாச்சும் தமிழ் டைரக்டர்கிட்ட என்ன பத்தி நல்ல விதமா சொல்லுங்களேன்.

“கங்கா’ எப்படியிருக்கு?

வெரி பவர்புல் படம். பொதுவா நான் தைரியமான, போல்டான பொண்ணு ஆனால் பேய், பிசாசுன்னா கொஞ்சம் பயப்படுவேன்.  தனியாக படம் பார்க்னும்ன்னனா கூடஎனக்குப் பயம்தான். அதுவும் பேய் படம்னா கேட்கவே வேண்டாம். அடிக்கடி பக்கத்துல ஆட்கள் இருக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள்வேன். அப்படிப்பட்ட பொண்ணு பேய் படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்? நிறைய சீன்ல நிஜமாவே பயந்திட்டேன். செம திரில்லிங் பா.

தமிழ் நல்லா பேசுறீங்களே?

இது என்ன சில்லி கொஸ்டின். இவ்ளோ நாள் தமிழ் நாட்ல இருக்கேன். இதைக்கூட கத்துக்க மாட்டனா? அப்புறம் ஒன்னு சொல்லட்டா.. தமிழ்ப் பேசறது ரொம்ப ஈஸியா இருக்குப்பா. ஐ லைக் தமிழ்.

ஹன்சிகா உங்க இடத்தைப் பிடிச்சுட்டாங்களே கவனிச்சீங்களா?

அப்படியா…? அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே. அது குறித்து நான் கவலைப்படவும் இல்லை. ஹன்சிகா, தமிழில் மட்டும்தான், கவனம் செலுத்தி, நடிக்கிறாங்க. நான், அப்படி இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும், பிஸியாக நடிக்கிறேன். எனக்கு வர வேண்டிய படங்கள் எனக்குத் தான் கிடைக்கும். அதை யாரும், தட்டிப் பறிக்க முடியாது. இன்க்குளூடிங் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?

ஒன்லி அஜித்சார். அவர் பழகும் முறை, நடந்துகொள்ளும் விதம், அவர்கூட நடிக்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு. ஐ லைக் ஹிம்.

உங்களுக்கு ரொம்பப் பிடித்தது டான்ஸாமே?

ஆமாம் எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். 8 வருஷமா கதக் கத்துட்டு இருக்கேன்.  நிறைய பயிற்சி எடுத்திருக்கேன். இப்ப என்னோட யாரும் டான்ஸýல போட்டி போடலாம். ஐ யம் ரெடி.

 உங்களின் கனவு, ஆசை என்ன?


நான் சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள, மணிரத்னம் சார் படத்தில நடிக்காம, விடமாட்டேன். நான் இந்திய சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள இது நடக்கும். எந்த கேரக்டர்னாலும், எந்த மொழின்னாலும், நான் மணிரத்னம் சார் படத்தில நடிச்சே தீரணும். இதான் என் கனவு, ஆசை எல்லாம்.

உங்க பிளஸ் என்ன, மைனஸ் என்ன?

நான் ரொம்ப தைரியமான பொண்ணு. மனசில நினைக்கிறதை அப்படியே சொல்லிடுவேன். ரொம்பப் பேசுவேன். கரெக்டா இருப்பேன். கேமராக்குப் பின்னாடி எப்பவும் நான் நடிக்க மாட்டேன். ஓப்பனா இருக்க நினைப்பேன்.

மைனஸ்னா நிறைய இருக்கு. ஒன்று வேணும்னு நினைச்சா அடுத்த நிமிஷமே எனக்கு அது கிடைக்கணும். எதுக்காகவும் வெயிட் பண்ண மாட்டேன். பொறுமை கொஞ்சம் கம்மிதான். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கோபம் அப்படி வரும். இப்போதான் கொஞ்சம் குறைச்சி இருக்கேன். அப்புறம் முக்கியமா, எல்லாரையும் ஈஸியா நம்பிடுவேன். என்னை ஈஸியா ஏமாத்திவிடலாம். யாராச்சும் என்கிட்ட வந்து என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவேன். நான் இருக்கும் தொழிலுக்கு இது ரொம்ப டேஞ்சரான விஷயம். உடனே என்னை  இந்த விஷயத்தில் இருந்து மாத்திக்கணும் பார்க்கலாம்.

மனம் திறந்து யாருடன் நட்புடன் இருக்கிறீர்கள்?

இன்டஸ்ட்ரில இப்போ நான் யார் கூடவும் அதிகமா டச் வைச்சிக்கிறதில்லை. நயன்தாரா கூட நடித்ததால் மட்டும் அவருடன் சில விஷயங்களைக் கொஞ்சம் ஷேர் பண்ணிப்பேன். அவ்ளோதான். மத்தபடி யாரிடமும் நான் நட்புடன் இல்லை!

எதிர்கால திட்டம்?
சரியாக 10, 12 வருஷம் நல்ல நல்ல படங்களில் நடிச்சிட்டு, வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிடுனும்னு என்பதில் ரொம்பத் தெளிவான இருக்கேன். நிறைய வருஷம் நடிக்கணும் என்ற ஆசை இல்லை.

திருமணம்?

நான்தான் வீட்டில் பெரியவ. என் பெற்றோர் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ஆள் கிடைக்கணுமே. நான் விரும்புறவர், பெண்களை மதிக்கிறவராக இருக்கணும். என் அம்மா, அப்பா, என் தங்கை, என் குடும்பத்தை அவர் குடும்பமா பார்த்துக்கணும். ஹிருத்திக் ரோஷன் அளவிற்கு அழகெல்லாம் தேவை இல்லை. என் அளவுக்கு மேட்ச் ஆனா போதும். வெள்ள கலர், சிக்ஸ் பேக் இதெல்லாம் வேணாம். உண்மையான உணர்வுகளைப் புரிஞ்சுக்கிற, ஒரு நேர்மையான ஆண் கிடைக்கணும். அப்பதான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன்

0 comments:

 
back to top