எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் 'புறம்போக்கு' படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.
இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் 'பைனரி பிக்சர்ஸ்'ம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இதன் முதற் கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் குலுமணாலியில் துவங்குகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக ராதா மகள் கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.
இரண்டு ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் , ஒரு ஹீரோயின் தானாம். இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார், கார்த்திகா.
ஆர்யா, விஜய் சேதுபதி இருவருடனும் ஒரு டூயட் பாடலாவது இருக்கும் என்பதால், அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கைப்பற்றிவிடலாம் என்று நம்வுகிறாராம் கார்த்திகா.
தற்போது அருண்விஜய்யுடன் 'டீல்' படத்தில் கார்த்திகா நடித்துக் கொண்டிருக்கிறார்.



6:19 PM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment