.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, January 20, 2014

தனது ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல்..! - லிங்குசாமி



ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி ரன் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் லிங்குசாமி தனது படங்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமியின் வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் அஞ்சான் திரைப்படம் குறித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கமல்ஹாசன் “ இத்தன வருட சினிமா அனுபவத்துல என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன், ஆனா என்ன பண்ணனும்னு தெரியல” என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிவருகிறார்.

பாலிவுட்டில் ‘சுப்பிரமணிபுரம்’..!



இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது சசிகுமாரின் சுப்பிரமணிபுரம்.

கடந்த மூன்று வருடங்களில் தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம்.

கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன.
இந்தப்படத்தினை சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் பாதிப்பில் நிறைய படங்கள் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியாயின.

அனைவரையும் கவர்ந்த இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தனது எண்ணத்தை சசிகுமார் சமீபத்தில் தெரியப்படுத்தினார்.

இந்தியில் தானே ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை தன்னிடமே வைத்துள்ளார். பலர் கேட்டும் சுப்பிரமணியபுரத்தின் ரீமேக் உரிமையை அவர் தரவில்லை.

சுப்பிரமணியபுரம் இந்தி ரீமேக்கில் அனுராக் காஷ்யபும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் வசனத்தில் பங்களிப்பு செலுத்துவார் என தெரிகிறது.

மேலும், அனுராக்கின் தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புக்கு ஏன் இந்த வம்பு..?




சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி  என்பது போல் ஆகப்போகிறது நம்ம சிம்புவின் வாலு படத்தில் உள்ள லேட்டஸ்ட் சாங்.

புதுசு புதுசா புது ட்ரெண்ட்களை தன்னுடைய பாடல்கள் முலம் முதன்முதலில் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான்.

தன் வழியை பின்பற்றி இன்று  உலகளவில் சில பேர் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீண்ட நாள் கனவான லவ் அந்தம் என்ற ஆல்பத்தை மாபெரும் உலக இசைக் கலைஞர்  எகான் வைத்து எடுத்தும் முடித்து விட்டார்.

பிறகு என்ன? தற்போது நடித்து முடித்து இருக்கும் வாலு படத்தின் ஒரு பாடலில்  அவரின் வால் தனத்தை காட்டி விட்டார் சிம்பு.

தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

அதில் நயன்தாரா வேண்டாம், அண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்து உள்ளன என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

ஏற்கனவே எவன் டி உன்ன பெத்தன் பெத்தன் என்ற பாடலை ரசிகர்களின் மத்தயில் பலத்த வரவேற்பு பெற்றுது போல் இந்த பாடலும் மிக பெரிய ஹிட் ஆகும் என  நம்பிக்கை தெரிவித்து உள்ளார் சிம்பு.  இப் பாடலை சிம்புவின் பிறந்த நாளான பிப்வரி 3ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  விவகாரத்துக்கு பேர் போன சிம்பு விவரமான ஆளும் கூடங்க!!!!

வில்லனிடம் இருந்து ஹீரோவை காப்பாற்றிய நயன்தாரா…



பொதுவாக தமிழ்ப்படத்தில் கதாநாயகியை வில்லன் கடத்திக்கொண்டு சென்றுவிடுவார். ஹீரோ அவரை கஷ்டப்பட்டு பல சண்டைகள் போட்டு காப்பாற்றுவார். முடிவில் சுபம் என்றுதான் இதுவரை நாம் தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கின்றோம். முதல்முறையாக ஹீரோவை வில்லன் கடத்திக்கொண்டு செல்கிறார். அவரை பல சாகசங்கள் செய்து ஹீரோயின் காப்பாற்றுகிறார். இப்படி ஒரு கதைதான் தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடத்தப்பட்ட காதலனாக கணேஷ் வெங்கட்ராமனும், அவரை மீட்கும் காதலியாக நயன்தாராவும், கடத்தும் வில்லனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்த த்ரில்லிங் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது பெங்களூரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்குகிறது.

நயன் தாரா முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஜெயம் ரவியுடன் அவர் மோது அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளும் க்ளைமாக்ஸில் இருக்கின்றதாம். வில்லன் வேடத்தை அதுவும் நயன் தாராவுடன் மோதும் வில்லன் வேடத்தை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என ஜெயம் ரவியிடம் கேட்டால் படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த கேரக்டரை நான் எதற்காக ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் செல்வகுமார் கலையில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்துக்கு பொருத்தமான பெயரை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா. -

சிம்புவின் காதலை சொல்லும் பாடல்..!



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

மீண்டும் நேசன் இயக்கத்தில் விஜய்....



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

பாலசந்தர் பாராட்டிய த்ரிஷ்யம்....!






 மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்திவிட்டு இயக்குநர் பாலசந்தர் அப்படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பலர் பல்வேறு மொழிகளில் ரீமேக் உரிமைக்கு போட்டியிட்டு வருகிறார்கள்.

சென்னையில் இப்படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர் 'த்ரிஷ்யம்'படக்குழுவினரைப் பாராட்டி இ-மெயில் ஒன்றினை அனுப்பியிருக்கிறார்.

அதில், " பார்வையாளனைக் குறைவாக மதிப்பிடாமல் புத்திசாலித்தனத்தோடு எடுக்கப்பட்ட படம். நடிகர்களும் இயக்குநரும் இணைந்து ஒரே நோக்கில் பணியாற்றினால் படம் எவ்வளவு நன்றாக வரும் என்பதற்கு உதாரணம் ‘த்ரிஷ்யம்’. " எனத் தெரிவித்துள்ளார்.

விமர்சகர்கள் மத்தியில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் 'த்ரிஷ்யம்' பெறும் வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

மீண்டும் அஜீத்துடன் இணைகிறார் சிவா....




பொங்கலுக்கு வந்த 'வீரம்' ஹிட்டால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார்.

ஜோடியாக அனுஷ்காவை தேர்வு செய்துள்ளார்கள். முதல் தடவையாக இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.

இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜீத்தும் டைரக்டர் சிவாவும் மீண்டும் இணையப் போகிறார்களாம்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு...



தென் ஆப்ரிக்காவில் சர்வதேச இந்திய திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிகளுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சனிக்கிழமை இரவு அன்று தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து அவரை தனிவிமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

‘எனக்கான இடம் காத்திருக்கிறது’ - விதார்த் நம்பிக்கை



 புதிதாக வரும் நடிகர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருப்பவர் நடிகர் விதார்த். ‘மைனா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அனைவரது பாராட்டையும் பெற்றவர், தற்போது வீரம் படத்தில் அஜித் ‘தல’ ரசிகர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருக்கிறார். “சினிமாவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் தவறிப் போகாது” என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் விதார்த்தை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘மைனா' பார்ட் 2-ல நடிச்சுட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்?
‘மைனா’ பார்ட் 2-ல்லாம் கிடையாது. ‘மைனா ‘ மாதிரி ஒரு கதையில நடிச்சிட்டிருக்கேன், அவ்வளவுதான். இன்னைக்குத்தான் ஷுட்டிங் தொடங்குச்சு. ‘காடு’ன்னு படத்துக்கு பெயர் வச்சிருக் கோம். ‘மைனா’ படத்துல என்னோட நடிச்ச தம்பி ராமையா கூட திரும்பவும் நடிக்கிறேன். ஸ்டாலின் ராமலிங்கம் தான் இயக்குநர். அவரோட வாழ்க்கையை சினிமாவா எடுக்கிறார். ‘மைனா’ மாதிரியே காட்டுக்குள்ளே நடக்குற காதல் கதை தான். இந்தப் படத்துல சமூகத்திற்கான ஒரு விஷயத்தையும் பதிவு பண்றோம்.

ரெண்டு வருஷத்திற்கு முன்னாடியே இந்தப் படத்தோட கதை தெரியும். கடைசியா பார்த்தப்போ, இந்த படத்தோட முழுக்கதையையும் ஸ்டோரி போர்டு பண்ணிட்டார். அதுக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் எல்லாத்தையும் இப்படித்தான் எடுக்கப் போறேன்னு அனிமேஷன் பண்ணி எனக்கு லேப்டாப்புல போட்டு காண்பிச்சார். எனக்கு புதுசா இருந்தது. எல்லாரும் படம் முடிஞ்ச உடனே பண்ற வேலைகள் எல்லாத்தையும், இவரு படத்துக்கு முன்னாடி பண்றதைப் பார்த்து பிரமிச்சு போயிட்டேன். இப்போ ஷுட்டிங் தொடங்கியாச்சு. ‘வீரம்’ வெற்றிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தோட ஷுட்டிங்ல புது வருஷத்தை தொடங்கியிருக்கேன்.

வீரம் ஹிட் ஆன பிறகு அஜித் உங்ககிட்ட பேசினாரா?

பட ரிலீஸுக்கு முந்தின நாள்தான் சென்னைக்கு வந்தார் அஜித். பட ரிலீஸ் அன்னைக்கு காலைல 7 மணிக்கு எல்லாம் போன் பண்ணிட்டார். நியூ இயர், பொங்கல் வாழ்த்துகள் எல்லாம் சொல்லிட்டு, படம் பாத்திட்டீங்களான்னு கேட்டார். ‘இல்ல சார்.. ஷுட்டிங்ல இருக்கேன். நாளைக்கு தான் போறேன்’னு சொன்னேன். முதல் ஷோ பாத்தவங்க எல்லாம் நெட்ல நல்லாயி ருக்குன்னு எழுதினதைப் பார்த்து அவரு பயங்கர உற்சாகமாக பேசினார். எல்லாம் பேசிட்டு முடிச்சிட்டு, ‘நீங்க ஒரு தனி ஹீரோ. என்கூட சேர்ந்து நடிச்சதுக்கு ரொம்ப நன்றி’ அப்படினு சொன்னார். ‘சார்.. உங்களோட தீவிர ரசிகன் நான். உங்க கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்ததிற்கு நான் தான் நன்றி சொல்லணும்’னு சொன்னேன். போனை கட் பண்ணும் போது கூட, ‘படம் முடிஞ்சுருச்சுனு விட்றாதீங்க. அப்பப்போ போன் பண்ணுங்க. சென்னை வந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வாங்க’ன்னு சொன்னார்.

நீங்க ஒரு ஹீரோ. ‘வீரம்’ படத்துல 4 தம்பிகள்ல ஒருத்தரா நடிக்க எப்படி சம்மதிச்சீங்க?
நான் அஜித்தோட தீவிர ரசிகன். இயக்குநர் சிவா என்கிட்ட கதை சொல் றேன்னு சொன்னப்போ கூட, ‘அஜித் கூட நடிக்கிறேன். போதும் கதை எல்லாம் வேண்டாம்’னு சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு அஜித்தை அவ்வளவு பிடிக்கும். ‘மைனா' படத்துக்கு பிறகு அவரை சந்திச்சு பேசணும்னு ஆசைப்பட்டேன். அவர்கூட நடிக்க வாய்ப்பு வரப்போ எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும்.

‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’ படத்துல காமெடில பட்டைய கிளப்பியிருக்கீங்கனு இயக்குநர் சொல்லியிருக்காரே?

காமெடி படங்கள் பண்றது எனக்கு பிடிக்கும். ஏன்னா காமெடி எனக்கு நல்லா வரும். 'பட்டைய கெளப்பணும் பாண்டியா' படம் 100 சதவீதம் காமெடி படம்தான். நானும் சூரியும் சேர்ந்து செம காமெடி பண்ணியிருக்கோம். எனக்கு காமெடியும் வரும்னு நம்பிக்கையை கொடுத்த படம். கண்டிப்பா என்னை விட சூரிக்கு பெரிய ப்ரேக் கிடைக்கும்.

‘மைனா’ படத்தோட வெற்றிக்குப் பிறகு பெரியளவிற்கு உங்களோட படங்கள் ஹிட்டாகல. அதுக்கு என்ன காரணம்?

என்னை பொறுத்தவரை படங்களை சரியா கொண்டு போய் சேர்க்கலைன்னுதான் நினைக்கிறேன். ‘மைனா’க்கு பிறகு நான் நடிச்ச படங்கள் வந்ததே நிறைய பேருக்கு தெரியல.அதுமட்டுமல்லாம, ‘மைனா’ படத்துக்குப் பிறகு நிறைய பேர் அதே பாணியில் என்கிட்ட படங்கள் எதிர்பார்க்கு றாங்க. இது எனக்கு மட்டுமல்ல.. எல்லா ஹீரோக்களுக்கும் இதே மாதிரி நடக்குது. ஒரு படம் ஹிட்டாயிட்டா உடனே அதே சாயல்ல படம் பண்ணுங்கனு சொல்றாங்க.

என்னை பொறுத்தவரை ஒரு படம் நடிச்சா, ஒரு நடிகனா நல்லா பண்ணியிருக்கனா அதை மட்டும்தான் பாக்குறேன். 'மைனா' வெற்றிக்கு நிகரா ஒரு படம் கொடுக்கல அப்படிங்குறது உண்மை தான். அதை ‘ஆள்', 'காடு' படங்கள் கண்டிப்பா பூர்த்தி பண்ணும்.

படத்துல நடிக்க உங்க வீட்ல எதிர்ப்பு வந்திருக்குமே? எப்படி சமாளிச்சீங்க?

எங்க வீட்டுல எங்கப்பாதான் எல்லாமே. வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்த குடும்பம்தான். சிங்கப்பூர், மலேசியா, கனடால எல்லாம் எங்கப்பா வேலை பார்த்துதான் கொஞ்சம் மேலே வந்தோம். அதனால எங்கப்பா எப்போதுமே, எல்லாமே பசங்க விருப்பம்தான் அப்படினு விட்டுருவார். உனக்கு என்ன தோணுதோ பண்ணுனு சொல்லிடுவார். முதல்ல டிரைவராகப் போறேன்னு சொன்னேன். சரினு லைசன்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தார். அப்புறமா.. நடிகனாக போறேன்னு கூத்துப் பட்டறைல சேர்ந்தேன். சரிப்பானு சொன்னார். குடும்பத்துல இருக்குறவங்கதான் நடிகன் எல்லாம் வேண்டாம் சொன்னாங்க. எங்கப்பா என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தார். நான் நடிகனாக ஆனதற்கு எங்க வீட்டுல இருந்து எதிர்ப்புனு எதுவுமே இல்ல.

இப்போ சினிமால உங்களோட வளர்ச்சியைப் பார்த்து உங்கப்பா என்ன சொல்றார்?

ரொம்ப சந்தோஷமாக இருக்கார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தை நான் நைட் ஷோ பாத்துட்டு வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு போனேன். எங்கப்பா படம் பாத்துட்டு தூங்காம காத்திருந்தார். நான் கதவை திறந்து உள்ளே போனதுமே, என்னை கட்டிப்பிடிச்சு “நல்லா பண்ணிருக்கடா... சூப்பர்.. பிரமாதம்.. இன்னும் பண்ணணும். விட்டுறதே..” அப்படினு சொல்லிட்டு தூங்க போயிட்டார். எங்கப்பா சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் அன்றைக்கு தூங்கவே இல்லை. அந்த வார்த்தைகள் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அது தான் எனக்கு உரம். கண்டிப்பா எனக்கான இடம் காத்துக்கிட்டு இருக்கு.

Sunday, January 19, 2014

“கே.பாக்யராஜ் ஊசி போடுவதில் கில்லாடி…” - மன்சூர் அலிகான்



ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் ’3 ஜி’ எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’.

இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா,  மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் நம்ம ஊர் கே. பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ளார். இசை ஆதிஷ் உத்ரியன், பாடல்கள் குகை.மா.புகழேந்தி .

இந்த 3 ஜீனியஸஸ் எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்

“நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள்.

நான் மலேசியா  நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

‘ஒன் மலேசியா’ என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை. ‘என்னய்யா ஊரு இது விடிய  விடிய சாப்பிடறாங்க…’ என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை, நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்குப் பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது..? அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்…” இவ்வாறு பேசினார்.

நடிகர்  மன்சூர் அலிகான் பேசும்போது “இந்தப் படம் நல்ல முயற்சி. மலேசியாவைக் கண்ணாடி போல காட்டியுள்ளார்கள். பார்க்க அருமையாக வந்துள்ளது. இளம் விஞ்ஞானிகள் பற்றிய கதை. இதில் பாக்யராஜ் அவர்கள் விஞ்ஞானியாக வருகிறார். கையில் ஊசியுடன் தோன்றுகிறார். அவர் ஊசி போடுவதில் பெரிய கில்லாடி.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊசி போட்டார். அதோட தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. போட்டது முருங்கைக்காய் என்கிற ஊசி. அதற்கு முன்னாடி எல்லாம் முருங்கைக் காயை எவனும் சீந்த மாட்டான். கண்டுக்கவே மாட்டான். ஆனால் அவர் போட்ட போடுல உலகம் முழுக்க முருங்கைக்காய் கலக்கியது. எங்க ஊர் பக்கத்திலிருந்தெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று கலகலப்பூட்டினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மலேசியாவில் நடனப் பள்ளி நடத்திவரும் குருஸ்ரீ .ஆர். சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.இது அனைவரையும் கவர்ந்தது.

2011ல் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் கௌசியா, பவானி இருவரும் சிடி வெளியீட்டு விழாவில் சிடியைப் பெற்றுக் கொண்டனர். பரிசளித்தும் பாராட்டப் பட்டனர்.

தயாரிப்பாளராகும் அஜித்..?



தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் அல்டிமேட் ஸ்டார் அஜித்.

தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் தங்களது தயாரிப்பில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.

இந்த பட்டியலில் விரைவில் அஜீத்தும் சேருகிறாராம். ஒரு நேரத்தில் தான் நடித்த படங்கள் சறுக்கி வந்தபோது, தன்னை வைத்து தைரியமாக படம் தயாரித்தவர்களுடன் சேர்ந்து தானும் பங்குதாரராக செயல்பட்ட அஜித், இந்த முறை, தனக்காக தயாரிப்பாளராகவில்லையாம்.

நல்ல திறமையான நடிகர், இயக்குனர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தயாரிப்பாளராகிறாராம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. என்றபோதும், தலயின் தாராள குணமறிந்த சில இளவட்ட நாயகர்கள் ஆதரவு கேட்டு தலசமூகத்தை நாடியுள்ளார்களாம்.

ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜின் புதிய தொடர்..!



 ஒவ்வொருவருக்குமே தாங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில், ஒர் அலாதியான சுகம் இருக்கிறது. முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து மாட்டிக்கொள்வதற்கும், டைரி எழுதுவதற்கும் கூட, ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. நம் நினைவுக் குளங்களில் படர்ந்திருக்கும், பாசியின் மேல் கல்லெறிவதில் ஒரு பேரானந்தம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உணர்வைதான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது நான் நடந்து வந்த பாதை அல்லது எனது வாழ்க்கையை பற்றிய சுயதம்பட்டமோ அல்ல. இது நான் மனக்கிடங்கில், சேமித்து வைத்த நினைவுகளின் அணிவகுப்பு. இதில், நான் மட்டும் தெரியப் போவதில்லை... நீங்களும்தான்.

எனது பால்யம் என்பது எனது பால்யம் மட்டுமா? அது உங்களுடையதும்தான்! எனது அவமானம், வெற்றி, தோல்வி, விருது எல்லாம் என்னுடையது மட்டுமா என்ன? அவை அனைத்துமே நம்முடையது.

அப்படி இந்தத் தொடர் மூலம் உங்கள் இளமைக்கால நினைவுகள் மயில் தோகையாக மனதில் விரியலாம், ஞாபக அடுக்குகளில் என் வார்த்தைகள் பொருத்திப்போடும் தீக்குச்சிகள் பழைய நினைவுகளை சுட்டு எரிக்கலாம், சூத்திரவாலு, அறுந்தவாலு, கரட்டான் மண்டையன், பொண்ணுக்கு வீங்கி, அதிரடி குசுவுனி, அவசர குடுக்கை, வீத்தக்குட்டி, அராத்து என பட்டப்பெயர் வைத்து அழைத்து மகிழ்ந்த நண்பனும் தோழியும், நினைவில் வந்து போகலாம். சிமிட்டுக்கண்ணி, சில்க் சுந்தரி, புட்டம்மா சிட்டு ,

வேப்பெண்ணை தேச்ச தேவதை என நமது முதல் காதலிகள் கனவில் கடந்து போகலாம்,

ஒரு இலைய கட்டிக்கிறேன்,

ரெண்டு இலைய கட்டிக்கிறேன்,

மூணு இலைய கட்டிக்கிறேன்,

நாலு இலைய கட்டிக்கிறேன்,

அஞ்சலைய கட்டிக்கிறேன்னு

பாடி மகிழ்ந்து, டேய்... இவன் அஞ்சலை புள்ளைய கட்டிக்கிறேன்னு சொல்றான்டா, என கேலி செய்து அஞ்சலைய வெக்கப்பட வைத்து... உதிர்த்த சிரிப்பொலிகள் காதுகளில் ஒலிக்கலாம், ரெடியோர் ரெடி, கிளியோர் கிளி, கிக்கிலி பிக்கிலி, மக்கான், சுக்கான், பாலு பறங்கி, நாட்டும சீட்டும அதிரி , எங்க மாடு எளச்சு போச்சு, தண்ணிங்குடுறா கொள்ளப் பயலே... விளையாண்ட விளையாட்டுக்களும், மென் கவிதை, மென் தூறல் கவிதை, என ரசனை மாற்றம் ரசவாதமாய் நிகழ்ந்த காலம்..

மயிலிறகு ஒளித்து, குட்டி போடும் நாள் பார்த்து காத்திருந்தது, கட்டிபோட்டா குட்டி போடும் இலை சுமந்த புத்தங்களை நாம் சுமந்தது, 1001 முறை ஓம் முருகா ஓம் முருகா! என எழுதி அனுப்பி கந்த சஷ்டி புத்தகம் வாங்கியது, தேங்காய் உடைக்கப்போகும் அம்மாவிடம் டம்ளர் எடுத்து போய் தேங்காய் தண்ணீர் வாங்கி தேவாமிர்தம் போல் குடித்து மகிழ்ந்தது, மெட்ராஸ் ஐ வந்ததும் நண்பர்கள் கண்ணை நேருக்கு நேராய் பார்த்து ஒனக்கும் ஒட்டி விட்டுருவேன்... என மிரட்டி தாத்தாவின் கண்ணாடியை பாட்ஷா கண்ணாடியாய் நினைத்து போட்டு ஸ்டைலாய் திரிந்தது, உள்ளூர் டூரிங் டாக்கீஸில் குடும்பத்தோடு அத்தை மகள் படம் பார்க்க செல்கிறாளே என அடம்பிடித்து... ‘இதயம்’ படம் குடும்பத்தோடு பார்த்தது,

ஊருக்கு முன்னாடி பள்ளிகூடத்துக்கு வந்து விட்டு இன்னைக்கு நான்தான் ஸ்கூல் first-னு தம்பட்டம் அடித்து திரிந்தது, பேரன், பேத்தி எடுத்துருந்தாலும்... ஏதோ ஒரு நினைவில்... தனக்கு பிடித்த ஒரு வாத்தியார்... நினைத்துப் பார்க்கும் ஒரு தருணம் வரும். அப்படி நமக்கு பிடித்த... குரு..! திருவுருவமாய் வந்து செல்லலாம்..! கொத்து கொத்து மாங்கா கோமாரி மாங்கா மதுரைக்கு போனாலும் வாடாத மாங்கா, அது என்ன? பல நேரம் விடை தெரியாத விடுகதை போட்டு சுற்றி திரிந்த காலங்கள், 13ம் நம்பர் பஸ்ஸில் “மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் பாடலை”, பஸ்ஸை ஒரு பல்லாக்கு போல நினைத்து மேடு பள்ளங்களில் ஆடி ஆடி அசைந்து மிதந்து சென்றபடி நாங்களும் ராஜ ஊர்வலம் சென்று ரசித்த நாட்கள், “ஆசைய காத்துல தூதுவிட்டு” பாடலை தேசியகீதம் போல சிலோன் வானொலியில் கேட்டு கிறங்கி கிடந்த நினைவுகள், என பழசெல்லாம் படபடபடனு ஞாபகத்திற்கு வரப்போகிறது,

முடிவடையும் 'மான் கராத்தே' படப்பிடிப்பு..!



 பஞ்சாப்பில் இந்தி படங்களின் பாடல்கள் படமாக்கப்படும் இடத்தில் 'மான் கராத்தே' படத்தின் பாடல்களை படமாக்கி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மான் கராத்தே'. ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுத, திருக்குமரன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில், காதலர் தினத்தன்று படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில், இரண்டு பாடல்களை பஞ்சாப்பில் பிருந்தா நடன அமைப்பில் படமாக்கி வருகிறார்கள்.

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Dilwale Dulhaniya Le Jayenge' படத்தின் பாடல்கள் படமாக்கப்பட்ட இடத்தில் இப்படத்தின் பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது, கோதுமை வயல் பரப்பில் இப்படத்தின் பாடல்களை எடுத்து வருகிறார்கள். இப்பாடலில் ஹன்சிகா லுங்கி கட்டிக்கொண்டு நடனமாடுவது போன்று காட்சிபடுத்தி வருகிறார்களாம்.

இரண்டு பாடல்கள் முடிந்து விட்டால், மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும். ஏப்ரல் 11ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் கெளதம் மேனன் மீது வழக்கு..?



திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தின் இயக்குநர் கெüதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்தை ஜெயராமன் என்பவர் தயாரித்திருந்தார். இதை ஹிந்தி மொழியில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெயராமனுக்கும் கெüதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.

இப்படத்தின் லாபத்தில் 25 சதவீத பங்கு ஜெயராமனுக்கு தரப்படவேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தனக்குரிய பங்கை கெüதம் மேனன் தரவில்லை என்று போலீஸில் ஜெயராமன் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இந்த புகாரின் பேரில் கெüதம் மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கெüதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர்கள் 5 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

தமிழ் படம் இயக்கும் ஆஸ்திரேலிய இயக்குனர்..!



ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் தமிழ் படம் இயக்குகிறார். பழமையான இசை கருவி யாழ். இந்த பெயரில் தமிழ் படம் இயக்குகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்.எஸ்.ஆனந்த். அவர் கூறியதாவது:

யாழ் என்பது இலங்கையின் பழமையான இசை கருவி. இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்களின் கலாசாரத் துக்கும் யாழ் என்றுதான் பெயர். இந்த கலாசாரத்தை பற்றி இலங்கை இறுதி போரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மறக்கப்பட்ட இக்கலாசாரத்தின் சமகாலத்து நிலைமையை படம் விளக்குகிறது. இதில் வினோத், சசி, மிஷா, ரக்ஷனா, லீமா பாபு ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். கருப்பையா, நசீர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். பாரதி, அருணகிரி இசை அமைத்திருக்கின்றனர்.

Saturday, January 18, 2014

சுருட்டுப் பிடிக்கும் சுடலை ஆச்சியாக நடிகை நளினி!



ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது.

அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.

இப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.

சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர்.

ஹீரோயின்கள் செம சூப்பர் - கார்த்திக் பேச்சு....!


கடல் கவுதம் நடிக்கும்  படம் என்னமோ ஏதோ. ரகுல் பிரீத் சிங், நிகிஷா படேல் ஜோடி. ரவி தியாகராஜன் டைரக்டு செய்கிறார். கார்கி பாடல். டி.இமான் இசை. பி.ரவிகுமார். பி.வி.பிரசாத் தயாரிப்பு.

 இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கவுதம் தந்தை நடிகர் கார்த்திக் பேசும்போது, இன்றைய தினம் திரையுலகம் இளைஞர்கள் வசம் இருக்கிறது. திறமையாக பணியாற்றுகின்றனர். சிறந்த படங்களை தருகின்றனர்.

 சாதனையாளர் வைரமுத்து மகன் கார்கி அருமையாக பாடல்கள் எழுத, டி.இமான் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். என் மகன் கவுதம் எனக்கு செல்லப் பையன்.

அவனுக்கு திரையுலகினர் ஆதரவு தரவேண்டும். இப்போது வரும் ஹீரோயின்கள் அழகாக செம சூப்பராக இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது என்றார்.

டப்பிங் படம் வெளியிடும் மாபியா கும்பல் பிரகாஷ்ராஜ் கட்டம்..?




கர்நாடகத்தில் டப்பிங் படங்கள் மூலம் மாபியா கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்படங்களை திரையிடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ்  கண்டனம் தெரிவித்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். சில கன்னட படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. தமிழில் நடித்த பிறகுதான் தேசிய அளவில் பிரபலமாகி, இந்தி படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். கர்நாடகாவில் சமீபகாலமாக தமிழ் உள்பட பிறமொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 இது தொடர்பாக போராட்டம் நடத்தவும் கர்நாடக திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் பேசிய பிரகாஷ்ராஜ் டப்பிங் படங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது: டப்பிங் படங்கள் கன்னட படங்களை அழிக்கும் பேய். இதுபோன்ற படங்களுக்கு பெரிய மாபியா கும்பல் உடந்தை யாக உள்ளது.

டப்பிங் படங்களுக்கு கன்னட திரையுலகில் பெரிய ஆதரவு இருப்பதை கேட்டு வருத்தம் அடைகிறேன்.  இந்தநேரத்தில் ராஜ்குமார் உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரி இருந்திருக்கும். கன்னட படங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன்.

 கன்னட படங்களால் வாழ்வு பெற்றுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் டப்பிங் படங்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே கன்னட திரையுலகில் டப்பிங் படங்கள் வருவதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

மாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி..!



அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட் மீது சக ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் குறி வைத்துள்ளனர்.

அவர்களும் தங்கள் பட புரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா சென்று பங்கேற்கின்றனர். சிங்கம் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஆந்திரா, கேரளா, சென்றார் சூர்யா. அதேபோல் பிரியாணி படத்துக்காக கார்த்தி, பாண்டியநாடு படத்துக்காக விஷாலும் ஆந்திரா, கேரளா சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

 இதனால் பாதிக்கபட்டிருக்கும் மல்லுவுட் ஹீரோக்கள் தங்களின் பார்வையை கோலிவுட் மார்க்கெட் மீது திருப்பி இருக்கின்றனர்.

தாங்கள் நடிக்கும் மலையாள படங்களில் தமிழ் ஹீரோக்களை புக் செய்யத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான்,  சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற டாப் ஸ்டார்கள் கோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்ற தமிழ் நாட்டுக்கு விசிட் அடித்து பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மார்க்கெட்டுக்குள் என்டர் ஆகும் எண்ணத்தில் சூர்யா தான் நடித்த சிங்கம் 2 இந்தியில் டப்பிங் செய்துவெளியிட்டார்.

நடிகர் தனுஷ் நேரடி இந்தி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பாலிவுட் ஹீரோக்களில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். ஆமிர்கான், ஹிருத்திக் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் படங்களும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியால் இந்தியா முழுவதும் சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

 
back to top