
இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்துகொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து...