
இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு. ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது. இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன. விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது. இந்த ஆறா என்பது வேறொரு மனிதனை தொடும் போது மற்றவர்களின் ஆறாவால் சற்று சலனம் படுகிறது. இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நல்லது என்று சொல்ல முடியாது. இதை முற்றிலுமாக உணர்ந்த நமது முன்னோர்கள்...