
ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி ரன் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் லிங்குசாமி தனது படங்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் லிங்குசாமியின் வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் அஞ்சான் திரைப்படம் குறித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கமல்ஹாசன் “ இத்தன வருட சினிமா அனுபவத்துல என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன், ஆனா என்ன பண்ணனும்னு தெரியல” என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொள்ள...