.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்!. Show all posts
Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்!. Show all posts

Thursday, October 30, 2014

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது..?

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள். மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது பெற்றோரிடம் தேவையான அன்பு,...

Tuesday, January 21, 2014

சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் - அதிர்ச்சி தகவல்....

புகைபிடித்தல் கண்புரை வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் எனப்படும் கேட்ட்டராக்ட் அதிக அளவில் வருவதற்க்கான வாய்ப்பு இருப்பதை சில ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும், ஒரு நாளைக்கு 20 அல்லது இருபதுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு இரு மடங்கு உள்ளது. புகை பிடிப்பதனால் ஒருவருக்கு கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு எவ்வாறு அதிகரிக்கிறது என்று விளக்கமாகக் கவனிப்போம்:1. கேட்டராக்ட் என்பது நமது கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பது மற்றும் லென்ஸின் தோற்றம் புகை போன்ற படலம் படர்ந்த நிலையும்...

Monday, January 6, 2014

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?

மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது. சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை...

அழகு குறிப்புகள்: குதிகால் செருப்பு வாங்க போறீங்களா..?

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி...

நெ‌ட் பை‌த்‌தியமா..? ‌சி‌கி‌ச்சை தேவை..! - ''மனோதத்துவம்''

பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது...

Sunday, January 5, 2014

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்..!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம்...

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!  பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள்...

Saturday, January 4, 2014

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த...

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி....

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழிகலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம்வாயுத் தொல்லைக்கு பெருங்காயம்பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி...

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன..?

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம்.பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும்....

Friday, January 3, 2014

மாதுளம்பூவின் பயன்கள்...?

  மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி,...

தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து!

இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க காரணம்.ஆனால், வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் சாப்பிட்டால் சரி. தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ, அல்லது எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் பிரெட் ஜாம், பிரெட்...

Wednesday, January 1, 2014

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள்...

Tuesday, December 31, 2013

தூக்கமும் நீங்களும்...

உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல...

தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு ...?

தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.இதற்கமையவே தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகு...

ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??

பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள்...

Sunday, December 29, 2013

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை...

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம் - எச்சரிக்கை!!!

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம் இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்... சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும். பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற...

‘கற்பக விருட்சம்’ என்றே சொல்லப்படும் வேப்பமர மருத்துவ மகிமைகள்!

  வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து...

Saturday, December 28, 2013

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலா...
 
back to top