.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம - மத்திய அரசு வெளியீடு..!

அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்:- *முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது...

அதிக சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது..!

  அதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்னடர்.சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சிவப்பு ஒயின் அருந்துபவர்களுக்கு 2–வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது.அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்தது.ஆந்தோசியோனின்ஸ் மூலக்கூறுகள்...

அஞ்சான் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை துவங்குகிறது..!

அஞ்சான் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை துவங்குகிறது:- சூர்யா - சமந்தா நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நாளை முதல் துவங்கவுள்ளன.யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்துவரும் புதிய திரைப்படமான அஞ்சான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளன. மிக வேகமாக நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்புகள் பொங்கலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாக நிறைவுபெற்றன.ஏக்சன் படமாக உருவாகிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை தொடங்கி சுமார் ஒரு மாதம் மும்பை மற்றும்மஹாராஷ்டிராவில்...

துப்பாக்கி ரீமேக் ரிலீஸ் தள்ளிப்போகிறது..!

இளையதளபதி விஜய் - காஜ்ல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படம் ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மே மாதம் முதல் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு ஜூன் 6 ஆம் தேதிக்குத்தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வி.கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த திரைப்படம் துப்பாக்கி. இப்படம் தமிழில் மாபெரும்வெற்றியடைந்ததால் தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தியிலும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸே இயக்கவுள்ளார்.அக்‌ஷய்குமார் மற்றும் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஹாலிடே எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்தி ரீமேக்கினைரிலையன்ஸ்...

ஈழத்தமிழ் வசனத்தில் 'யாழ்'...!!!

யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என ஈழத்தமிழ் வசனத்தில் உருவாகிறது ‘யாழ்’ திரைப்படம்.மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’.இந்தப் படத்தில் வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்தப் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் எம்.எஸ்.ஆனந்த் படம் பற்றி கூறுகையில், யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி.இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்திய, தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப் படத்தின் பாடல்கள்...

சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் - அதிர்ச்சி தகவல்....

புகைபிடித்தல் கண்புரை வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் எனப்படும் கேட்ட்டராக்ட் அதிக அளவில் வருவதற்க்கான வாய்ப்பு இருப்பதை சில ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும், ஒரு நாளைக்கு 20 அல்லது இருபதுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு இரு மடங்கு உள்ளது. புகை பிடிப்பதனால் ஒருவருக்கு கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு எவ்வாறு அதிகரிக்கிறது என்று விளக்கமாகக் கவனிப்போம்:1. கேட்டராக்ட் என்பது நமது கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பது மற்றும் லென்ஸின் தோற்றம் புகை போன்ற படலம் படர்ந்த நிலையும்...

ஈவ்னிங் டயட் சூப் ரெசிப்பி....!

வெஜ் சூப்தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும...

குடியரசு தினத்தில் ரிலீஸாகும் படங்கள்.....

குடியரசு தினத்தையொட்டி ‘நேர் எதிர்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘கோலி சோடா’, ‘நினைத்தது யாரோ’ ஆகிய 4 புது படங்கள் ரிலீசாகிறது. பொங்கலுககு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் வந்ததால் தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகையால் பொங்கலுக்கு சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தற்போது அவை குடியரசு தினத்தையொட்டி வருகின்றன. ‘நேர் எதிர்’ படத்தில் ரிச்சர்ட், பார்த்தி வித்யா, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜெய பிரதீப் இயக்கியுள்ளார். ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார். ‘கோலி சோடா’ படம் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் தயாராகியுள்ளது. கிஷோர், பாண்டி...

வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன.அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம்.எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில்...

விரைவில் விஜய் - சமந்தா...

முதல் முறையாக நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளராம் நடிகை சமந்தா.கடந்த 2012ம்ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.தற்போது விஜய் முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தின் தலைப்பு 'வாள்' எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும் இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என்று செய்தி பரவியது. அதனை தொடர்ந்து தீபிகா படுகோன் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சற்று முன் கிடைத்த தகவலின் படிஇதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளாராம்.விஜய்யுடன் ஏற்கெனவே ஜோடி சேரவிருந்தவர் சமந்தா. ஆனால் அப்போது...

அஜித் விஜய் மோதலை அடுத்து சிம்பு தனுஷ் மோதல்!

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் இசை வெளியீடு வருகிற காதலர் தினத்தில் வெளியாகவிருக்கிறது. அதே நாளில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்தின் இசையும் வெளியாகவுள்ளது.சமீபமாக இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோரது ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கின. விஜய்மற்றும் அஜித் ரசிகர்கள் மோதலில் ஈடுபடக்கூடதென இரு பெரும் நட்சத்திரங்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.விஜய் - அஜித்தின் மோதலுக்குப் பிறகு வருகிற காதலர் தினத்தில் சிம்பு மற்றும் தனுஷ் மோதவுள்ளனர். இரு நட்சத்திரங்களுமே சமமான அளவில்ரசிகர்களைக் கொண்டிருப்பதால் இம்முறையும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்குமென்று...

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும்...

சிம்புவைத் தம்பி என்றழைத்த தனுஷ்..!

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை நடிகர் தனுஷ் தம்பி என்று அழைத்திருக்கிறார்.சிம்பு விரைவில் தனது முப்பவதாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். இதுகுறித்து சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தான் இன்னு சில தினங்களில் முப்பது வயதை எட்டவிருப்பதாகவும், தனது டீனேஜிலிருந்தே தனது முப்பதாவது வயதினை எட்டுவது குறித்து விரும்பியதாகவும், தற்பொழுது முப்பதாவது வயதினை அடைந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.இதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வண்ணம் தனுஷ் சிம்புவிற்கு “ வா தம்பி, இட்ஸ் நாட் டூ பேடு” என்று பதிலளித்துள்ளார்.தனுஷ் மற்றும் சிம்புவின் இந்த உரையாடல் அவர்களது ரசிகர்களால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிம்பு தற்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன்...

ஹேப்பி பர்த்டே அப்பாடக்கர்..!

இன்று அவர் தனது 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்பாடக்கர் சந்தானம்..சிம்புவின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் முக்கியக் காமெடியனாக அறிமுகமான சந்தானம், விஜயின் சச்சின், ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும், சிம்புவின் வல்லவன் என்று படிப்படியாகப் பிரபல நகைச்சுவை நாயகனாக உருவாகிவந்தார்.சந்தானத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இயக்குனர் எம்.ராஜேஷின் சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படங்கள் அமைந்தன என்றால் அது மிகையல்ல. பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவர் அறிமுகப்படுத்திய அப்பாடக்கர் என்ற வார்த்தை மக்களிடையே மிகப்பிரபலமாகப் பேசப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு...

மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக,சிம்பு - நயன்தாரா...

 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்கும் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக வலம் வருகிறார்கள்.கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்தனர்.இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது புதிய படத்துக்கு சிம்புவை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். உடனடியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், படத்தின்...

விஜய்சேதுபதி– விஷ்ணு, யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து....

பையா, வழக்கு எண் 18/9,வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் N.லிங்குசாமி, N.சுபாஷ் சந்திபோஸ் தயாரிப்பில், தென்மேற்குப்பருவக்காற்று,நீர்ப்பறவை ஆகியவெற்றிப்படங்களை இயக்கிய,தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் திரைப்படம் இடம் பொருள் ஏவல்’.விஜய்சேதுபதி– விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரும் முதன்முறையாக இணைகின்றனர்.யுவன்சங்கர் ராஜா இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் , இயக்குனர் லிங்குசாமி இருவரின் விருப்பத்தினை ஏற்று, யுவன்சங்கர் ராஜா,...

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் எண்ட்ரி..!!!

மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். 1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.தமிழ்நாட்டில் சுஹாசினி, லிஸி, குஷ்பு, ஸ்ரீப்ரியா ஆகியோர் இந்த விருந்தை நடத்தினர். ஆந்திராவில் சிரஞ்சீவியும், கன்னடத்தில் அம்ரிஷூம் நடத்தினர்.இந்த ஆண்டு மோகன்லால் நடத்தினார். 80களில் பிரபலமாக இருந்த அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரஜினியையும் அழைத்தனர். அவர் நான் கோச்சடையான் பணியில் பிசியாக இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்திருந்தாராம்.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மோகன்லால் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த...

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!

இந்தியாவின் அதிகமாக பணி வாய்ப்புகளை வழங்கி வரும் இந்திய ரயில்வே, ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 659 துறைவாரியான காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6 வயதுவரம்பு: 01.01.2014 தேதியின் அடிப்படையில் 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க...

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!

கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு.இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும். இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். இதே போல் மவுஸை வைத்து ஒரு பெரும் புரட்சி...

ஜில்லா & வீரம் படங்களின் லாப நஷ்டக் கணக்கு - சில குறிப்புகள்..!

  சும்மா இருப்பதே சுகம் … அதிலும் நான் மற்றும் என்னை போன்ற சில விவரம் தெரிந்த சினிமா மனிதர்கள் யாரையும் பகைத்துகொள்ள வேண்டாம் என நினைக்கும் சில பத்திரிகை நண்பர்களும் சும்மா இருப்பதே சுகம் … யாருக்கு என கேட்கிறீர்களா … யாருக்கோ .. யார் யாருக்கோ… விதி நான் இன்று சும்மா இருப்பதாக இல்லை1. ஜில்லா திரைப்படம் யார் யாருக்கு லாபம் … யார் யாருக்கு நஷ்டம்2. வீரம் திரைப்படம் யார் யாருக்கு லாபம் யார் யாருக்கு நஷ்டம் 3. ஏன் உண்மைகள் வெளி வருவதில்லை 4. என்று மாறும் இந்த நிலை இதுதான் இன்றைய கருத்துகள். உண்மை என்பதால் சிலருக்கு சுடும் .. சிலருக்கு சுகம்.ஜில்லா கல்லா கட்டவில்லை .. மினிமம் காரண்டீ (minimum guarantee) முறையில் திரையிட்ட அனைவருக்கும் நஷ்டம்...

தமிழ்ப் பழமொழியும் என் தாத்தனும்..!

 விசாரம் முற்றினால் வியாதி. கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்.   பைய மென்றால் பனையையும் மெல்லலாம். நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம். காற்றில்லாமல் தூசி பறக்காது. நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி பண்ணின புண்ணியம் பலனில் தெரியும். நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.  பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது. துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில்...

மாமேதை லெனின் நினைவு தினம் இன்று..!

மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனினின் நினைவு தினம் இன்று...உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும்...

நடிகைகளுடன் அரட்டையடிப்பதை நிறுத்திய சந்தானம்..!

தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் கதாநாயகிகளாக தேடிப்பிடித்து சென்று கடலை போடுவார் சந்தானம். படப்பிடிப்பு பேக்கப் ஆனாலும் மணிக்கணக்கில் அம்மணிகளுடன் கலகலத்து விட்டே விடைபெறுவார். இதெல்லாம் ஆர்யா அவருக்கு காட்டிக்கொடுத்த ஜாலியோ ஜிம்கானா. ஆனால், இப்போது ஆர்யாவுக்கு பிக்கப் நடிகர் என்று சில நடிகர்கள் மேடைகளிலேயே அட்டாக் கொடுத்ததால் இனியும் நடிகைகளுடன் சகவாசம் வைத்துக்கொண்டால், இமேஜ் டேமேஜாகி விடும் என்று கடலை போடுவதை விட்டு விட்டார். அவரைப்பார்த்த சந்தானமும், காமெடியனுக்கு மட்டும் இமேஜ் இல்லையா? என்ன? என்று சொல்லிக்கொண்டு தானும் அரட்டையை நிறுத்தி விட்டார்.யாராவது, நடிகைகள், தான் சீரியசாக காமெடி சீன் யோசித்துக்கொண்டிருக்குபோது அருகில்...

சூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது..!

லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் கதையில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.இந்தநிலையில், சமீபகாலமாக, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரே படத்தை நம்பாமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மாறியிருப்பதால், இந்த படத்தை முடிக்கும் முன்பே, வெங்கட்பிரபு நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சூர்யா. ஆனால், ஏற்கனவே அதற்கான கதை...

தனுஷ் - கஸ்தூரிராஜா மோதல்..!

  கஸ்தூரிராஜா தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாரித்து டைரக்ஷன் செய்து வரும் படம் காசு பணம் துட்டு. இதில் நடித்திருக்கும் நடிகர்கள், பாடியிருக்கும் பாடகர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை அண்ணாமலை செட்டியார் மன்றத்தில் நடந்தது. கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, மகன் தனுஷ், மருமகள் ஐஸ்வர்யா, இன்னொரு மகன் செல்வராகவன், மகள், மருமகன் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இயக்குனர்கள் சரவணன், பொன்ராம், துரை.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.படத்தின் பாடலுக்கு அதில் நடித்தவர்களே ஆட்டம்போட்டனர். கஸ்தூரிராஜாவும் ஒரு பாட்டுப் பாடினார். பின்னர் படத்தின் ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. பின்னர்...

கொழுப்புக்கு குட்பை..! உடல் கொழுப்பு அதிகமானால் ..?

நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு...

தலைப்புகளில் எண்களை பயன்படுத்துவது ஏன்..?

 சினிமா டைட்டில்களில் எண்களை வைக்கும் டிரெண்ட் அவ்வப்போது தலை நீட்டுகிறது. த்ரிஷா நடித்த படமொன்றுக்கு ‘எனக்கு 20 உனக்கு 18‘ என்றும், தனுஷ் நடித்த படத்துக்கு ‘3Õ, பாடலாசிரியர் சினேகன் நடித்த படத்துக்கு திரு 420 , சித்தார்த் படத்துக்கு Ô180Õ என  எண்களை கொண்டு பெயரிடப்பட்டது. அந்தவரிசையில் தற்போது ஒரு படத்துக்கு ‘கண்ணன் 1 காதலி 2Õ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘எண்களை தலைப்பில் பயன்படுத்துவது ஏன்?‘ என்று இப்பட இயக்குனர் ஏ.கோபால்சாமியிடம் கேட்டபோது கூறியதாவது:படத்தின் கதையை சித்தரிக்கும் வகையில்தான் டைட்டில்களில் எண்கள் சேர்க்கப்படுகிறது. அப்படித்தான் இப்பட டைட்டிலும் வைக்கப்பட்டிருக்கிறது.கல்லூரி முடித்து ஜாலியாக பொழுதை போக்கும் ஹீரோ...

இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன் - நஸ்ரியா உஷார்..!

 கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் நஸ்ரியா நாசிம். இதையடுத்து குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது. இயக்குனர்களுடன் மோதல்போக்கு கடைபிடித்தால் பட வாய்ப்பு பறிபோகுமே என்று அவரிடம் கேட்டபோது, ‘நய்யாண்டி விவகாரம் வெளியில் தெரிந்தது ஒரு வகையில் எனக்கு பிளஸ்தான். என்னை வைத்து படம் எடுப்பவர்கள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதை புரிந்துகொள்ள அந்த விவகாரம் உதவி இருக்கிறது. அதே நேரம், இனி சர்ச்சையில் சிக்காதபடி பார்த்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.நஸ்ரியா தமிழில் நடித்துள்ள திருமணம்...
 
back to top