1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,பாலமலை, பெருமாள் மலை3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை,...
Showing posts with label சுற்றுலாத்தலங்கள். Show all posts
Showing posts with label சுற்றுலாத்தலங்கள். Show all posts
Thursday, November 28, 2013
Sunday, November 10, 2013
உலகின் பிரபல சுற்றுலா தல பட்டியலில் இடம் பெற்ற கேரளா!
குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களின் பட்டியலை லோன்லி பிளானட்’ என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பராகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்தபடியாக கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.பசுமையான இயற்கை சூழலில் அழகிய கடற்கரைகள், நீர் நிலைகள், தேசிய பூங்காக்கள், யானை காப்பகங்கள் போன்றவை இங்கு உள்ளன.மேலும் இந்தியாவின் இதர இடங்களை போல் இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாகவும் கேரளா இருப்பதால் 2014-ல் விடுமுறையை கழிக்க தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக கேரளாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய...
Monday, November 4, 2013
வடதுருவம் போறீங்களா?
வாழ்க்கையில் வாய்ப்பு கிடைத்தால்... ஒரு முறை அண்டார்டிகாவையும், ஆர்க்டிக் கடல் பிரதேசத்தையும் கண்டுகளித்து விட வேண்டும். அப்போதுதான் இயற்கையின் வித்தியாசமான பரிமாணத்தை நம்மால் உணர இயலும். அதிலும் ஆர்க்டிக் கடல் தனியாக செல்ல இயலாத பூமி... நார்வே நாட்டிற்கு சென்று அங்குள்ள பெர்ஜின் பகுதியை அடைந்து அங்கிருந்து கப்பலில் 12 நாள் பயணம் செய்ய வேண்டும். பயணத்தின்போது 5 நாட்களுக்கு மொபைல்... இன்டர்நெட் என எதுவும் வேலை செய்யாது. அதனால் தொடர்பு நோசான்ஸ்! கம்பூட்... கைகிளவுஸ், மாத்திரை மருந்துகள்.. குளிர் புகாத அளவில் உள்ள ஆடைகள்... குளிர்ந்த பகுதியை அடையும்போது விறைத்துப் போகாமல் இருக்க 5 ஆடைகளை ஒன்றின் மீது ஒன்று அணியும் நிலையும் வரலாம். வடதுருவத்தில் எத்தனை தூரம் செல்ல அனுமதி உண்டோ அத்தனை தூரம் வரை இந்த கப்பல் அழைத்துச் செல்லும்! பிரும்மாண்ட பனிப்பாறைகளை நாம் கேள்விப்பட்டிருக்கலாம்!...
Thursday, October 31, 2013
ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!
ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டைஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை"பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால் நிரப்பப்பட்டவை. அவர்களது வாழ்க்கைக்கும், அப்போது நடந்த பல ஆச்சரியங்களுக்கும் சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. யமுனை ஆற்றின் கரையோரத்தில் தாஜ்மகாலில் இருந்து சுமார் இரண்டரை...
Wednesday, October 30, 2013
கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!
கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தாகல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தாகல்லிலே கண்ட கலைவண்ணமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன அஜந்தா குகைகளும், அதனுள் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும்!.குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும்...
Tuesday, October 29, 2013
பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி - சுற்றுலாத்தலங்கள்!
பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சிபக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி புத்தம் சரணம் கச்சாமி... என்று பல நாடுகளில் பரவிக்கிடக்கும் புத்தமதத்துக்கு பூர்வீகம் இந்தியாதான். இதற்குச் சான்றாக நாடெங்கிலும் பழங்கால சின்னங்கள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் நிறைய உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஞ்சி ஸ்தூபி மற்றும் அதைச்சுற்றியுள்ள கலையம்சம் மிக்க கட்டிடங்கள். மத்தியப்பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி கிராமத்தில் இந்த ஸ்தூபி உள்ளது. கிராமத்தின் பெயராலேயே ஸ்தூபியும் அழைக்கப்பட்டு வருகிறது. போபாலில் இருந்து சுமார் 46கி.மீ தொலைவிலும், பெஸ்நகர் மற்றும் விதிஷா ஆகிய ஊர்களில் இருந்து 10கி.மீ தொலைவிலும் ஒரு மேடான பகுதியில்...
Monday, October 28, 2013
வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத் - சுற்றுலாத்தலங்கள்!
வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக விளங்கிய...
Sunday, October 27, 2013
முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!
முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர். ...
Friday, October 25, 2013
வா..வா..என்றழைக்கும் கோவா - சுற்றுலாத்தலங்கள்!
வா..வா..என்றழைக்கும் கோவாரசிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்ட கோவாவில் தரிசிக்க வைக்கும் தலங்களும் நிறைய உண்டு. இவற்றில் பாரம்பரியமிக்க தேவாலயங்களும் அடக்கம். இந்த தேவாலயங்கள் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு கோவாவை மேலும் மிளிர வைத்துக்-கொண்டிருக்கின்றன. கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்-டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக இது இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில்...
Thursday, October 24, 2013
ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா - சுற்றுலாத்தலங்கள்!
ஆச்சரியம் நிறைந்த எலிபண்டாஆச்சரியம் நிறைந்த எலிபண்டா இந்தியாவின் புகழ் பெற்ற குடைவரைக் கோவில்களில் எலிபண்டா குகைகள் முக்கியமானவை. கூடவே... இவற்றில் புதைத்-திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை. மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான தீவு எலிபண்டா. காராப்புரி தீவு என்றும் அழைக்கின்றனர். 17ம் நூற்றாண்டில் போர்ச்சு-கீசியர்களால் கண்டறியப்பட்டது. எலிபண்டா குகைகளில் பலவிதமான புடைப்புச் சிற்பங்களும், சிலைகளும் காணப்படுகின்றன. இவற்றில் திரிமூர்த்தி என்றழைக்கப்படும் சிவன் சிலை அபூர்வமானது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்களின் முகங்களை இவை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது....
Wednesday, October 23, 2013
சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி!
சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரிஉத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் பெருமை மிக்க நகரம் பதேபூர் சிக்ரி. இதை உருவாக்கியவர் மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர். பதேபூர் சிக்ரி 1571- 1585ம் ஆண்டு வரை மொகலாயப் பேரரசின் தலைநகரமாகவும் திகழ்ந்-துள்ளது. இதன் பின்னணி, சென்டிமென்ட் கலந்த சுவாரஸ்யம். 1560ம் ஆண்டு வரை ஆக்ரா கோட்டைதான் மொகலாயப் பேரரசின் தலைநகரம். அப்போது ராஜபுத்திர இளவரசியான இந்துப்பெண் ஹர்கா பாய் என்பவரை மணந்து கொண்டார் அக்பர். ஹர்காபாய்தான் பின்னாளில் மரியம்-உல்- ஷமானி பேகம் (ஜோதாபாய் அக்பர்) ஆனார். அக்பர்- மரியம் உல் ஷமானி பேகம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டும் குழந்தைப்-பருவத்திலேயே...
Saturday, October 19, 2013
சோழரின் கலைப்பொக்கிஷங்கள் - சுற்றுலாத்தலங்கள்!
சோழரின் கலைப்பொக்கிஷங்கள் சோழரின் கலைப்பொக்கிஷங்கள் சொக்க வைக்கும் கட்டடக்கலைக்கு சொந்தக்காரர்களில் சோழமன்னர்கள் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழரின் கலைப்பொக்கிஷங்களாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருப்பது உலகளாவிய பெருமை. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்: தஞ்சைப் பெரிய கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். கட்டிய புதிதில் ராஜ ராஜேஸ்வரம் என்றும், பின்னர் வந்த நாயக்கர்கள்...
Tuesday, October 15, 2013
மிக உயர்ந்த தொட்ட பெட்டா சிகரம் - சுற்றுலாத்தலங்கள்!
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்றும், தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது தொட்ட பெட்டா. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் உள்ளது தொட்ட பெட்டா மலை. இது மிக அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மலையாகும்.இது தமிழக அரசின் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்ட பெட்டா மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து சாமுண்டி மலை அழகாகக் கண்டு ரசிக்கலாம். சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் தொட்டபெட்டா, காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே பொது மக்களின் பார்வைக்காக...
Monday, October 14, 2013
வெற்றித்திருநகர் ஹம்பி - சுற்றுலாத்தலங்கள்!
வெற்றித்திருநகர் ஹம்பிகர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு.ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும் தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில் பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை...
Saturday, October 12, 2013
வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம் - சுற்றுலாத்தலங்கள்!
வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்சென்னை அருகே உள்ள வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டபுரம். பல்லவர்கால துறைமுக நகரம். இங்குள்ள புடைப்புச்சிற்பங்களும், கோவில்களும் உலகப்புகழ் பெற்றவை. தெய்வங்களின் உருவங்கள், புராணக்கதை காட்சிகள், சமுதாய நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.கடற்கரை கோவில்:மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும். இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.பஞ்ச...