
நடிகர் : ஆர்யாநடிகை : அனுஷ்காஇயக்குனர் : செல்வராகவன்இசை : ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்ஓளிப்பதிவு : ராம்ஜிகாதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அதில் காதலை தழைக்க வைப்பதுதான் இரண்டாம் உலகம்.தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஆர்யா. தாய் இல்லாத அவர் உடல் நிலை சரியில்லாத தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத தந்தையை மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுடன் ஆறுதலாக பழகிவருகிறார். இதே மருத்துவமனையில் டாக்டராக பணி புரியும் அனுஷ்கா இவரின் நல்ல செயல்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். தன் காதலை ஆர்யாவிடம் சொல்ல முடிவெடுக்கிறார். அதன்படி நண்பர்கள் துணையோடு ஆர்யாவிடம்...