.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, May 30, 2013

"மீண்டும் உயிர் பெற்றது!!- 400 ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து போன தாவரம்"

               கனடாவின் வடக்கு பகுதி வடதுருவத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பனி பகுதியில் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்த பனிமலைகள் தற்போது வெப்ப உயர்வு காரணமாக உருகி  தரைப்பகுதி தெரிந்தது.              அந்த இடத்தில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருந்தன. இந்த தாவரங்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு பனி உறைந்தபோது இவையும் உறைந்துபோய் இருந்தன. இதனால் இந்த தாவரங்கள் இறந்துவிட்டதாக கருதப்பட்டது.            ...

ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினர் சுட்டதால் இறக்கவில்லை ,தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக தகவல்!!!

அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலாவரும் நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் 'சீல்' படையினர் நெருங்குவதற்குள் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல்...

அறிய புகைப்படங்கள் - எவரெஸ்ட் சிகரத்தை எட்டி 60 ஆண்டுகள்'!!!

                 நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறியான சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்த உலகின் மிகவும் உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி அடைந்தார்கள்.             நியுசிலாந்தில் தேனி வளர்க்கும் தொழிலைச் செய்து வந்த சர் எட்மண்ட் ஹிலாரியும், அவரின் நேபாள ஷெர்பா டென்சிங் நோர்கேயும் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் அதாவது 29 ஆயிரம் அடி இருக்கும் இச்சிகரத்தின் மீது ஏறியது மிகப் பெறும் சாதனையாக பார்க்கப்பட்டது....

இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை - 'ரோபோ' ஜெல்லி மீன்`

                கடல் கண்காணிப்பு பணியில் 'ரோபா' ஜெல்லி மீனை ஈடுபடுத்தி இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.               அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஷசாங் பிரியா. பிளாக்ஸ்பர்கை சேர்ந்த இவர் விர்ஷினியா தொழில் நுட்ப கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் பேராசிரியராக பணிபுரிகிறார்.             இவர் தலைமையிலான குழுவினர் ரோபோ எந்திர ஜெல்லி மீன் தயாரித்துள்ளனர். 5 அடி 7 இஞ்ச் நீளமும், 170 பவுண்ட் எடையும் கொண்டது. இதற்கு சைரோ என பெயரிட்டுள்ளனர்.               ...

மொழிகள் தொடர்பான தகவல்கள் - உங்களுக்கு!

                  உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.                 உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.                 ...
 
back to top