
சரும புற்றுநோயைத் தடுக்கும்:
சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம்.
ஆஸ்துமா, அலர்ஜிக்கு:
தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்!
இளமையாக இருக்க:
தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால்,...