.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 14, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 3...!

பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம். ஒரு வித்தியாசமான உலக வரைபடம், இதில் இந்தியா, ஆப்ரிக்கா, அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளின் அமைவிடங்களை காணலாம். நவீன உலக வரைபடங்களை பார்த்த நமக்கு இந்த வரைபடம் சற்று நகைச்சுவையாக தான் தெரியும். துருக்கியர்களால் பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது போன்று இது வரையப்பட்டிருகிறது                        கி.பி 1040 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்  Isidorean mappamundi,11th century   Y-O map, from Macrobius' Commentarium in somnium, 11th century.   T-O...

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வரலாறு!

சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது....

பொருளாதாரத்துக்கான நோபல்பரிசு : 3 பேர் அறிவிப்பு!

2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் கூட்டாக பெறுகின்றனர். யூஜின் பாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். சொத்துமதிப்பை நிர்ணயிக்கும் கொள்கையை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் பரிசு ஸ்விடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இருந்து அறிவிக்கப்பட்ட...

வெற்றித்திருநகர் ஹம்பி - சுற்றுலாத்தலங்கள்!

    வெற்றித்திருநகர் ஹம்பிகர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு.ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும் தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில் பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை...

இறந்த குழந்தையை 2 நாட்கள் வயிற்றில் சுமந்த இந்தியப் பெண்- இங்கிலாந்து சோகம்!

சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்ற பொறியியல் வல்லுநர் பணிநிமித்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார். அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியைத் தாண்டி மூன்று நாட்கள் சென்றபின்னரும் அவருக்கு பிரசவத்திற்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை. மேலும், குழந்தையின் அசைவும் அவருக்குப் புலப்படவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அந்தத் தம்பதியர் உடனடியாக வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் அண்ட் சேஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள். அங்கிருந்த இடைநிலை மருத்துவப்...

ஏர்டெல், ஐடியா சர்வதேச அழைப்புக் கட்டணங்கள் விர்ர்ர்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன.ஏர்டெல் நிறுவனம், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 80% உயர்த்தியுள்ளது. அதேப்போல, ஐடியா நிறுவனம் தனது சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இந்த மாதம் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தனது சர்வதேச அழைப்புக்களின் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி விட்டது.அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செய்யப்படும் அழைப்பிற்கு நிமிடத்திற்கு ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் நிமிடத்திற்கு...

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்!

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்தது. சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக பாய்லின் புயல் தாக்குதலில் இருந்து மாபெரும் உயிரிழப்பை ஒடிசா மாநில அரசு வெற்றிகரமாக தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்கள் பாய்லின் கோரத் தாண்டவத்தால்...

‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்!

நடிகர் விஜய்க்கும் ஆட்சியாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருவது தமிழகத்துக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் என்பதற்காகவே அவருடைய சுறா, வேட்டைகாரன், காவலன் போன்ற படங்களை அன்றைய ஆட்சி முடக்கியதால், அவர் அதிமுகவிடம் சென்று சரண் அடைந்தார். பின்னர் ஆட்சி மாறியபின், அவருடைய பிறந்தநாள் அன்று நடக்க இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்து கூட்டத்தை நடத்தவிடாமல் அதிமுக ஆட்சியும் கடந்த ஆட்சி போல தொந்தரவு செய்தது. தலைவா படத்துக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்து படத்தை சிறிதுகாலம் முடக்கி வைத்தது என ஆட்சியாளர்களிடம் படாதபாடு பட்டுவந்தார் விஜய்.இதற்கிடையில் சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் என்ன பேசப போகிறார் என்பதை முன்னரே...

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்!

அடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.1. Samsung Galaxy Fame:3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.2. LG Optimus L4 II Dual: இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3.8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.3. Nokia Lumia 520:இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன். மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம்,...

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக் ஆனது தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது.இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல் பெயர்களை காட்டாதவாறு மாற்றம் செய்யும் வசதியை நிறுத்தியிருந்தது. அதே போல தற்போது இந்த வசதியினை (Search Privacy Setting) முற்றிலுமாக நிறுத்தப்போவதாக கடந்த வியாழக்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ள...
 
back to top