.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 25, 2013

முகத்தை பொலிவாக்கும் கற்றாலை ஜெல்!

அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல்  பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து  தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை..கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது....

முக அழகிற்கு சில டிப்ஸ்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறுடன் கடலை மாவு சேர்த்து தடவலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள்   இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை  காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால்,  முகத்தில் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கலாம்.முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல்   பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக...

சருமத்தில் ரோமமா? நீக்கலாம்... தடுக்கலாம்!

நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழ குத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை  நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு  சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.‘‘பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின்...

குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!

அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது. வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக...

நுகர் பொருள்களுக்கான 0% வட்டிக்கு தடை : ரிசர்வ் வங்கி அதிரடி!

    நுகர் பொருள்கள் வாங்குவதற்கு வட்டியில்லாத, அதாவது 0% வட்டிக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும், டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.பொதுவாக நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க இதுபோன்ற சலுகை திட்டங்களை அறிவிப்பதுண்டு.குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு இலவச தவணை முறையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என நிறுவனங்கள் அறிவிக்கின்றன. இதை பெரும்பாலோர் தேர்வு செய்வதுண்டு. 0 சதவிகித வட்டி என்று ஆசை காட்டி வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் சுரண்டுவதால், இதற்கும் ரிசர்வ் வங்கி புதன்கிழமை தடை விதித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு...

உடல் சூட்டை தணிக்கும் முருங்கைப்பூ!

முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும். முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல் அவிக்க வேண்டும். பின்னர் இதை பிழிந்து கொடுக்க வயிற்று வலி குணமாகும். நன்கு காய்ச்சிய பசுவின் பாலில் நாலைந்து முருங்கைப் பூக்களைப் போட்டு நாள்தோறும்- சாப்பிட்டு வந்தால் தாது நல்ல புஷ்டி பெறும். முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, பசு வெண்ணெய், ஆகியவற்றை சம அளவு...

அமேசனின் புதிய இயங்குதளத்துடன் அறிமுகமாகியது Kindle Fire HDX டேப்லட் - Amazon Kindle Fire HDX new!

 முதற்தர ஒன்லைன் வியாபார சேவையை வழங்கிவரும் அமேசன் நிறுவனம் தனது தயாரிப்பில் டேப்லட்டினை அறிமுகப்படுத்தியிருந்தமை அறிந்ததே.இந்நிலையில் தற்போது Fire OS 3.0 எனும் புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுதுடன் அதனை அடிப்படையாகக் கொண்ட Kindle Fire HDX எனும் டேப்லட்களையும் அறிமுகம் செய்துள்ளது. 7 அங்குலம் மற்றும் 8.9 அங்குல அளவுடைய தொடுதிரையுடன் கூடியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டேப்லட்களில் 2.2GHz Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியன காணப்படுகின்றன. இவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB மற்றும் 64GB ஆகிய கொள்ளளவுகளை உடைய பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.  &nb...

7-வது ஊதியக்குழு நியமனம் : பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு..!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இடையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மட்டும் விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தப்படுவது வழக்கம். இதுவரை 6 சம்பள கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக, 6வது சம்பள கமிஷன் கடந்த 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது.இது தனது அறிக்கையை கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசிடம் கொடுத்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதங்கள் உயர்த்தி வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு நிலுவை தொகை வழங்கப்பட்டது இதை...

குரங்கும்...இரண்டு பூனைகளும்- (நீதிக்கதை)

  இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன....ஆனால் அவைகளுக்குள் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன.ஒரு நாள் அப்பூனைகளுக்கு அப்பம் கிடைத்தது.அவை இரண்டும் சாப்பிட நினைத்த போது ..அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் சண்டை வந்தது.பிறகு இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணின .அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.குரங்கிடம் அப்பத்தை சமமாக பிரித்துத் தரச்சொல்ல குரங்கும் சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்தது. அப்பத்தை இரண்டாக்கி தராசின் ஒவ்வொரு தட்டிலும் அப்பத்துண்டை வைத்தது குரங்கு.தராசின் ஒரு தட்டு சற்று கீழே செல்ல,குரங்கு அந்த தட்டில் உள்ள அப்பத்தை ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை...

ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படத்தின் தலைப்பானது!

ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது. ஒரு சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி போன்ற பிரபல நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பைதான் அப்படியே புதிய படத்திற்கும் தலைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது என்று சொல்லலாம். ஆமாங்க, அதற்கு பதிலாக முந்தைய படங்களில் வரும் டயலாக்குகளை தேடிப் பிடித்து அதனை புதிய படத்திற்கு தலைப்பாக சூட்டி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் டிரன்ட். அந்த வகையில் வருத்தப்டாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது. அதாவது, பாபா படத்தில் ரஜினி பேசிய “கதம் கதம்” (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற...

பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ஃபேர்ஃபேக்ஸ் ஏற்கனவே பிளாக்பெர்ரியின் 10 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை தலா 9 அமெரிக்க டாலர் (ரூ.562) வீதம் ரொக்கமாக கொடுத்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த பங்குகளின் மொத்த விலை 470 கோடி டாலர் (ரூ.29,375 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் டொரான்டோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ஃபேர்ஃபேக்ஸ். இதன் தலைவர் பிரேம்...

நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!

நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். எனக்கு மேடையில் நடமாடுவது என்றால் பயம். ஒரு சமயம் நான் இங்கு மேடை ஏறிய போது கரண்ட் கட் ஆகி லைட் அணைந்து விட்டது. அது நான் வேண்டுமென்று செய்தது போல் பேசினார்கள்....

ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு!

ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு வகை செய்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக நந்தன்நிலகேணியை தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் கோடியில் ஆதார் அடையாள அட்டை வழங்கும்...

ஹன்சிகாவோடு டூயட் பாடும் சிவகார்த்திகேயன்!

மான் கராத்தே படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஹன்சிகா- சிவகார்த்திகேயன் ஜோடி. எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார்.மேலும் நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர்.ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர். இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.இதனைத் தொடர்ந்து...

மரத்தின் அவசியம்..(நீதிக்கதை)

ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது.எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்' என்றான் அவன்.உடனே மரம்..'என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்' என்றது.'சரி' என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் சென்றான்.பின் அவன் மரத்தையே மறந்துவிட்டான். அவன் பெரிய மனிதனாக வளர்ந்தான் .பின் ஒருநாள் மரத்திடம் வந்தான்,மரம் அவனை விளையாட அழைத்தது.'எனக்கு என் குடும்பத்தை பார்க்கவே நேரமில்லை.எனக்கு...

200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்!

திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று அறிவியல் விழப்புணர்வு கூட்டம் நடந்தது.  மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில், விஞ்ஞானிகள் பங்கேற்று வால்நட்சத்திரம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி கூறியதாவது: ஐசான் என்ற புதிய வால்நட்சத்திரம் வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ள னர். மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம், 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில்...

இந்திய சந்தையில் அமேசான் Kindle Fire HD 7 விலை குறைவு!

இந்திய சந்தையில் 7 அங்குல variant கொண்ட அமேசான் Kindle Fire HD 7 டேப்லெட் விலை குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.11,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999 ஆகும். அமேசான் Kindle Fire HD 7 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்பொழுது 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.18,999 ஆக இருந்தது. இந்த டேப்லெட் Amazon.in கிடைக்கின்றன. அமேசான் Kindle Fire HD 7 அம்சங்கள்: 1280x800 பிக்சல் காட்சி தீர்மானம், 1.2GHz dual-core புரோஸசர் மூலம் இயக்கப்படுகின்றது, இமேஜினேஷன் SGX540 GPU,395 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது,11 மணி வரை தாங்கக்கூடிய...

செயலில் கவனம்..... (நீதிக்கதை)

 ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தாள்.அவள் தன்னிடமிருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.ஒருநாள் அப்படிச் செல்லும் போது..இன்று பாலை விற்று வரும் பணத்தில்..சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன்.அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்..அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்..அது பால் கறக்கையில் சண்டித்தனம் பண்ணினால் அதை தலையில் பால் எடுத்துப் போகும் குடத்தால் இப்படி வீசுவேன்....என தன்னை மறந்து..தலையில் இருந்த குடத்தை எடுத்து வேகமாக வீச, அதில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது.குடமும்...
 
back to top