.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Monday, January 20, 2014

லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருகின்றனர் – ஆய்வில் தகவல்..!

லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் நூதனமாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.அதன்படி 5 மற்றும் 10 நாட்கள் முக சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்கள் போட்டோவை பெண்களிடம் காட்டினர். இவர்களில் உங்களை கவருபவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 351 பெண்கள் மற்றும் 177 திருநங்கைகளிடம் இதற்கு பதில் அளிக்கும்படி கோரப்பட்டது.அதற்கு 10 நாட்களாக முகச்சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்களே தங்களுக்கு பிடித்ததாக பெண்களும், திருநங்கைகளும் தெரிவித்தனர். 5 நாள் தாடி வளர்த்து இருந்த ஆண்களை பிடித்ததாக மிக குறைந்த அளவிலான பெண்கள் கருத்து கூறியிருந்தன...

Thursday, January 16, 2014

இந்திய இணைய இணைப்பு வேகம்..!

இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா பிட்ஸ் வேகம் தரும்.இந்தியாவில், 49Mbps வேகத்தில் டவுண்லோட் செய்திட முடியும் என்பதே ஆச்சரியமான ஒரு தகவலாகும். இருந்தாலும், உலக அளவில், அதன் சராசரியான வேகத்துடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவான ஒன்றாகும்.ரிலையன்ஸ்...

மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் ..!

மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம்  அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்தையும் பிடித்தனர்.பிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' நாளிதழ் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர் பற்றி கருத்து கணிப்பு நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.30 பேர் அடங்கிய...

Tuesday, January 7, 2014

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?

புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும்...

Sunday, January 5, 2014

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.பெருமளவில் வளர்ந்து வரும்...

எகிறும் பெட்ரோல், டீசல் விலை மாற்று எரிபொருளாக எத்தனால் வருமா?

ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துபவர்களாக இருந்தால் எரிபொருளுக்கென தனியாக பட்ஜெட் போட்டு முன் கூட்டியே சேமிக்க பழகி விட்டனர். மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமாக டீசல் விலை உயர்வு அமைந்து விடுகிறது.கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு...

Friday, January 3, 2014

செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும்,...

Sunday, December 29, 2013

உருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்!

ஜனாதிபதி என்றாலே…நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.இவர் தன மாதாந்திர சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவை சமாளித்து வருகிறாராக்கும்!உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா (77). ஜனாதிபதிக்கு அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர் வாழ்ந்து...

Wednesday, December 25, 2013

மார்கரட் விட்மேன் - இவரைத் தெரியுமா?

$ ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. $ இதற்கு முன்பு ஆன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். $ இவர் பணியில் சேரும்போது 4 மில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் வருமானம், 2008-ம் ஆண்டில் வெளியேறும் போது 8 பில்லியன் டாலராக உயர்ந்தது. $ இ-பே தவிர, புராக்டர் அண்ட் கேம்பிள், பெய்ன் அண்ட் கம்பெனி, வால்ட் டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். $ இவருக்கு அரசியல் ஆசையும் இருக்கிறது. 2009-ம் ஆண்டில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். $ ஹார்வேர்ட் பிஸினஸ் ரெவ்யூ, ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளின் சிறந்த சி.இ.ஓ. பட்டியலில் இடம்...

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்...?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நிலையில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும்...

Tuesday, December 24, 2013

50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்!

பாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது.Free...dom Ship என்ற பெயருடைய இந்தக் கப்பல் மிதக்கும் உலகம் என அழைக்கப்படுகிறது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் ஆடம்பர வர்க்கத்தினருக்காக இவ்வாறானதொரு கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து உலகத்தை சுற்றி வரவுள்ளதாக Freedom Ship இன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் 25 அடுக்கு மாடிகள் உண்டு. இங்கு குடியிருக்கும் 50 ஆயிரம் பேருக்கு மேலதிகமாக 30 ஆயிரம் விருந்தினர்கள் பயணிக்கக் கூடிய வாய்ப்பையும்...

நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!

21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்! அதிலும் தென்னாட்டிலிருந்தே மிகச்சக்தி வாய்ந்த ஆட்சி அமையும்!- நாஸ்ட்ரடாமஸ்(Nostradamus)இவருடைய 500 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற தீர்க்க தரிசனம் நிறைவேறுமா?!இவரைப் பற்றிச் சில தகவல்கள்.நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் ( Nostradamus )..!இந்தியர்களில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர்.அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்;...

Monday, December 23, 2013

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்?

1.டச்சு கயானா --- சுரினாம்.2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ3.அபிசீனியா --- எத்தியோப்பியா4.கோல்டு கோஸ்ட் --- கானா5.பசுட்டோலாந்து --- லெசதொ6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா7.வட ரொடீஷியா --- ஜாம்பியா8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்11.சாயிர் --- காங்கோ13.சோவியத்யூனியன் --- ரஷ்யா14.பர்மா --- மியான்மர்15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்16.சிலோன் --- ஸ்ரீலங்கா17.கம்பூச்சியா --- கம்போடியா18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்19.மெஸமடோமியா --- ஈராக்20.சயாம் --- தாய்லாந்து21.பார்மோஸ --- தைவான்22.ஹாலந்து --- நெதர்லாந்து23.மலாவாய் --- நியூசிலாந்து24.மலகாஸி --- மடகாஸ்கர்25.பாலஸ்தீனம்...

Wednesday, December 18, 2013

ஓர் வரலாற்று அதிசயம்...?

இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம். எகிப்தின் பிரமிட்டுக்கள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் இது இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகின்றது. வரலாற்றில் பல சமூகங்களும் இப்பணியில் குறிப்பிடத்தக்களவு பங்கு கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களால் பல...மில்லியன் கணக்கான மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டு இச்செயற்றிட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.அதிகபட்டசம் ஒவ்வொன்றும் 4 டன்    எடையுடைய 82 வரையான நீல பளிங்கு கற்கள் ஏறக்குறைய 240 மைல்களுக்கு...

Monday, December 16, 2013

மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்!

உலகின் மிகப் பெரிய மம்மி கண்காட்சி லாஸ் ஏஞ்சலில் உள்ள கலிபோர்னியா அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன.கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் மம்மிக்கள் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கண்காட்சியில் மொத்தம் 140 மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன,இம்மம்மிக்கள் 7 நாடுகளிலுள்ள 20 அரும்பொருள்காட்சியகங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.விஞ்ஞானிகள் முதல் முறையாக மம்மியில் டி.என்.ஏ ஆய்வு மற்றும் ஸ்கேனிங் செய்து அவை எவ்வகை திரவங்களால் உடல் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது எனும் கடும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின் மூலம் அந்த குறிப்பிட்ட மம்மியின் வயது மற்றும் இறப்பிற்கான காரணம் பற்றி அறியலாம்.மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்* ஒரு இறந்த உடல் பாடம் (மம்மி) செய்யப்பட்டால் அதன் பிறகு அந்த உடல் அழுகுவது தடுக்கப்படுகிறது....

Saturday, December 14, 2013

சஹாரா கண்...

சஹாரா கண்... மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம்ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது.... கண் போன்று தோன்றுவதால்,சஹாரா கண்என்ற பெயர் அதற்கு வந்த...

ஸ்பாட்டட் லேக்...

ஸ்பாட்டட் லேக்... கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி   தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும்உள்ளேயே தங்கி விடுமாம். இதன் காரணமாக, நல்ல சீசன் காலத்தில், ஏரித்தண்ணீரில் மின்னலாய் காணப்படும் புள்ளிகளாலேயே ஏரிக்குஸ்பாட்டட் ஏரி என்று பெய...

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!

திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த...

Tuesday, December 10, 2013

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள் 10). மெக்ஸிக்கோ:பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும். 9). ஸ்பெயின் இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 1.223.988.000.000 மற்றும் GNI அளவு சதவீதம் 2% ஆகும். 8). கனடா:கனடாவின் GNI தொகை $ 628.000.000.000 உள்ளது மற்றும் GNI தொகை $ 1.251.463.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் 2.3% ஆகும். 7). இத்தாலி: இந்த நாட்டின் $ 1.120.000.000.000 GNI அளவு மற்றும் 3.7% என்ற GNI தொகை சதவீத $ 1.844.749.000.000 கொண்டிருக்கிறது.6). சீனா: GNI தொகை $ 1.130.000.000.000...

Monday, December 9, 2013

கண்டங்களின் பெயர்ச்சி....

எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை.எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.1.முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும்....
 
back to top