.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

விஜய் சேதுபதியின் '' வசந்தகுமாரன் '' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதியின் வசந்தகுமாரன் ஃபர்ஸ்ட் லுக்..! கோலிவுட்டின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாரான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் வசந்தகுமாரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.ஸ்டுடியோ 9 தயாரித்துவரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்துவருகிறார். ஆனந்த்குமார் இப்படத்தினை இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயனண் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி திரைப்படம் ஜனவரி 24லிலும், பண்னையாரும் பத்மினியும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதியும் வெளியாகவுள்ளன.விஜய் சேதுபதி தற்பொழுது ஆர்யா மற்றும் ஷ்யாமுடன் புறம்போக்குபடத்திலும், இடம் பொருள்...

சூர்யாவின் அஞ்சான்..!

சூர்யாவின் அஞ்சான்..! சூர்யா- லிங்குசாமி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. சிங்கம் -2 படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்துவருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு மன்னார் அல்லது ராஜு பாய் என்று தலைப்பிடப்படலாம் என்று வதந்திகள் பரவிவந்தன. மேலும் இப்படத்தின் டைட்டிலை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துவந்தது. முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுபோல இப்படத்தின் டைட்டில் நேற்று...

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார். ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது. நம்பியார் ட்ரெய்லர்..! இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது....

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன் நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த...

விஜய்க்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!

முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார்.கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது.இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அத்துடன் சென்னை மற்றும் கோவை உரிமையும் விஜய் பெறவுள்ளார் (அந்த உரிமை சுமார் 45கோடி வருமாம்).ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸோ விஜய்யை காட்டிலும் அதிகம் சம்பளத்தை கேட்டு பெற்றிருக்கிறாராம். அதாவது...

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் எம்.ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் அறிமுகமானார். அறிமுகப் படமே அட்டகாசமான வெற்றியைத் தந்ததால், அப்படத்திற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.சசிக்குமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது கதிர்வேலன் காதல். உதயநிதி ஸ்டாலினுக்கும் இது இரண்டாவது...

கணினியில் இருந்து கண்களைக் காக்க ..!

கணினியில் இருந்து கண்களைக் காக்க..! கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ... 1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும். 2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில்...

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..   இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.  ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால்,...

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!   இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்…..• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே...

சிவகார்த்தி கேயனைவிட நான் மட்டமா என்ன..? – தயாரிப்பாளரிடம் சீறித்தள்ளிய ஜீவா..!

கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்..புகழடைய வேண்டும்..! என்பதே சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு லட்சியமாக இருக்கும்.ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜீவா நடிகரானதற்கு இவை எதுவுமே காரணமாக இல்லை போலிருக்கிறது.அவரைப் பற்றி காதுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் சொல்வதென்றால்…முன்னணி கதாநாயகிகளை கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஒரே காமத்தினால்… ஸாரி…காரணத்தினால்தான் இவர் கதாநாயக நடிகரானாரோ என்றே நினைக்கத்தோன்றுகிறது.இப்படி சொல்லுமளவுக்கு என்ன நடந்தது?‘ஆசைஆசையாய்’ படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே ஜீவாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறது.அவரிடம் கதை சொல்லப்போகும் இயக்குநர்களிடம், கதை என்ன, சம்பளம் என்ன என்ற கேள்விகளுக்கு முன் ஜீவா கேட்கும் ஒரே கேள்வி… ‘ஹீரோயின்...

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..! பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.  * இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  * ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு...

``விடியும் வரை பேசு`` - திரைவிமர்சனம்

கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு...

கமல்ஹாசனுடன் நடிகராகிறாரா லிங்குசாமி..?

விஷ்வரூபம் -2 படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் லிங்குசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.ஒரு இயக்குனராக தொடர் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமி சமீபமாகப் பல படங்களைத் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இயக்குனர், தயாரிப்பாளர் என்ற தனது அடையாளங்களைத் தாண்டி, கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் ஒரு நடிகராகவும் மாறுவார் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம் உத்தமவில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.இயக்குனர்...

முஸ்லிம்கள் தொப்பி, பர்தா அணிந்து படமெடுத்தால் அடையாள அட்டை இல்லை...!

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். (13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும்...

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..!

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..! இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக...

இருநூறு ப்ளஸ் கோடி...

இனி அந்த பருப்பு வேகாது. 2013ம் ஆண்டு அதை சுத்தமாக மாற்றிவிட்டது. யெஸ், இனி நூறு ப்ளஸ் கோடி வசூலை எந்தப் படம் கடந்தாலும் அது சுமாரான வெற்றிதான். எந்தப் படம் குறைந்தது 200 ப்ளஸ் கோடியை கடந்து கல்லாவை நிரப்புகிறதோ அதுவே சூப்பர் ஹிட் மூவி. இதை ஆரம்பித்து வைத்தப் புண்ணியம் ஷாருக் கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை சாரும். இதை உறுதிப்படுத்திய பெருமை சென்ற ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3ஐ போய்ச் சேரும். நம்புங்கள் ஸ்வாமி, முதல் மூன்றே நாட்களில் தூம் 3 நூறு ப்ளஸ் கோடி ரூபாயை வசூலில் கடந்துவிட்டது. அதுவும் இந்தியத் தாய்த் திருநாட்டில் மட்டும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்றெல்லாம் நரம்பு புடைக்க சவுண்ட்...

ரசிகர்கள் கொடுத்த வெற்றி - விஜய் நெகிழ்ச்சி

 விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படம் 10ம் தேதி ரிலீசானது. இப்படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது விஜய் பேசியதாவது:பொதுவாக நான் படத்தின் வெற்றி சந்திப்புகளில் கலந்துகொள்வது இல்லை. என்றாலும், ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்காக இதில் கலந்துகொண்டேன். என் நண்பர்கள் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு சென்று, அங்கு எடுத்த வீடியோ காட்சிகளை எனக்கு காட்டினார்கள்.  அதில் என் ரசிகர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர் வாசலில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதை பார்த்து நெகிழ்ந்தேன். படத்துக்கான நல்ல ஓப்பனிங்கும், வெற்றியும் அவர்கள் கொடுத்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள்...

அதுதான் நல்ல நட்பு ..! -

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான் .அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் >இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல் அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது . கிளியின் பரிவை கண்ட தெய்வம்...

என்றும் பாகற்காய்! எதிலும் பாகற்காய்!...

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத்...

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக..? எச்சரிக்கை..!

நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா? நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது. பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல...

‘ஜில்லா’வில் மாற்றம்..?

ஜில்லா படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட 10 நிமிட காட்சி குறைக்கப்பட்டுள்ளது. இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான். நேற்று படம் பார்த்த பல ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளத்தை தற்போது 10 நிமிடம் குறைத்துள்ளனர். நீளம் குறைக்கப்பட்ட படம் இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது. ...
 
back to top