.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 1, 2014

பழங்களின் நிறங்களும், குணங்களும்...

இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின்...

உடல் எடையை குறைக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்...!

இன்றைய நவீன உலகில் உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு நமது உணவுப்பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை தான் காரணம். ஆனால் "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப, உடல் எடையையும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களாலேயே குறைக்கலாம். என்ன அது எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம், முதலில் உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தால், இந்த உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் நிச்சயம் குறைத்து, உடலைச் சிக்கென்று வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க முடியும். இதை சிலர் நம்பமாட்டீர்கள். நம்பாதவர்களுக்கு கிரீன் டீ, நடைப்பயிற்சி என்று ஏதாவது ஒரு செயலைக் குறிப்பிட்டு செய்தால் குறையும் என்று...
 
back to top