
ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சிறுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார் அந்த தந்தை. கொஞ்ச நாளில் அந்த சுவர் முழுசும் ஆணிகளால் நிரம்பியது. அதை பார்த்த சிறுவனுக்கு தனது குற்றம் என்ன என்று புரிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நின்றான். அவனாக தந்தையிடம் அப்பா. நான் இனி கோபப்பட மாட்டேன்,...