
தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..! "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..."... "எப்ப தூக்கம் வரும்பா?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு எங்கப்பா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏம்பா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக்...