
ஆசியாவிலேயே மாபெரும் சூரிய மின் சக்திப் பண்ணை 5,000 ஏக்கர் கரட்டுநிலத்தில் “”சாரங்க பூங்கா” என்ற பெயரில் குஜராத்தில் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 500 மில்லியன் வாட் (மி.வா.) மின் உற்பத்தி, இதர மாவட்டங்களில் 105 மி.வா., ஒட்டுமொத்தமாக குஜராத்தில் 605 மி.வா. என்பது ஒட்டுமொத்த இந்திய சூரிய மின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு.ஒவ்வொரு நாளும் குஜராத் மாநிலத்தில் 30 லட்சம் வாட் மாசற்ற மின்சக்தி, சூரியஒளி மூலம் பெறப்பட்டு 10 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன் அளவில் “கார்பன்-டை-ஆக்சைடு’ புகை, ஓசோன் மண்டலத்தை அடையாமல் பாதுகாக்கப்பட்டு அதற்குரிய “கார்பன் கிரெடிட்’ பெற்றுவர முயன்று வருகிறது.குஜராத்தின் தலைநகரமான...