
சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும். உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது?...