.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, August 25, 2013

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!     ஜேர்மனியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜேர்மன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு 100,000 மக்கள் உயிரிழக்கின்றனர்.இதனையடுத்து பிரெஞ்சு நோல் என்னும் தொழில்நுட்ப குழுவானது இந்த ஆளில்லா விமானத்தை கண்டுபிடித்துள்ளது.அவசர ஊர்தியை விட இந்த விமானமானது மிக வேகமாக பறக்கும் தன்மை கொண்டது.அதாவது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளியை அவசர ஊர்தியில் ஏற்றிச்செல்வதற்கு பதிலாக இந்த விமானத்தில் ஏற்றிச்சென்றால் மிக வேகமாக மருத்துவமனையை நெருங்கி விடலாம் என்று கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த விமானத்தின் விலையானது 20,000...

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்!

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்! பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர் பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக்கின் எனப்படும் ஊடுருவலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கணணி நிபுணர் கலீல் ஷ்ரியாதே ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும் யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளமை பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.ஆனால் அதை ஃபேஸ்புக் குழு அவதானத்தில் கொள்ளவில்லை.வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசுகளை வழங்குவார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம்...

கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!

கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்! கூகுள் நிறுவனம் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் சேவைகளில் இருக்கும் செக்கியூரிட்டி குறைபாடுகளை கண்டுபிடித்து தகவல் குடுப்பவர்களுக்கு 5000 டாலரை பரிசாக தர உள்ளது. அதாவது கிட்டதிட்ட 3,21,675 ரூபாய் பரிசாக வழங்கப்படும். டெக்கனாலஜியில் அதிகம் திறமை உள்ளவர்கள் கூகுள் சேவைகளில் உள்ள பக்ஸ்களை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்து பரிசை வெல்லாம். ஒவ்வொரு பக்ஸ் ரிப்போர்ட்டுக்கும் பரிசு தனித்தனியாக உண்டு.  கூகுள் நிறவனம் இதுவரை கிட்டதிட்ட 13கோடிகளை பரிசாக வழங்கியுள்ளதாம். சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் உலகின் முன்னனி நிறுவனமான மைக்கிரோஷாப்ட் போன்றைவைகளும் இது போன்ற பரிசுகளை ஏற்கனவே அறிவித்துள்ளன....

ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8!

ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8! ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.ஜெர்மனியின் பெடரல் ஆபீஸ் இன்பர்மேஷன் செக்கியூரிட்டி அமைப்பு கடந்த புதன்கிழமை தனது வெப்சைடில், ஜெர்மனியின் பெடரல் அரகசாங்க ஏஜென்சி இந்த பிரச்சனைக்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்ந பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் வின்டோஸ்8 கம்பியூட்டரில் டிரஸ்டெட் பிளாட்பார்ம் மாடியூல் (Trusted Platform Module) என்ற சிப் உள்ளது. இது கம்பியூட்டரின் பாதுகாப்புக்காக வின்டோஸ்8 உடன் இணைக்கப்பட்டுள்ளது.  வின்டோஸ்8 மற்றும்...

உலகிலுள்ள ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து சாதித்த முதல் இந்தியப் பெண்!

உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.அந்த சாதனையைத் தற்போது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால் ஏறி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால். ஜாம்ஷெட்பூரில் வாழ்ந்துவரும் இவர், 13 வருடங்களுக்கு முன்னால், தனது 35 வயதில், மேற்கு வங்கத்தில் உள்ள தல்மா மலையேறக் குழுவினருடன் இணைந்தார். இந்த மலையேற்ற நிகழ்ச்சி மூலம், தார் பாலைவனத்தில் நடத்தப்படும் ஒட்டகங்களின் சாகசப்பயணம் பற்றி அறிந்து, அதில் பங்குகொண்டார். இதற்குப்பின்னர், ஆப்பிரிக்காவின் ஏழு இயற்கை அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும், கிளிமாஞ்ஜெரோ சிகரத்தை அடையும்...

உலகம் அழியும் போது அழியா வரம் பெற்ற அதிசய பூச்சி

                 இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழியும். உயிரினங்கள் அனைத்தும் அழியும் நேரத்தில் மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழும். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும்...

ஒரே கடிதத்தில் ‘நாசா’ வை கலக்கிய சிறுவன்!

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், வருங்காலத்தில் தான் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென ‘நாசா’ மையத்திற்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார். 7 வயது சிறுவன் டெக்ஸ்டர், இவருக்கு வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகவேண்டுமென்பதுதான் லட்சியம். இது தொடர்பாக இவர் அண்மையில் அமெரிக்காவின ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். விண்வெளி வீரராகவேண்டுமென்ற ஆர்வத்தை பாராட்டி ‘நாசா’ மையம் இந்த சிறுவனின் கடிதத்திற்கு ஒரு பதிலையும், விண்வெளி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.நாசாவிற்கு எழுதிய கடித்தத்தில், அச்சிறுவன், ‘‘அன்புள்ள நாசா, எனது பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு 2 பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன்....

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.வெள்ளை நிற உடையில், மிகவும் பிரகாசமான இறக்கையுடன் கூடிய உருவம் மேலிருந்து சடாரென கீழே வந்து சாலையில் இறங்கி பின்னர் அதே வேகத்தில் பறந்து போய் விடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது. இது தேவதைதான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கிராபிக்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று...

குழந்தையின் உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம் (பரபரப்பு காணணொளி)!

 உலகில் எத்தனையோ விசித்திரங்கள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புலப்படுவது ஒரு சிலதே.  உயிரினங்கள் அனைத்துங்கும் இதயம் உள்ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப்பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்கள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காணமுடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத்தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று சொல்லித்தான் புரியவேண்டுமா  என்ன.இந்தியாவில் பிறந்துள்ள ஒரு குழந்தைக்கு இதயதம் உடலுக்கு வெளியே அமைந்துள்ளது அனைவரையும் கடந்த காலங்களில் மட்டுமன்றி...

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு!

 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன. அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது. இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார். இதன்...

புதைத்து 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பிய பெண்!

 அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகில் உள்ள ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்திருந்த போலீசார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர். விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம்...

பால்வெளியில் பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள்!

குறைந்தது பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு பூமியியைப் போன்ற ஒரு கிரகம் கண்டறியப்படுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க ஆய்வு மையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர். இதில் எமது பால்வெளியிலுள்ள 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியின் அளவான, குறைவான சுற்றுப் பாதை கொண்ட கிரகங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்...
 
back to top