.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 9, 2014

உங்களுடைய ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

உங்களுடைய  ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..? இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு...

பெண்களே..! எச்சரிக்கை..!

பெண்களுக்கு சின்ன, சின்ன டிப்ஸ்… தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்பாராமல் ஏற்படும் நிலைமையை சமாளிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன விசயங்களை பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் யாருடைய உதவியும் இல்லாமல் தானே நிலைமையை சமாளிக்க முடியும். * அவசரத் தேவைக்கு போலீஸ், தீயணைப்பு மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். * செல்போனில்தான் எல்லாருடைய எண்ணும் உள்ளதே என்று எண்ணாமல், உங்கள் கணவர், நெருங்கிய உறவினர் அல்லது நண்பர், அண்டை வீட்டுக்காரரின்தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். * எதேனும்...

இவ்வளவுதான் நம்ம..?

இவ்வளவுதான் நம்ம..?  1. நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது உங்கள் மூளை 25 வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும் திறன் பெற்றது, இது ஒரு பல்பை ஒளிரச் செய்யப் போதுமான அளவு மின்சாரம் ஆகும். 2. நாக்கின் ரேகை மனிதனுக்கு மனிதன் வேறுபடும். 3. ஒவ்வொரு நாளும் நமது உடம்பு 300 பில்லியன் செல்களை உற்பத்தி செய்கிறது. 4. மனித மூளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை உள்ளடக்கியது. 5. தைராய்டு குருத்தெலும்பு பொதுவாக ஆடம்ஸ் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது. 6. குழந்தைகள் வசந்த காலத்தில் வேகமாக வளர்கின்றன. 7. சராசரியாக மனித இதயம் அதன் வாழ்நாளில் 3,000 மில்லியன் முறை துடிக்கிறது. 8. உங்கள் உடலில் உள்ள எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு எலும்புகள் உங்கள்...

வந்தாச்சு கேப்ஸ்யூல் பேபி..!

'கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே...’ என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் வகையில் மருத்துவ அறிவியலும், ஆராய்ச்சியும், டெக்னாலஜியும் படுவேகமாக வளர்ந்து நம்மை வியக்கவைக்கின்றன.கருத்தரித்தலில் பிரச்னை உள்ள தம்பதிகளுக்கு, ஐ.யு.ஐ., ஐ.வி.எஃப். போன்ற செயற்கைக் கருவூட்டல் முறைகள், இப்போது வரப்பிரசாதமாக உள்ளன. இதில், ஐ.வி.எஃப். சிகிச்சைக்கான கட்டணம் சில லட்சங்கள். சிகிச்சை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் குறைவுதான். ஓரிரு தடவை ஐ.வி.எஃப். முறையில் சிகிச்சைக்கு முயற்சித்தும், குழந்தை பெறாதவர்களும்கூட உள்ளனர். தற்போது ஐ.வி.எஃப். சிகிச்சையின் கட்டணத்தை மூன்றில் ஒன்றாகக் குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஈரோட்டைச் சேர்ந்த மாருதி மருத்துவமனை...

காளிபிளவர் மொச்சை மசாலா...

காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  செய்யத் தேவையானவை காளிபிளவர் - ஒரு பூ மொச்சைக் கொட்டை - 100 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - அரை கப் செய்யும் முறை மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுத்தப்படுத்தி, தேவையான அளவுக்கு...

இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசையா?

தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ எனப் பக்கத்தைப் புரட்டாதீர்கள். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள்’ என்கிற பார்வை உங்களுக்கு  இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா? “முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம்” என்கிறார்  ‘நேச்சுரல்ஸ் டபிள்யூ’ உரிமையாளர் வீணா குமாரவேல். இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசைப்படுவோருக்கு அவரது ஆலோசனைகள் நிச்சயம்  உதவும். ‘‘நமது...

‘தல’ - வாழ்க்கை வரலாறு!

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு...

சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்..!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் “யங் சயின்டிஸ்ட் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் சோலார் பைக்கை சோதனை செய்து ஆராய்சிக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராஜேஷின் எதிர்கால லட்சியம்...

இரண்டாவது இடம் இந்திய பெண்கள் ...?

உலகில் அதிகஅளவு சிகரெட் குடிக்கும் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியிலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்கா மெடிக்கல் அசோசியேன் சிகரெட் புகைப்பவர்கள் குறித்து (1980-2012) வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் தற்போது சிகரெட் புகைப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட அதிகமாகும். இந்தியாவில ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2 ஆகும். கடந்த 1980 இல் இந்தியாவில் புகை பிடித்த ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது தற்போது 2012 ன்படி 23 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆய்வில் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1980 இல் 721 மில்லியனாக இருந்த சிகரெட் புகைப்பவர்களின்...

ரிலீஸாகுமா ஜில்லா?

ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் , தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன். படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது....

பகீரதா - ஜில்லா நிலமை என்ன?

ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் , தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன். படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர்...

கசக்கும் வேம்பின் இனிக்கும் நன்மைகள்....!

வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும்...

வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை!

வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற உத்தரவை ஜனவரி மாதம் முதல் அமலாக்கப் போவதாக, வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம். இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும் மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான தனி அமைப்பாக ஒழுங்கு விதிமுறை...

தயாரிப்பில் குதிக்கும் ஹீரோக்கள் பட அதிபர்கள் ஷாக்..!

கோலிவுட் ஹீரோக்கள் திடீரென்று தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதால் பட அதிபர்கள் ஷாக் ஆகி உள்ளனர். நடிப்பது ஹீரோக்கள் வேலை, படம் தயாரிப்பது தயாரிப்பாளர்களின் பணி என்ற நிலை மாறி நடிப்பதும், படம் தயாரிப்ப தும் ஹீரோக்களின் பணி என்றாகி விட்டது. நடிகர் தனுஷ் சொந்த பட நிறுவனம் தொடங்கி ‘எதிர்நீச்சல்‘ என்ற படத்தை தயாரித்தார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார்.  அடுத்து ‘வேலையில்லா பட்டதாரி‘ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார் தனுஷ். அதேபோல் விஷால் சொந்த நிறுவனம் தொடங்கி ‘பாண்டியநாடு‘ என்ற படத்தை தயாரித்து நடித்தார். அடுத்து ‘நான் சிகப்பு மனிதன்‘ என்ற படம் தயாரித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா சொந்த பட தயாரிப்பில்...

ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. 3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம். 4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது. 5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. 6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண் டாம். 7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. 8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்...
 
back to top