
திரையுலகை பொறுத்தவரை ஏதாவது ஒரு ஜோடி முதன் முறையாக இணைந்து நடித்து அந்த படம் வெற்றி பெற்றால் சொல்லவே வேண்டாம்.
உடனே அந்த ஜோடிக்கு ராசியான ஜோடி என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதோடு நில்லாமல் மீண்டும் அந்த ஜோடியை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கங்கனம் கட்டிகொண்டு வருவார்கள். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்து பட்டித் தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றிய ”பொன்ராம்” இயக்கியிருந்தார்.
இந்த வெற்றியைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யாவை ஜோடியாக்கி மீண்டும் ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார்களாம்....